scorecardresearch

அடுத்த ஆண்டில் 5 மாநில தேர்தல்; நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் பாஜக

பாஜக இறுதியாக அதன் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான பாராளுமன்ற வாரியத்தை மறுசீரமைக்கக்கூடும் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன. வெங்கையா நாயுடு துணை குடியரசுத் தலைவரானதாலும், அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஞ், அனந்த்குமார் அகியோரின் மறைவினால் ஏற்பட்ட காலியிடத்தை நிரம்பலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டில் 5 மாநில தேர்தல்; நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் பாஜக

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் போது பாஜக தலைவர்கள் நாட்டு மக்களை நேரடியாக சென்று சந்திக்க இயலாத சூழல் ஏற்பட்ட நிலையில், நேற்று இழந்த தங்களது பலத்தை மீண்டும் பெற உதவும் நடவடிக்கைகளை கையகப்படுத்தும் முனைப்பில் இறங்கி உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வரவிருக்கும் உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக தனது தொண்டர்களை மீண்டும் உற்சாகப்படுத்த முடிவு பாஜக தலைமை முடிவு செய்துள்ளது.

பாஜக நிர்வாகிகளின் சந்திப்புக்குப் பிறகு, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். இதில் தேர்தலுக்கு முந்தைய திட்டமிடல்கள் குறித்து பிரதமருக்கு விளக்கமளிப்பதற்காக இந்த சந்திப்பு நடந்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சேவா ஹாய் சங்கதன் திட்டத்தின் கீழ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து கட்சி பொதுச் செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் பொறுப்பேற்றுள்ள ஆய்வு கூட்டத்தில், பிரதமர் மோடி கட்சித் தலைமையை பலப்படுத்த தொண்டர்கள் அணித் திரட்ட கூறியுள்ளதாக தெரிய வருகிறது. மேலும், மக்கள் மத்தியில் பாஜக மீதான அதிருப்தி மற்றும் விமர்சனங்களை திரட்டவும் கட்சி நிர்வாகிகளை அவர் வலியுறுத்தி உள்ளார். பாஜக தலைமை கட்சியின் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களுடன் அந்தந்த பிரிவுகளின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக கூட்டங்களை நடத்தியது.

இதற்கிடையில், பாஜக இறுதியாக அதன் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான பாராளுமன்ற வாரியத்தை மறுசீரமைக்கக்கூடும் என்ற ஊகங்கள் உள்ளன. வெங்கையா நாயுடு துணை குடியரசுத் தலைவரானதாலும், அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஞ், அனந்த்குமார் அகியோரின் மறைவினால் ஏற்பட்ட காலியிடத்தை நிரம்பலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தில், மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நாடுகளில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் பாஜகவின் செயல்திறனை கட்சித் தலைவர்கள் மதிப்பீடு செய்தனர். வங்காளத்தில் பெரும்பான்மையை வெல்வதில் பாஜகவின் தோல்வி குறித்தும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான முஸ்லீம் வாக்குகளை பாஜக வசம் பலப்படுத்துதல் மற்றும் காங்கிரஸ் இடதுசாரிகள் வாக்குகளை பாஜக பக்கம் வசப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த நாட்களில் கட்சியின் உத்திகள் மற்றும் அடுத்த ஆண்டு முக்கிய தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் குறித்து தலைவர்கள் விவாதிப்பார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. கூட்டத்தில், பொதுச் செயலாளர்கள் மற்றும் ஐந்து மாநிலங்களுக்குப் பொறுப்பானவர்கள் தொற்றுநோய்களின் போது கட்சியின் செயல்பாடுகளை விளக்கினர். நடவடிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன. அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் பொறுப்பேற்றுள்ள மாநிலங்கள் குறித்து அறிக்கை அளித்தனர் என, ஒரு பாஜக தலைவர் ஒருவர் கூறினார். குறைபாடுகள் மற்றும் தோல்விகள் குறித்த கலந்துரையாடல்களும் நடைபெற்றதாக மற்றுமொரு பாஜக தலைவர் கூறினார். கோவிட் வளைவு வீழ்ச்சியடைவதால், கட்சியின் அடுத்த கவனம் தடுப்பூசி திட்டமாக இருக்கும் என்று பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Eye on key polls bjp meet reviews party activities in 5 states