/tamil-ie/media/media_files/uploads/2021/03/Mukesh-ambani.jpg)
Explosives found outside Ambani residence : மும்பை தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி அவரின் வீட்டிற்கு முன்பு 20 ஜெலட்டின் குச்சிகளுடன் கார் ஒன்று இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிகழ்வு நடந்து மூன்று நாட்களான பிறகும் மும்பை குற்றவியல் பிரிவு கீழ் செயல்படும் 10 குழுக்கள் நடத்தி வரும் விசாரணையில் எந்தவிதமான முன்னேற்றமும் காணப்படவில்லை.
டெலகிராம் சேனல் ஒன்றில் இந்த குற்றத்திற்கு ஜெய்ஷ்-உல்-ஹிந்த் என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றதாக கூறப்பட்டது. பின்பு அந்த சேனல் நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறது என்று காவல்துறை தரப்பு கூறுகிறது.
காவல்துறையினர் இந்த தகவல் உண்மையானதா என்பதை ஆராய்ந்து வருகின்றனர். கடந்த மாதம் டெல்லியில் இருக்கும் இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகே நடைபெற்ற சிறிய அளவிலான குண்டு வெடிப்பிற்கும் இந்த அமைப்பு பொறுப்பு கூறியது. காவல்துறை தொழில்நுட்பம் குழுவினர் வைத்து பொறுப்பேற்கும் புகைப்படம் எங்கிருந்து பதிவேற்றப்பட்டது என்பதை ஆராய்ந்து வருகிறார்கள்.
கார்மைக்கேல் சாலையில் உள்ள அம்பானி இல்லமான ஆன்டிலியாவுக்கு வெளியே 20 ஜெலட்டின் குச்சிகளைக் கொண்ட ஸ்கார்பியோ பிப்ரவரி 17 ஆம் தேதி இரவு விக்ரோலியில் உள்ள கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் இருந்து திருடப்பட்டுள்ளது. பின்னர் தானேவுக்கு முதலில் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் கருதுகின்றனர்.
வாகன திருட்டு குறித்து மும்பை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர், மேலும் அது தானே நோக்கி இயக்கப்பட்டதற்கான சிசிடிவி காட்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், சி.சி.டி.வி கேமரா நெட்வொர்க்கில் உள்ள இடைவெளிகளால் தானே செல்லும் வழியில் உள்ள புறநகரான முலுண்டிற்கு அப்பால் அதன் பயணம் குறித்து அவர்களால் அறியமுடியவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க : கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் மோடி : ட்விட்டரில் வெளியான புகைப்படம்
இந்த சம்பவத்தின் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு வாகனத்தைத் திருடியவர்களின் அடையாளம் முக்கியமானது என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர். சி.சி.டி.விகள் இல்லாத காரணத்தால் ஏரோலி பாலம் அருகே உள்ள கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் இருந்து இந்த கார் திருடப்பட்டதை உறுதி செய்வது சவாலானதாக உள்ளது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
அப்பகுதியில் போதுமான விளக்குகள் இல்லாதது ஒரு பிரச்சனையாக உள்ளது. ஒரு கார் சென்று கொண்டிருக்கிறது என்றாலும் அதனை யார் ஓட்டிச் செல்கிறார் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் சவாலானதாக உள்ளது. ஆனாலும், அந்த கார் முலுண்ட் வரை சென்றுள்ளது என்பதை நாங்கள் உறுதி செய்ததால் அது தானேவிற்கு சென்றிருக்கூம் என்று நம்புகின்றோம். மும்பை மாநகருக்கு வெளியே சி.சி.டி.வி. பயன்பாடுகள் மிகவும் குறைவு என்பதால் அந்த காரை முலண்டிற்கு பிறகு கண்காணிக்க இயலவில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.
தானேவில் இருந்து மும்பைக்கு இந்த கார் மீண்டும் வந்த போது துணையாக ஒரு வெள்ளை நிற இன்னோவாவும் வந்தது என்று கூறப்படுகிறது. பின்பு இந்த இரண்டு கார்களும் அண்டிலியாவிற்கு சென்றுள்ளது. அங்கே ஸ்கார்பியோவை நிறுத்திய பிறகு அந்த வண்டியின் ஓட்டுநர் இன்னோவாவில் ஏறி சென்றுவிட்டார். அவர்கள் பிவண்டி - நாசிக் சாலையில் பயணித்தனர்.
இதில் தொடர்புடையவர்கள் தொழில்முறை வல்லுநர்களாக இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். ஏன் என்றால் ஸ்கார்பியோவை நிறுத்திய பிறகு, பின்பக்கமாகவே வெளியேறி இன்னோவாவில் ஏறியுள்ளார் ஓட்டுநர். சி.சி.டி.வி. கேமராக்கள் அவரின் முகத்தை பதிவு செய்யும் என்று உணர்ந்து அவர் இவ்வாறு செய்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.
தானேவில் வசிக்கும் நபர் ஒருவரின் ஸ்கார்பியோ தான் இதில் கண்டறியப்பட்டுள்ளது. க்ரௌஃபோர்ட் சந்தைக்கு அவர் சென்று கொண்டிருந்த போது காரின் சக்கரங்கள் பழுதானதால் அவர் விக்ரோலியில் நிறுத்தி வைத்துள்ளார். அடுத்த நாள் அவர் தன்னுடைய காரை எடுக்க வந்த போது கார் அங்கு இல்லை. காவல்துறையிடம் அவர் புகார் அளித்துள்ளார். அடையாளம் தெரியாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அம்பானி இல்லத்திற்கு வெளியே கண்டெடுக்கப்பட்ட அச்சுறுத்தல் கடிதம் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் தொடர்பாக காம்தேவி காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. விசாரணை மும்பை குற்றப்பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மும்பை காவல்துறை அனைத்து கோணங்களிலும் இந்த வழக்கை விசாரித்து வருவதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் சைதண்யா கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.