ஃபேஸ்புக் நட்பால் விபரீதம் : இளம்பெண் ஷூ லேசால் கழுத்து அறுத்துக் கொலை

கொலை செய்து விட்டு, உடலை அருகில் இருந்த கட்டிடம் ஒன்றில் மறைத்து வைத்துள்ளான்

மகாராஷ்டிராவில் ஃபேஸ்புக் நண்பனை நம்பிச் சென்ற இளம்பெண், ஹூ லேசால் கொடூரமான முறையில் கழுத்து அறுத்துக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூகவலைத்தளங்களில் ஏற்படும் பழக்கத்தினால், நாட்டில் பல பெண்கள் பாலியல் ரீதியாகவும், மனதளவிலும் பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பதாக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியானது. இதை நிரூபிக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம்பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

20 வயதாகும் அந்த பெண்ணிற்கு, சமீபத்தில் ஃபேஸ்புக் மூலம் ஹரிதாஸ் என்ற இளைஞன் அறிமுகமாகியுள்ளான். இருவரும் நண்பர்களாக பழகி உள்ளனர். இந்நிலையில், சம்பவதன்று ஹரிதாஸ் அந்த பெண்ணை தன் வீட்டிற்கு அழைத்துள்ளான். ஆரம்பத்தில் வீட்டிற்கு செல்ல வர மறுத்த அந்த பெண்ணை, தனது பெற்றோர்களும் வீட்டில் இருப்பதாக கூறியும், அவர்கள் உன்னை பார்க்க விரும்புவதாக கூறியுள்ளான்

ஹரிதாஸ் கூறியதை நம்பி சென்ற, அந்த பெண்ணுக்கு வீட்டிற்கு சென்ற பின்பே அவனைக் குறித்த உண்மை தெரிய வந்துள்ளது. உடனே, அங்கிருந்து தப்பிக்க முயன்ற அந்த பெண்ணை ஹரிதாஸ் கற்பழிக்க  முயன்றுள்ளான். இதனால் அந்த பெண் கூச்சலிட்டு உதவி கேட்டுள்ளார். இதனால் ஆத்திராடைந்த  அவன், வீட்டில் இருந்த ஷூ லேசை எடுத்து பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, உடலை அருகில் இருந்த கட்டிடம் ஒன்றில் மறைத்து வைத்துள்ளான்.

வெளியில் சென்ற பெண் வீட்டிற்கு திரும்பவில்லை என்று பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உடனடியாக விசாரணையில் இறங்கிய காவல் துறையினர் கட்டிடத்தில் இருந்த பெண்னின் உடலை சடலமாக மீட்டுள்ளனர். 24 வயதான ஹரிதாஸை முதலில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்ய போலீசார் , பின்பு நடந்த எல்லாவற்றையும் விசாரணையில் கண்டுப்பிடித்துள்ளனர். ஃபேஸ்புக் நட்பை நம்பி சென்ற இளம்பெண்ணிற்கு நேர்ந்த துயரம், அந்த பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close