நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு கடந்த திங்கட்கிழமை (ஜூலை 25) பதவியேற்றார். பதவியேற்ற பின் குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் 'ஜோஹர்' எனக் குறிப்பிட்டு முதல் பதிவிட்டார். பழங்குடியின சமூகத்தில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
'ஜோஹர்' என்றால் 'வணக்கம் மற்றும் வரவேற்பு' என்று பொருள். ஜார்க்கண்ட் பழங்குடி சமூகம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளில் இது பயன்படுத்தப்படுகிறது. ஜார்க்கண்ட் பழங்குடியின தலைவர்கள் கூறுகையில், ஒருவருக்கு மரியாதை செலுத்த பயன்படுத்தும் சொல் என்றும் கூறுகின்றனர். பழங்குடி சமூகத்தினர் இயற்றை வழிபாட்டாளர்களாகவும், சர்னா மதத்தை பின்பற்றுபவர்களாகவும் உள்ளனர். இருப்பினும் இந்த மதம், அதிகாரப்பூர்வ மதமாக கருதப்படுவதில்லை.
அனைத்து பழங்குடி சமூகங்களும் ‘ஜோஹர்’ பயன்படுத்துகிறார்களா?
ஜார்க்கண்டில் 32 பழங்குடி சமூகங்கள் வெவ்வேறு பேச்சுவழக்குகளை கொண்டிருக்கின்றன. பழங்குடி கிறிஸ்தவர்கள் உள்பட கிட்டத்தட்ட அனைவரும் மரியாதை செலுத்த 'ஜோஹர்' என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர். சிலர் இந்த வார்த்தையுடன் வேறு வார்த்தைகளை சேர்த்து பயன்படுத்துகின்றனர். சந்தாலி, முண்டா மற்றும் ஹோ சமூகத்தில் இந்த வார்த்தை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஓரான் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஜோஹரைத் தவிர, ‘ஜெய் தரம்’ என்ற வார்த்தையையும் பயன்படுத்துகின்றனர்.
'டோபோ ஜோஹர்' மற்றும் அதன் சடங்கு
பழங்குடி சமூகத்தில் பெரியவர்கள், சான்றோருக்கு நான்கு வகையில் மரியாதை செலுத்தப்படுகிறது. அதில் ஒன்று
'டோபோ ஜோஹர்'. பழங்குடியினர் ஆலோசனைக் குழுவின் (டிஏசி) முன்னாள் உறுப்பினர் ரத்தன் டிக்ரே கூறுகையில், " 'டோபோ ஜோஹர்' செய்வதில் சடங்கு உள்ளது. மரியாதை செலுத்துபவர் பெரியவர் முன் டம்ளரில் தண்ணீர் வைத்து தோன்றி அவர் முன் குனிந்து வணங்க வேண்டும்.
குனிந்து பூமியைத் தொட்டு எழுவர். அவருக்கு மற்றவர் டம்ளரில் உள்ள தண்ணீரைக் கொண்டு கைகளை கழுவி, சிறிது தொட்டு நீரை பூமியில் தெளிப்பர். இது ஒருவகை மரியாதை செலுத்தும் முறையாகும். இவ்வாறு செய்கையில் அவரின் மரியாதையை பெரியவர் ஏற்றுக் கொண்டதாக அர்த்தம் கொள்ளப்படுகிறது" என்று கூறினார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம்ஆப்பில் பெற https://t.me/ietamil