இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அமலாக்கத்துறை சார்பில் எதிர்கட்சி தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம், மகாராஷ்டிராவில் துணை முதல்வர் அஜித் பவாரின் வழக்கை விட, மத்திய புலனாய்வு அமைப்புகளின் அரசியல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும், மாநிலத்தில் அரசியல் சமன்பாடுகளை மாற்றுவதற்கும் இடையே உள்ள வியத்தகு ஒற்றுமை உள்ளது. அதை வேறு எதுவும் சிறப்பாக விளக்கவில்லை.
ஆங்கிலத்தில் படிக்க : Express Investigation: How probe pivots on political flip-flops in the case of Ajit Pawar
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, மும்பை பொருளாதார குற்றப்பிரிவு (EOW) மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியை நடத்துவதில் முறைகேடுகள் செய்தது தொடர்பாக அஜித் பவார் உட்பட 70 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட போது பவார் வங்கியின் இயக்குநராக இருந்தார். இந்த வழக்கு தொடர்பான எஃப்.ஐ.ஆரில், எஸ்.சி.பி. (NCP), காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சியை சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்களின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த எப்.ஐ.ஆரின் அடிப்படையில், அமலாக்கத்துறை வழக்கின் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆருக்கு சமமானது) கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதிவு செய்தது. அந்த அறிக்கையில் என்.சி.பி தலைவர் சரத் பவாரின் பெயரும் இடம்பெற்றிருந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் ஜெயந்த் பாட்டீல், திலீப்ராவ் தேஷ்முக் மற்றும் (மறைந்த) மதன் பாட்டீல், என்சிபியின் ஈஸ்வர்லால் ஜெயின் மற்றும் சிவாஜி ராவ் நலவாடே, மற்றும் சிவசேனாவின் ஆனந்தராவ் அட்சுல் ஆகியோரின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம், இந்த வழக்கில், சந்தேக நபர்களை விசாரித்து, இரு அமைப்புகளும் தங்கள் விசாரணையைத் தொடர்ந்ததால், சிவசேனா என்.டி.ஏ (NDA) கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் மற்றும் என்.சி.பி (NCP) உடன் இணைந்து எம்.வி.ஏ (MVA) அரசாங்கத்தை அமைத்தது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2020 இல், அஜித் பவார் மகாராஷ்டிர அரசின் முக்கிய நபராக இருந்ததால், மும்பை பொருளாதார குற்றப்பிரிவு (EOW) இந்த வழக்கை கைவிடுவதாக அறிக்கை வெளியிட்டது.
ஆனால் அமலாக்கத்துறை, இந்த அறிக்கைக்கு எதிராக விண்ணப்பத்தின் மூலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதில் இந்த வழக்கில் விசாரணை செய்யப்பட வேண்டிய ஆதாரங்கள் இருப்பதாக கூறியிருந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மும்பை பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையில் தலையிட எந்த அதிகாரமும் இல்லை மனுவை தள்ளுபடி செய்தது. அதே சமயம் இந்த வழக்கில், அமலாக்கத்துறை (ED) தவறான நோக்கத்திற்காக மேல்முறையீடு செய்து்ளது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு குற்றம்சாட்டியது.
இதனிடையே அமலாக்கத்துறையின் பார்வையில், மும்பை பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தனது எஃப்ஐஆரை கைவிட்டால், அஜித் பவாருக்கு எதிரான அதன் வழக்கு பயனற்றதாகிவிடும். ஏனென்றால் நிதி மோசடி அல்லது மற்றொரு ஏஜென்சியின் ஊழலின் வழக்கு முன்பே எஃப்ஐஆர் இருக்கும்போது, பணமோசடி வழக்கை முன்கூட்டிய விசாரிக்க முடியாது. இதனிடையே கடந்த 2021-ம் ஆண்: ஜூலை மாதம் பவாரின் ரூ.65 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறை, ஒரு கிளட்ச் நிறுவனங்களின் பெயரைக் கூறி ஒரு வழக்கை (குற்றப்பத்திரிக்கைக்கு சமமானது) பதிவு செய்தது. இந்த வழக்கை பதிவு செய்து ஒரு மாதத்திற்கு பிறகு, சிவசேனா காட்சியின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சுமார் 40 எம்எல்ஏக்களுடன் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தனர், இதன் மூலம் எம்.வி.ஏ ஆட்சி முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம், மும்பை பொருளாதார குற்றப்பிரிவு மீண்டும் நீதிமன்றத்திற்குச் சென்றது, இப்போது அஜித் பவாருக்கு எதிரான வழக்கை மீண்டும் திறக்கவும், ஆதாரங்களின் அடிப்படையில் மேலும் விசாரணைகளை மேற்கொள்ளவும் கோரிக்கை வைத்தது. ஒரு வருடம் கழித்து, ஜூலை 2023 இல், அஜித் பவார் என்சிபியை பிரித்து, பிரபுல் படேல் மற்றும் சாகன் புஜ்பால் உட்பட ஏழு கட்சித் தலைவர்களுடன் என்.டி.ஏ.வில் இணைந்து துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார்.
2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அமலாக்கத்துறை இரண்டு துணை குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தது, அதில் சரத் பவார் தலைமையிலான என்.சி.பி (NCP) பிரிவின் எம்எல்ஏ பிரஜாக்த் தன்புரே, ஏக்நாத் ஷிண்டே பக்கம் உள்ள முன்னாள் எம்எல்ஏ உட்பட மற்ற அரசியல்வாதிகளில் பெயரை இணைந்திருந்தது. இதில் அஜித் பவார் பெயரை குறிப்பிடவில்லை.
இதைத் தொடர்ந்து, ஜனவரி 2024 இல், மும்பை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தை அணுகி, விசாரணையில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறி, இந்த வழக்கில் இரண்டாவது முறையாக கைவிடுவதாக அறிக்கையை தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை மேல்முறையீட்டு விண்ணப்பத்துடன் மீண்டும் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.