ஹத்ராஸ் வழக்கு : கடும் விமர்சனங்களை சந்தித்த யோகி எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டு!

ஹத்ராஸ் விவகாரத்தில் இது கொஞ்சம் சிக்கலானது. ஏன் என்றால் அந்த பெண் ஒரு தலித்.

By: October 7, 2020, 11:36:57 AM

Liz Mathew , Maulshree Seth

Facing flak Yogi Adityanath cites CAA crackdown accuses Opposition of using Hathras to divide :  ஹத்ராஸ் வழக்கை உ.பி. அரசு கையாண்ட விதம் குறித்து கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் யோகி ஆதித்யநாத், செவ்வாய் கிழமையன்று சி.ஏ.ஏ. போராட்டங்களை மேற்கோள் காட்டி, எதிர்கட்சிகளின் சதி என்று கூறினார்.

”அவர்களின் முகங்களை நீங்கள் காணா வேண்டும். சி.ஏ.ஏவுக்கு எதிராக போராடியவர்கள், கொரோனா தொற்றின் போது, தப்லிகி ஜமாத்தில் இருந்து கொண்டு கொரோனாவை பரப்பியவர்கள், பல்வேறு மட்டங்களில், மாநிலங்களில் அராஜகத்தை பரப்ப முயன்றவர்கள்” அவர்களின் முகத்திரையை விலக்கியது மட்டுமின்றி அரசு அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளையும் மேற்கொண்டது என்று யோகி கூறினார்.

சமூதாயத்தில் விரோதத்தை தூண்டிவிடுவதன் மூலம் தனது அரசாங்கத்தின் பிம்பத்தை கெடுக்கும் சதி இருப்பதாக அவர் கூறினார். எதிர்கட்சிகளுக்கு எதிர்மறை விளம்பரங்களை உருவாக்குவதை தவிர எழுப்புவதற்கு வேறெந்த பிரச்சனையும் இல்லை. பிரிவுகளை உருவாக்கவும், வளர்ச்சியில் தடையை உருவாக்கவும் அவர்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறனர் என்று அவர் கூறினார்.

to read this article in English

பாஜகவிற்கு பிறகு, முதன்முறையாக, ஹத்ராஸ் விவகாரம் குறித்து பேசிய அவர், எதிர்கட்சிகள் வாக்கு வங்கிக்காக குறிப்பிட்ட சில வழக்குகளை மட்டும் முன்னிறுத்தி வருகிறது என்று குற்றம் சுமத்தினார்.

பாஜக பொதுச் செயலாளரும் தலித் தலைவருமான துஷ்யந்த் கௌதம், “பெண்களுக்கு எதிராக, பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற எந்த குற்றமானாலும், தலித் ஆனாலும் சரி, ஏழையானாலும் சரி, எந்த ஆட்சியின் கீழ் நடைபெற்றாலும் சரி அந்த நிகழ்வு வெறுக்கத்தக்கது.  யார் அதிகாரத்தில் இருக்கின்றார்கள், பாலியல் வன்கொடுமை செய்தவர்கள், கொலை செய்தவர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள், அங்கு எந்த வகையான வாக்கு வங்கி இருக்கிறது என்று யோசித்து ஒரு குற்றத்தை மக்கள் அணுகும் விதம் வருத்தமாக இருக்கிறது என்று கூறினார்.

ஒவ்வொரு பிரச்சனைக்கும், சி.ஏ.ஏ (அ) வேளாண் மசோதாக்கள் (அ) ஹத்ராஸ் எதிர்கட்சிகள், சிவில் சொசைட்டியினர் என அதே போராட்டக்காரர்கள். அவர்களின் குறிக்கோள்கள் எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் சட்டபூர்வ தன்மையை அரசியல் ரீதியாக எதிர்க்க இயலாமல் தாக்குவது தான்.  இதே கருத்துகளை பாஜகவின் பிரிவினர் லக்னோ மற்றும் புதுடெல்லியிலும் பிரதிபலித்தனர்.

ஹத்ராஸ் விவகாரத்தில் இது கொஞ்சம் சிக்கலானது. ஏன் என்றால் அந்த பெண் ஒரு தலித். பாஜக, மிகவும் தாமதமாக தலித் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இருக்கும் பதட்டத்தை அடிக்கோடிட்டு காட்டியது. தொடர்ந்து ஏற்பட்ட மோதல்களால் சிலர் கைது செய்யப்பட்டனர். தலித்கள் விசயத்தில் உணர்ச்ச்சியற்றதாக இருந்ததால் ஏற்பட இருக்கும் அரசியல் இழப்பு என்ன என்பதையும் உணர்ந்துள்ளது. பீம் ஆர்மியின் சந்திரசேகர் ஆசாத் ஆர்ப்பாட்டங்களில் மிகவும் வெளிப்படையாக இணைந்தபோது, அது மேலும் அதிகரித்தது.

மேலும் படிக்க : ஹத்ராஸ் வழக்கு : 11 நாட்களுக்கு பிறகு எடுக்கப்பட்ட மாதிரிகளால் ஒரு பயனும் இல்லை!

கட்சித் தலைவர் ஜே பி நாடா செவ்வாய்க்கிழமை புதிதாக நியமிக்கப்பட்ட தேசிய அலுவலக பொறுப்பாளர்களின் முதல் கூட்டத்தில் இவை அனைத்தும் பேசப்பட்டது. ஹத்ராஸ் வழக்கை அரசு கையாண்ட விதத்திற்கு எதிராக கட்சிக்குள்ளே ஏற்பட்டிருக்கும் அதிருப்திக்கும் இதுவே பதிலாக கையாளப்பட்டது.
சில  நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் இந்த விவகாரம் வெளியான விதம் குறித்த அதிருப்தியில் உள்ளனர். பலரும், யோகி ஆதித்யநாத் தன்னை சுற்றியுள்ள நபர்களால் தவறாக வழிநடத்தப்படுவதாக உணருகின்றனர் என்று ஒரு பாஜக எம்.பி. கூறினார்.
மற்றொரு கட்சி தலைவர், முதல்வருக்கு இது போன்ற விவகாரத்தில் அரசு ஆலோசகர்களின் உதவியாக இருந்திருக்க கூடும். ஆனால் அவர் அரசியல் உள்ளீடுகளையே அதிகம் நம்புகிறார். ஹத்ராஸ் விவகாரம் தொடர்பாக எந்த ஒரு அரசியல் கருத்தையும், நள்ளிரவில் அப்பெண்ணுக்கு சிதை மூட்டும் வரையில், அவர் எடுக்கவில்லை. மூன்று எம்.பி.க்கள் மற்றும் 2 எம்.எல்.ஏக்கள், முதல்வருக்கு முறையாக கள நிலவரம் அளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர்.

மூத்த பாஜக தலைவர், அரசின் நடவடிக்கை குறித்து கூறிய போது, “காவல்துறையினர் அப்பெண்ணின் உடலை இரவில் தகனம் செய்ய அழுத்தம் தருகின்றனர் என்று யாரும் முதல்வரிடம் கூறவில்லை. அனைத்தும் கேமராவில் பதிவு செய்யப்பட்டு பிறகு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. அது ஒரு எதிர்மறையான அலைகளை உருவாக்கியது. காலையில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை தவிர்ப்பதற்காகவே இவ்வாறு நடத்தப்பட்டது என்று முதல்வரை சமாதானம் செய்துள்ளனர். இது அரசு அதிகாரியின் பொறுப்பே தவிர அரசியல் பொறுப்பு கிடையாது. இது எங்களை மிகவும் காயப்படுத்தியுள்ளது. பிரச்சனை ஓய்ந்தவுடன், தளர்வுகளை நீக்கிவிட்டு மக்களைம், அக்குடும்பத்தினரை காண அனுமதித்தோம். ஆனால் அது தவறாகிவிட்டது என்று அவர் கூறினார். இரவில் நடந்த தகனம் மட்டுமல்லாமல் காவல்துறையினர் அரசியல்வாதிகளை நடத்தியதும் முக்கியமாக கருதப்பட்டது.

முன்னாள் மத்திய அமைச்சர் உமாபாரதி மற்றும் மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, தலித் சமூகத்தை சேர்ந்தவர், ஹத்ராஸ் விவகாரத்தில் மாநில அரசின் கையாளுதல் குறித்து கேள்வி எழுப்பினர். இந்த நேரம், இதற்கு மேல் முக்கியமாக இருந்துவிட இயலாது. இன்னும் மூன்று வாரத்தில் பீகாரில் தேர்தல் உள்ளது. தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆதரவு அதிகம் கொண்ட மாநிலம், அங்கு தலித்களுக்கு எதிரான ஒரு அலை பரவுவது பெரிய அரசியல் இழப்பிற்கு வழி வகுக்கும் என்று மூத்த தலைவர் கூறினார்.

இந்நிகழ்வு முதல்வர் மற்றும் அரசின் பிம்பத்தை பாதித்துள்ளது. இது நல்ல நிகழ்வல்ல. நாம் அனைத்து தரப்பில் இருந்தும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுத்து இழப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்று பாஜக தலைவர் ஒருவர் கூறினார். ” சிபிஐ விசாரணை வேண்டும் என்ற முடிவை இது விளக்குகிறது. விசாரணையை மேற்பார்வையிட உச்சநீதிமன்றத்தை நாங்கள் நாடுகின்றோம், மறைக்க எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Facing flak yogi adityanath cites caa crackdown accuses opposition of using hathras to divide

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X