பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தான் அணிந்திருக்கும் வாட்ச் குறித்து பேசினார். அது ரஃபேல் போர் விமானத்தின் பாகங்களால் ஆனது எனப் பேசினார். மேலும் தான் ஒரு தேசியவாதி என்றும் கூறினார். இந்நிலையில் 4 ஆடுகள் மட்டுமே சொத்தாக வைத்திருக்கும் அண்ணாமலை எப்படி விலை உயர்ந்த கடிகாரத்தை வாங்க முடியும்? என தி.மு.க கேள்வி எழுப்பியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விலையுயர்ந்த கடிகாரங்களை சேகரித்து வைத்ததற்கு பெயர் பெற்றவர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட விலை உயர்ந்த கடிகாரத்தை அணிந்ததற்காக சமூக வலைதளங்களில் பேசப்பட்டவர். இதைத் தொடர்ந்து தற்போது இந்த வாட்ச் சர்ச்சையில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இடம்பிடித்துள்ளார்.
அண்ணாமலையின் விலையுயர்ந்த (லட்சம்) வாட்ச் குறித்து திமுக கேள்வி எழுப்பிய பின்னும், அண்ணாமலையின் தேசியவாத கருத்து மற்றும் விளக்கம் அதிலிருந்து வெளிவர அவருக்கு உதவவில்லை. இந்த விவகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று முதலில் எழுப்பிய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 4 ஆடுகள் மட்டுமே சொத்தாக உள்ளதாகக் கூறும் பாஜக மாநிலத் தலைவர், எப்படி 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த கடிகாரத்தை வாங்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்வியை அண்ணாமலை தவிர்த்துவிட்டு நகர்ந்திருக்கலாம் என பாஜக கட்சியில் உள்ளவர்கள் கருதுகின்றார். ஆனால் அண்ணாமலை இதற்கு தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறார். 30 வயதை கடந்திருக்கும் அண்ணாமலை, தான் பாஜக மாநிலத் தலைவராவதற்கு முன்பே இந்த கடிகாரத்தை வாங்கியதாக விளக்கமளித்தார்.
சிறப்பு பதிப்பான இந்த கடிகாரம் ரஃபேல் போர் விமானத்தின் பாகங்களிலிருந்து தயாரிக்கப்பட்டது என்றும், தேசபக்தியின் காரணமாக கடிகாரத்தை எப்போதும் தான் அணிந்திருப்பேன் என்று அண்ணாமலை கூறினார். "நான் ஒரு தேசபக்தர் என்பதால் இதை அணிந்துள்ளேன், இந்த கடிகாரம் எனக்கு மிகவும் முக்கியமானது. என்னால் ரஃபேல் ஜெட் விமானத்தில் பறக்க முடியாது. ஆனால் இந்த கடிகாரத்தை நான் உயரிழக்கும் வரை அணிந்திருப்பேன்" என்றார்.
மேலும், ஊழல் விவகாரத்தில் திமுகவை எதிர்த்துப் போராட எப்போதும் தான் தயாராக இருப்பதாக அவர் ட்விட் செய்தார். மே 2021 இல் வாங்கப்பட்ட எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் பில் (நான் தமிழக பாஜக தலைவராக ஆவதற்கு முன் வாங்கப்பட்டது) எனது சொத்துவிவரம், வருவான வரி விவரம், ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பெற்ற சம்பளம் முதல் ராஜினாமா செய்யும் வரை அனைத்து சொத்து விவரங்களையும் விரைவில் வெளியிடுவேன். இதில் 1 பைசா சொத்து அதிகமாக சேமித்திருந்தால் எனது அனைத்து சொத்துகளையும் அரசிடம் ஒப்படைக்கப்படும் என அறிவித்தார். மேலும், தி.மு.கவில் உள்ளவர்கள், அதன் தலைவர்கள் இவ்வாறு செய்ய முடியுமா எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
அண்ணாமலை, செந்தில் பாலாஜி இருவரும் ஒரே பகுதி கரூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். முன் பல்வேறு பிரச்சனைகளிலும் இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் நடந்துள்ளது. ட்விட்டரில் மோதிக் கொள்வர். இந்நிலையில், நேற்று அண்ணாமலையின் வாட்ச் பில்லை இன்றே காட்டி பதிலளிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி ட்விட் செய்தார். மேலும், விலையுயர்ந்த வாட்ச் அணிவது தேசபக்தியா என்று கேட்டார்.
2021 தேர்தலில் அண்ணாமலை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அவரது சொத்துக்கள் குறித்த விவரம் அனைத்தும் உள்ளது. அவர் மக்களிடம் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும். விலையுயர்ந்த கடிகாரத்தை அணிவது தேசபக்தியா? என பாலாஜி கேட்டார்.
இதனிடையே, மாநில விளையாட்டுத் துறை அமைச்சரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதியின் வாட்ச் குறித்து பாஜக தலைவர் எஸ்.ஜி.சூர்யா பதிலடி கொடுத்துள்ளார். அதில், உதயநிதி அணிந்திருப்பது 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடிகாரம். அவருக்கு இதை வாங்க எங்கிருந்து பணம் வந்தது? அவருடைய தொழில் என்ன?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/