Jay Mazoomdaar
Pandora Papers : 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம், மூன்று சீன அரசு வங்கிகளுடனான தகராறைத் தொடர்ந்து, அனில் அம்பானி லண்டன் நீதிமன்றத்தில் தன்னுடைய நிகர மதிப்பு (Net worth) பூஜ்ஜியம் என்று குறிப்பிட்டார். அம்பானிக்கு எந்த அளவு வெளிநாட்டில் சொத்துகள் உள்ளன என்பது குறித்த கேள்விகள் இருக்கின்றன. அப்படி இருக்கும் போது அவை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் அறிவித்தது.
ஆனால் மூன்று மாதங்களுக்கு பிறகு 716 மில்லியன் அமெரிக்க டாலர்களை வங்கிகளுக்கு திருப்பி செலுத்தி வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. மேற்கொண்டு தனக்கு உலகளாவிய அளவில் சொத்துக்கள் இல்லை அவர் தெரிவித்தார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மேற்கொண்ட பண்டோரா பேப்பர் ஆய்வில் ரிலையன்ஸ் ஏ.டி.ஏ. நிறுவனத்தின் தலைவர் மற்றும் அவருடைய பிரதிநிதிகள் ஜெர்சி, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் மற்றும் சைப்ரஸ் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தது 18 நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றனர் என்று கண்டறிந்ததுள்ளது.
2007 மற்றும் 2010க்கும் இடைப்பட்ட காலத்தில், இந்த நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் சுமார் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடன்வாங்கி முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஜெர்சியில் அனில் அம்பானிக்கு படிஸ்டே அன்லிமிட்டட், ரேடியம் அன்லிமிட்டட் மற்றும் ஹூய் இன்வெஸ்ட்மென்ட் அன்லிமிட்டட் போன்ற மூன்று நிறுவனங்களை நடத்திவருகிறார். இந்த நிறுவனங்கள் டிசம்பர் 2007 மற்றும் 2008க்கு இடையே இணைக்கப்பட்டது.
படிஸ்டே அன்லிமிட்டட் (Batiste Unlimited) மற்றும் ரேடியம் அன்லிமிட்டட் நிறுவனங்கள் ரிலையன்ஸ் இன்னொவென்சர்ஸ் ப்ரைவேட் லிமிட் நிறுவனத்திற்கு சொந்தமானது. இது ஏ.டி.ஏ குழுமத்தின் மிக முக்கியமான நிறுவனம் ஆகும். ஹூய் இன்வெஸ்ட்மென்ட் அன்லிமிட்டட் நிறுவனம் ஏ.ஏ.ஏ. என்டெர்ப்ரைஸ் லிமிட்டெட் நிறுவனத்திற்கு சொந்தமானது (2014 ஆண்டு முதல் இன்செப்டம் பிரைவேட் லிமிட்டட் என்று அழைக்கப்படுகிறது). இது ரிலையன்ஸ் கேப்பிடலின் விளம்பர நிறுவனமாகும்.
இந்த கோப்பில், 2008ம் ஆண்டு ஜெர்சியில் அமைக்கப்பட்ட சம்மெர்ஹில் லிமிட்டெட் மற்றும் டல்விச் லிமிட்டட் ஆகிய நிறுவனங்களை அம்பானியின் பிரதிநிதியாக அடையாளம் காணப்பட்டுள்ள அனுப் தலாலுக்கு சொந்தமானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
தலால் ஏற்கனவே ரெய்ண்டீர் ஹோல்டிங்க்ஸ் லிமிட்டட் என்ற முதலீட்டு மேலாண்மை நிறுவனத்தையும் சொந்தமாக வைத்திருந்தார். லாரன்ஸ் மியூச்சுவல், ரிச்சர்ட் இக்விட்டி லிமிட்டட் மற்றும் ஜெர்மன் இக்விட்டி லிமிட்டட் ஆகிய 3 நிறுவனங்கள் 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. அனில் அம்பானியுடன் தொடர்புடைய நிறுவனங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள இவை ஜெனிவாவில் உள்ள வழக்கறிஞருக்கு சொந்தமானது என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் விசாரணையில் கண்டறியப்பட்ட சில முக்கியமான பணப்பரிவர்த்தனை விவகாரங்கள்
அம்பானியுடன் தொடர்புடைய ரியல் எஸ்டேட் நிறுவனமான ஏ.ஏ.ஏ. கார்ப்பரேசன் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தில் இருந்து சி.சி.பி.எஸ். பங்குகளை வாங்க படிஸ்டே அன்லிமிட்டட் மற்றும் ரேடியம் அன்லிமிடட் நிறுவனங்கள் முறையே 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள், 220 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியிடம் இருந்து கடன்களை வாங்கியுள்ளது.
டல்விச் நிறுவனம் இங்கிலாந்தில் உள்ள ராக்க்ளிஃப் குரூப் லிமிட்டட் நிறுவனத்தில் இருந்து 33 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடன் வாங்கி மொரிஷியஸை தளமாகக் கொண்ட ஒரு தனியார் நிதியுடன் சந்தா ஒப்பந்தம் மூலம் முதலீடு செய்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த நிதி 2009-10இல், தற்போது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேவல் என்ற பெயரில் இயங்கி வரும், பிபாவாவ் ஷிப்யார்டின் மூன்று சதவீத பங்குகளை விற்றது.
சம்மர்ஹில் லிமிட்டட் நிறுவனம், இன்று வரை விவரங்கள் வெளிவராத ஜி.என்.பி.டி.எல் என்ற நிறுவனத்தின் 90% பங்குகளை வாங்கியுள்ளது. அந்த பங்குகளை பிறகு நெதர்லாந்தில் அமைந்திருக்கும் ரிலையன்ஸ் க்ளோபல்கோம் பி.வி. என்ற நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
லாரன்ஸ் மியூச்சிவல், ரிச்சர் இக்விட்டி லிமிட்டட், ஜெர்மன் இக்விட்டி லிமிட்டட் நிறுவனங்கள் பார்க்லேஸில் இருந்து பெற்ற 47.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை அட்வெண்டிஸ் ஃபண்ட்ஸ் என்று அடையாளம் காணப்பட்ட நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடன் வழங்கியது மற்றும் முதலீடு செய்யப்பட்ட காலம் மார்ச் 2009 என்று கூறப்பட்டுள்ளது.
ப்ரிடிஷ் வெர்ஜின் தீவுகளில் அனில் அம்பானி நார்தெர்ன் அட்லாண்டிக் கன்சல்டன்ஸி சர்வீஸ் க்ரூப் அன்லிமிட்டட் என்ற நிறுவனத்தை வைத்துள்ளார். அதன் இரண்டு துணை நிறுவனங்கள் நார்தெர்ன் அட்லாண்டிக் ட்ரேடிங் அன்லிமிட்டட் மற்றும் நார்தெர்ன் அட்லாண்டிக் இன்வெஸ்ட்மெண்ட் அன்லிமிட்டட் ஆகியவை ஆகும். இவை அனைத்தும் 2010ம் ஆண்டு துவங்கப்பட்டவை.
முதல் இரண்டு நிறுவனங்கள் மார்ச் 2018 க்குள் கலைக்கப்பட்டன.
இதே தீவுகளில் அனில் அம்பானிக்கு ட்ரான்ஸ் பசிஃபிக் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிட்டட் என்ற மற்றொரு நிறுவனமும் உள்ளது. இது மார்ச் 2009ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் இரண்டு துணை நிறுவனங்கள் ட்ரான்ஸ் அட்லாண்டிக் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிட்டட் மற்றும் ட்ரான்ஸ் அமெரிக்காஸ் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிட்டட். இவை இரண்டும் 2009ல் செயல்பாட்டுக்கு வந்தது. அதில் ட்ரான்ஸ் அமெரிக்காஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் 2017ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
2009ம் ஆண்டு ஜூன் மாதம் ட்ரான்ஸ் அமெரிக்காஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் மூன்று சைப்ரஸ் நிறுவனங்களுக்கு இடையே 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனுக்காக ஒப்பந்தமிட்டது. இந்த ஏற்பாட்டிற்கான பாதுகாப்பு அறங்காவலராக லண்டன் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி இருந்தது.
இது தொடர்பாக, டிரான்ஸ்-அட்லாண்டிக் ஹோல்டிங் மற்றும் டிரான்ஸ்-அமெரிக்காஸ் ஹோல்டிங் மற்றும் அனில் அம்பானி குழுமத்தின் நிறுவனமான ரிலையன்ஸ் இன்னோவென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் இடையே மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த மூன்று நிறுவனங்களும் இந்த ஆண்டு சொந்த காரணங்களின் பெயரில் கலைக்கப்பட்டது. இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்பாக அனில் அம்பானியின் வழக்கறிஞர், “என்னுடைய கட்சிக்காரர் இந்தியாவில் வரி செலுத்தும் ஒரு குடிமகன். சட்டத்திற்கு இணங்க செய்யப்பட அனைத்து நடவடிக்களையும் முறையே பின்பற்றியுள்ளார். லண்டன் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தும்போது தேவையான அனைத்து பரிசீலனைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. ரிலையன்ஸ் குழு உலகளாவிய ரீதியில் வணிகத்தை நடத்துகிறது மற்றும் முறையான வணிகம் மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்காக, நிறுவனங்கள் பல்வேறு நாடுகளின் அதிகார வரம்புகளில் இணைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
2020ம் ஆண்டு அனில் அம்பானிக்கு 716 மில்லியன் அமெரிக்க டாலர்களை சீன வங்கிகளுக்கு கட்ட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அனில் அம்பானிக்கு எதிராக பாரத ஸ்டேட் வங்கியின் திவால் நடவடிக்கைகளில் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், அமலாக்க நடவடிக்கையை சீன வங்கிகள் இன்னும் துவங்கவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.