Advertisment

வாழ்வாதாரத்தை இழந்த போதும் கொரோனா நிதிக்கு வாரி வழங்கிய மரமேறும் தொழிலாளர்கள்!

அவர்கள் தங்களின் உதவும் எண்ணத்தில் இருந்த பின்வாங்கவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
The coconut climbers from Chhattisgarh

The coconut climbers from Chhattisgarh

Vishnu Varma :

Advertisment

The coconut climbers from Chhattisgarh : ரஞ்சித் சிங் பைக்ரா கேரளாவில் தனது காலை பதிப்பதற்கு முன்பு வரை இவ்வளவு தென்னை மரங்களை ஒரே இடத்தில் பார்த்ததில்லை. அது அவரை திகைப்படையச்செய்தது. சட்டிஸ்கர் பென்ரா சாலையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிச் சென்றபின் அவர் தென்னை தோட்டங்கள் குறித்து பெரிதாக கண்டுகொண்டதில்லை. அவர்கள் ஊரில் இருந்த சில தோட்டங்களும் தொலைவில் இருந்தன.

ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த அவர், 10ம் வகுப்பிற்கு பின்னர் குடும்ப சூழல் காரணமாக உயர் கல்வியை கைவிட்டார். அவர் தந்தையுடன் நெல் வயல்களில் பணிபுரியத் துவங்கினார். ஆனால் இந்த தொழில் சிறிதளவு வருமானமே கொடுத்துவருவதால், இதை தொடர்ந்து செய்வதால் தன் குடும்பத்திற்கு பயனில்லை என்பதை அவர் உணர்ந்தார்.

ஒரு நாள் கேரளாவில் இருந்து போனில் தொடர்புகொண்ட அவரின் நண்பர், உயர்ந்து வளர்ந்துள்ள தென்னை மரங்களில் ஏறி தேய்காய்களை பறிப்பது குறித்த அந்த வேலை குறித்து அவருக்கு கூறினார். அதற்கு நல்ல சம்பளமும் கிடைக்கும் என்றும் கூறினார். இந்த வேலை அவருக்கு பிடித்துவிடவே, சற்றும் தாமதிக்காமல், பில்லாஸ்பூரில் இருந்து கோப்ரா எக்ஸ்பிரசில் ஏறி 2,100 கிலோ மீட்டர் பயணம் செய்து திருவனந்தபுரத்தை அடைந்தார்.

2019ம் ஆண்டின் துவக்கத்தில் 30 வயதான ரஞ்சித் கம்ப்யூடெக் என்ற தனியார் நிறுவனத்தில் சேர்ந்து, இயந்திரத்தைப் பயன்படுத்தி தென்னை மரங்களில் ஏறுவதற்கு ஒரு வாரம் பயிற்சி எடுத்தார். பாரம்பரிய உள்ளூர் மரமேறுபவர்கள் இயந்திரத்தின் துணையின்றி, தங்கள் கை, கால்களின் மூலமே மரமேறி தேங்காய்களை பறிப்பர். தற்போது, அதற்கும் இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டுவிட்டன. அது மரமேறி தேங்காய்கள் பறிப்பதை சுலபமாக்கிவிட்டது.

எந்த வேலையையும் முதலில் செய்யும்போது கடினமாகத்தான் இருக்கும், நானும் தென்னை மரத்தில் முதலில் ஏறி, உச்சியிலிருந்து கீழே பார்த்தபோது அச்சமாகத்தான் இருந்தது. ஆனால், அடுத்து வந்த சில நாட்களில் அது மிக எளிதானது. இப்போது அது பழக்கமாகவே மாறிவிட்டது என்று திருவனந்தபுரத்தில் இருந்து ரஞ்சித் போனில் கூறினார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரஞ்சித் ஒரு சிறந்த மரமேறுபவராகவே மாறியிருந்தார். நாளொன்றுக்கு 40 முதல் 50 மரங்களும், சில நாட்களில், பெரிய பண்ணைகளாக இருந்தால், வானிலையும் சாதகமாக அமைந்தால்  70 முதல் 80 மரங்களும் ஏறுவார். மரமொன்றுக்கு ரூ.40ஐ அவர் கூலியாகப்பெறுகிறார். அதில், ரூ.15ஐ அவர் சார்ந்த நிறுவனம் எடுத்துக்கொள்ளும். அவரின் மாத வருமானம் ரூ.30 ஆயிரம் வரை இருக்கும். அத்தனை மைல் கடந்து வந்து இந்ததொகையை மட்டுமே அவர் வீட்டிற்கு எடுத்துச்செல்கிறார்.

கேரளாவின் உயர்ந்த கூலி, முறைசாரா பொருளாதாரம் மற்றும் இந்த தொழிலாளர்களுக்கான தேவை ஆகிய அனைத்தும், ரஞ்சித் போன்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. இதன் மூலம் வடஇந்தியாவில் உள்ள தங்கள் குடும்பங்களை அவர்கள் நன்றாக கவனித்துக்கொள்ள முடிகிறது.

இங்கு அவர்கள் ஈட்டும் வருமானத்தின் மூலம் தங்கள் சகோதரிகளின் திருமணத்திற்கு பணம் கொடுப்பது. வீடுகள் கட்டுவது, தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்குவது போன்றவற்றை செய்ய முடிகிறது என்று கூறுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை, வாழ்வதற்கு நல்ல சூழலையும், செல்வத்தையும் கொடுப்பதால், கேரளா அவர்களுக்கு மற்றுமொரு வீடு தான்.

நாங்கள் இங்கு அமைதியாக உணர்கிறோம். கேரளாவில் வாழ்க்கை  மிக அழகாக உள்ளது என்று ரஞ்சித் கூறுகிறார்.

மேலும், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், கோவிட்டால் கேரளா உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலமும் பாதிக்கப்பட்டு வந்தபோது, கேரளாவின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது.

அந்த சூழலில் ரஞ்சித்தும் அவரால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று விரும்பினார். அவருக்கு பணி வழங்கியவர், ஒரு பெண் தனது ஆடுகளை விற்றும், சிறு குழந்தைகள் தங்கள் உண்டியல் சேமிப்புகளையும் பேரிடர் நிவாரணமாக வழங்கிய கதைகளை கூறியதால், உற்சாகமடைந்த ரஞ்சித், தன்னுடன் பணி செய்யும் சட்டிஸ்கரைச் சேர்ந்த ஊழியர்கள் 42 பேருடன் சேர்ந்து முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பணம் கொடுப்பதற்கு விரும்பினார்.

முதல்கட்ட ஊரடங்கினால், அவர்கள் வருமானமிழந்து, அவர்களின் சேமிப்பை பாதித்தாலும், அவர்கள் தங்களின் உதவும் எண்ணத்தில் இருந்த பின்வாங்கவில்லை. முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு உதவ நினைத்தார்கள்.

கம்ப்யூடெக்கை சேர்ந்த மற்றொரு மரமேறும் தொழிலாளி சந்திரபால் கோரம் கூறுகையில், இது கடினமானதல்ல, இந்த மாநிலம் எங்களுக்கு நிறைய கொடுத்துள்ளது. அதனால் எங்களால் இயன்றதை சிறியளவினதாக இருந்தாலும், நாங்கள் அவர்களுக்கு திருப்பிக் கொடுக்க விரும்புகிறோம் என்றார்.

கம்ப்யூடெக்கின் நிறுவனர் மோகன் தாசுடனான கூட்டத்தில், அனைத்து 43 தொழிலாளர்களும், தங்களால் இயன்றதை வழங்க முன் வந்தார்கள். சிலர் தலா ரூ. 1,000 வழங்குவதாகவும், சந்திரபால் கோரத்தை போன்ற சிலர் ரூ.2,500 வழங்குவதாகவும் கூறினார்கள்.

சிறிய குழந்தைகள் கூட இந்த மாநிலத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்கள் என்று நான் அவர்களிடம் கூறியது, தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்ற நான் நினைக்கிறேன். அனைவரும் பணம் கொடுப்பதற்கு தயாராக இருந்தார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து ரூ.52 ஆயிரமும், முன்னாள் ராணுவ வீரரான நான் எனது ஒரு மாத ஓய்வூதியம்தொகையான ரூ.26 ஆயிரத்தையும் சேர்த்து எங்களால் ரூ.78 ஆயிரம் திரட்ட முடிந்தது. அதை நேரடியாக அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரனிடம் வழங்கினோம் என மோகன்தாஸ் கூறினார்.

ஆயிரம் கிலோ மீட்டர்கள் கடந்து அவர்கள் வந்து இங்க தங்கியிருந்தாலும், அவர்களை மற்றவர்களைப்போல் கேரளா நடத்தியதில்லை என்று பெருமையாக கூறுகிறார் சந்திரபால். எங்களுக்கு இங்கு நிறைய மரியாதை கிடைக்கிறது. இங்குள்ள மக்களும் மிகச்சிறந்தவர்கள். ஊரடங்கில் எங்களுக்கு போதிய ரேஷன் பொருட்கள் கிடைக்காதபோது, உள்ளூர் மளிகைக்கடைக்காரர் எங்களுக்கு கடனாக அரிசி, பருப்பு மற்றும் உணவுப்பொருட்களை வழங்கினார். எங்களின் நிலையை நன்றாக புரிந்துகொண்டார். நாங்கள் அவரின் கடனை விரைவில் அடைத்துவிடுவோம்.

ரஞ்சித் மேலும் கூறுகையில், ஊரடங்கின்போது, எங்கள் நிறுவனமே எங்களை நன்றாக பார்த்துக்கொண்டதால், நாங்கள் பெரியளவில் பிரச்னைகளை சந்திக்கவில்லை. ஆனால் எங்களைப்போல் நிறைய பேருக்கு உதவி தேவைப்பட்டதை உணர்ந்து நாங்கள் அவர்களுக்கு உதவினோம்.

ஏப்ரல் மாதத்தின் மத்தியில் விவசாய நடவடிக்கைகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டபோது, ரஞ்சித் மற்றும் மற்றவர்களும் தங்கள் பணிகளுக்கு செல்ல துவங்கிவிட்டனர். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுகின்றனர். சமூக இடைவெளி என்பது பெரிய பண்ணைகளில் சாத்தியமில்லாத காரணத்தால், முகக்கவசங்களும், கையுறைகளும் அணிந்தும், அடிக்கடி கைகளை கழுவிக்கொண்டு பணிகளை தொடர்கின்றனர்.

மரம் ஏறுவதற்கு பயன்படும் இயந்திரங்கள் வாடிக்கையாக சுத்திகரிக்கப்படுகின்றன. பருவமழை துவங்க உள்ள நிலையில், தேங்காய் பறிக்கும் வேலை கணிசமாக குறைந்துவிடும். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், ரயில் வண்டிகள், பேருந்துகள் வழக்கம்போல் இயங்கத்துவங்கியவுடன், சந்திரபால் மற்றும் மற்றவர்களும் வீட்டிற்கு செல்ல விரும்புகின்றனர். கோடை காலத்தில் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச்செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால், அந்த திட்டங்கள் அனைத்தையும் ஊரடங்கு பாழாக்கிவிட்டது. கோவிட்- 19 மற்றும் பொருளாதார நிலை போன்றவற்றால், இந்த முறை அவர்கள் தங்கள் சொந்த ஊர்களில் நீண்ட நாட்கள் தங்க நேரிடும். ஆனாலும் மீண்டும் பணிகள் கேரளாவில் வழக்கம்போல் துவங்கியவுடன், அவர்கள் வந்துவிடுவார்கள்.

ஆங்கிலத்தில் இச்செய்தியை வாசிக்க

தமிழில்: R. பிரியதர்சினி.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Corona Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment