Advertisment

உ.பி.தேர்தல் 2022: சாதி வாக்குகளை கருத்தில் கொண்டு சமுதாய கூட்டங்களை நடத்தும் பாஜக

பல்வேறு சமூகங்களின் பிரதிநிதிகளை சென்றடைவதற்காக இந்த கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இது சாதியை மையமாக கொண்ட திட்டங்கள் இல்லை என்று நிகழ்ச்சி பொறுப்பாளரும், பாஜக மாநில பொதுச்செயலாளருமான பிரியங்கா சிங் ராவத் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
UP Polls, UP polls BJP starts community meetings, BJP

Lalmani Verma

Advertisment

UP polls BJP starts community meetings : உத்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அங்கே இருக்கும் சாதிகளின் சமன்பாட்டை கருத்தில் கொண்டு முதன்முறையாக ஆளும் பாஜக, சமாஜிக் பிரதிநிதி சம்மேளன் அல்லது சமுதாயத்தின் பிரதிநிதிகளுக்கான கூட்டம் ஒன்றை ஞாயிறு அன்று நடத்தியது. அதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார். பிரஜாதிபதி சமாஜ் என்ற குயவர் சமூக அமைப்பினர் மத்தியில் பேசினார்.

கட்சித் தலைவர்கள் இது போன்ற கூட்டத்தை மாநிலம் முழுவதும் 27 இடங்களில் அக்டோபர் 31ம் தேதி வரை நடத்த இருப்பதாக கட்சி நிர்வாகிகளில் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தனர். சமாஜ்வாடி கட்சி யாத்திரைகள் மூலம் மக்களை அணுகி வருகின்ற சமயத்தில் இந்த சம்மேளனங்களை நடத்த பாஜக முடிவு செய்துள்ளது. அதே போன்று பகுஜன் சமாஜ் கட்சி பிராமணர்களை மையப்படுத்தி தங்களின் கூட்டங்களை நடத்தி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் பேசிய யோகி, குயவர் சமூகத்தினரின் பொருளாதார ரீதியான முன்னேற்றத்திற்கு அவருடைய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் குறித்து கூறினார். அயோத்தியில் 9 லட்சம் விளக்குகள் தீபாவளியின் போது ஏற்றப்படும் என்றும் அதற்கான விளக்குகள் இப்பகுதியில் இருக்கும் குயவர்களிடம் இருந்து பெறப்படும் என்றும் கூறினார்.

மட்டி கலா வாரியம் (Mati Kala Board) குயவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது என்று கூறிய அவர், முன்பு சிலைகள் சீனாவில் செய்யப்பட்டது. சீனா ஒரு நாத்திக நாடு ஆனால் அது அதிக விலைக்கு விற்க லட்சுமி-கணேஷ் சிலைகளை உருவாக்கத் தொடங்கியது. ஆனால் நம்முடைய ப்ரஜாபதி சமூகத்தினர் வேலையில்லாமல் அமர்ந்திருந்தனர். தற்போது நாம் சீனாவில் இருந்து சிலைகளை வாங்குவதை நிறுத்திவிட்டோம். நாமே நமக்கு தேவையான சிலைகளை உருவாக்குகின்றோம் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில பாஜக தலைவர் சுதந்திரன் தேவ் சிங், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் லோகேஷ் குமார் ப்ரஜாபதி உள்ளிட்ட பல்வேறு பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் பாஜக பிரதிநிதிகளும் பேசினார்கள்.

பல்வேறு சமூகங்களின் பிரதிநிதிகளை சென்றடைவதற்காக இந்த கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இது சாதியை மையமாக கொண்ட திட்டங்கள் இல்லை என்று நிகழ்ச்சி பொறுப்பாளரும், பாஜக மாநில பொதுச்செயலாளருமான பிரியங்கா சிங் ராவத் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.

ஆனாலும், பாசி, கனௌஜியா, வால்மிகி, கோரி, கதேரியா, சோன்கர் மற்றும் ஜடவ் உள்ளிட்ட 7 பட்டியல் இன குழுக்களுக்கான சம்மேளனங்கள் அக்டோபர் 19ம் தேதி முதல் நடைபெறும் என்று அம்மாநில பட்டியல் இன மோர்ச்சாவின் தலைவர் ராமசந்திர கனௌஜியா தெரிவித்தார். இந்த 7 பிரிவும் பட்டியல் இனத்தில் மிகவும் முக்கியம் பெற்ற சாதிகள் ஆகும். வேறு சில சாதிகளும் உள்ளன. அவர்களும் இந்த சம்மேளனங்களில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள் என்று ராமசந்திரா கூறினார்.

அனைத்து பிரிவுகள் மற்றும் சாதியினரையும் கட்சி உட்படுத்துகிறது என்று கூறிய பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ராகேஷ் த்ரிபாதி, இன்று துவங்கிய சமாஜிக் ப்ரதிநிதி சம்மேளன கூட்டங்கள் மூலமாக கட்சி பல்வேறு பிரிவுகள் மற்றும் வகுப்புகளைச் சேர்ந்த புகழ்பெற்ற மற்றும் செல்வாக்குள்ள நபர்களை கண்டடைந்து கௌரவிக்கும். வர்களின் நலனுக்காக மாநில அரசு எடுக்கும் முடிவுகள் குறித்து அவர்களுடன் கட்சி பேச்சுவார்த்தை நடத்தும். எங்களுக்கு ஆதரவளிக்கவும், எங்களுக்கு வாக்களிக்கவும் கட்சி அவர்களை ஊக்குவிக்கும்” என்று கூறினார். 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பும் இதே போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

ஓ.பி.சி மற்றும் எஸ்.சி பிரிவினருக்கு சம்மேளன்களை நடத்துவதில் அழுத்தம் இருக்கும், ஏன் என்றால் கூட்டாக அவர்கள் உ.பி.யில் பெரும்பான்மை வாக்குகளைக் கொண்டுள்ளனர், மேலும் பிராந்திய கட்சிகள், இவர்களின் வாக்குகள் மூலமாக மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றனர் என்று கட்சி வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தது.

கடந்த மாதம் நடைபெற்ற மாநில அமைச்சரவை விரிவாக்கத்தின் போது 7 புதிய அமைச்சர்கள் இணைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் பிராமணர், 3 நபர்கள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் 2 பேர் பட்டியல் இனத்தோர், ஒருவர் பட்டியல் பழங்குடி வகுப்பை சேர்ந்தவர்.

ஜூலையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது மூன்று ஓ.பி.சி. பிரிவினர், 3 பட்டியல் இனத்தோர் மற்றும் ஒரு பிராமணர் அமைச்சரவையில் இடம் பெற்றனர். அந்த பிராமண அமைச்சர், உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, தற்போது பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற அழுத்தத்தை சந்தித்து வருகிறார். லக்கிம்பூர் வன்முறையில் அவருடைய மகனுக்கு பங்கிருப்பதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க : லக்கிம்பூர் வன்முறையில் அதிகம் பேசப்பட்ட இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா யார்?

தேர்தல்கள் நெருங்கி வருகின்ற நேரத்தில் முன்னாள் ஆட்சியை தாக்கி பேசிய யோகி, சமாஜ்வாடி ஆட்சி வன்முறையாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்த கட்சி என்றும், பண்டிகைகளின் போது மாநிலத்தை இருளில் தள்ளிய கட்சி என்றும் குறிப்பிட்டார்.

உள்ளூர் கைவினைஞர்கள் தங்கள் வருவாய் ஈட்டும் விழாக்காலங்களின் போது ஊரடங்கு விதிக்கப்பட்டது. ஊரடங்கு, கலவரங்கள்… முன்னாள் அரசின் ஒரு அங்கமாக கலவரங்கள் இருந்தன என்று மேற்கோள் காட்டிய அவர் அனைத்து வகையிலும் கலவரக்காரர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களை ஊக்குவித்தனர் என்றும் குறிப்பிட்டார். பெரும்பான்மை சமூகம் கலவரத்தால் துன்புறுத்தப்பட்டு, பொய் வழக்குகளை எதிர்கொண்டது என்றார் யோகி.

இதனால் சிலைகள் விற்கப்படவில்லை. விளக்குகள் அழிக்கப்பட்டன என்றும் கூறினார். யோகியின் கூற்றுப்படி அவருடைய நான்கரை ஆண்டுகளில் ஒரு கலவரம் கூட அம்மாநிலத்தில் நடைபெறவில்லை. முதல் நாள் முதல், கலவரக்காரர்களுக்கு கடுமையான எச்சரிக்கை வழங்கப்பட்டது. நீங்கள் கலவர்ம் செய்தால் உங்களின் அடுத்த 7 தலைமுறையினர் கஷ்டப்படுவார்கள். தற்போது இம்மாநிலத்தில் வன்முறை கலவரங்கள் நடக்கவில்லை. விழாக்காலங்கள் மகிழ்ச்சியுடன் இம்மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது என்றும் யோகி கூறினார்.

உண்மையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின் போது பரவலான எதிர்ப்புகளையும் வன்முறைகளையும் கண்டது உத்திரபிரதேசம்.

நவராத்திரி மற்றும் விஜயதசமி நாட்களில் 41,000 இடங்களில் புதிய சிலைகள் வைக்கப்பட்டு, சனிக்கிழமை மாலை வரை 32,000க்கும் மேற்பட்ட சிலைகள் நீரில் கரைக்கப்படும் வரை எந்தவிதமான மதப்பூசல்களும் ஏற்படவில்லை என்றும் யோகி தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார். நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வரும் நேரத்திலும், உ.பி. அரசு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 22க்கு வாங்கி, விழா காலங்களில் இருளில் இருந்து தப்பிக்க மக்களுக்கு மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டது என்று கூறினார் அவர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Uttar Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment