நடிகையும், அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த சி.ஐ.எஸ்.எஃப் பெண் காவலர் குல்விந்தர் கவுர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனும், சோனியா காந்தியுடனும் நிற்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.”இவள்தான் குல்விந்தர் கவுர். இவள்தான் கங்கனா ராவத்தை கன்னத்தில் அறைந்தவள்.. இப்போது தெரிகிறதா யார் மூலகாரணம் என்று” என்று அந்த புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் இந்தத் தகவலின் உண்மைத் தன்மையை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.
அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத், காங்கிரஸ் வேட்பாளரை விட 74,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், அவர் கடந்த 6-ம் தேதி அன்று டெல்லி செல்வதற்காக சண்டிகர் விமான நிலையத்துக்கு வந்தார்.
அப்போது, அங்கிருந்த சி.ஐ.எஸ்.எஃப் பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் எதிர்பாராத வகையில், கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்தார். தான் கங்கனாவை கன்னத்தில் அறைந்தது குறித்து குல்விந்தர் கவுர் பேசியிருந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி நிலையில், அதைத் தொடர்ந்து வெளியாகிய கருத்துக்களும் நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாகின.
இந்த நிலையில், கங்கனாவை அறைந்த சி.ஐ.எஸ்.எஃப் பெண் காவலர் குல்விந்தர் கவுர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனும், சோனியா காந்தியுடனும் நிற்பதாக கூறப்படும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது தொடர்பாக நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கி பார்த்துள்ளனர்.
அப்போது கடந்த பிப்ரவரி 14, 2024 அன்று ராஜஸ்தான் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ-வான திவ்யா மதர்னா, அந்தப் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
திவ்யா மதர்னா ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் சோனியாகாந்தியுடன் இருக்கும் இப்புகைப்படத்தை எடுத்தே தற்போது கங்கனா கன்னத்தில் அறைந்த சி.ஐ.எஸ்.எஃப் பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்று தகவல் பரப்பி வருகின்றனர் எனப்தையும் கண்டறிந்துள்ளனர்.
साथ में पधारे श्री राहुल गांधी जी एवं श्रीमती प्रियंका गांधी जी का भी स्वागत किया । Priyanka Gandhi Vadra Rahul Gandhi
Posted by Divya Mahipal Maderna on Wednesday, February 14, 2024
மேலும், திவ்யா தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில், "பா.ஜ.க ஐ.டி செல் அதன் குறுகிய மனநிலையை அறிமுகப்படுத்த ஒரு கணமும் தவறுவதில்லை. நேற்று முதல் ராஜஸ்தான் சட்டசபையில் மரியாதைக்குரிய திருமதி சோனியா காந்தியின் வேட்புமனுவில் எனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, என்னை சி.ஐ.எஸ்.எஃப் பெண் காவலர் குல்விந்த்ரா கவுர் என்று காட்டி மரியாதைக்குரிய காந்தி குடும்பத்தின் படத்தை தூசி தட்டி எடுக்க முயற்சி உள்ளது" என்று குறிப்பிட்ட தனது புகைப்படம் போலியாக பரவி வருகிறது என்று விளக்கம் அளித்துள்ளார்.
முடிவில், நடிகை கங்கனாவை அறைந்த சி.ஐ.எஸ்.எஃப் பெண் காவலர் குல்விந்தர் கவுர், ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸாருடன் நிற்பதாகப் பரவும் புகைப்பட செய்தி போலியானது என்பது கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் மூலமாக நிரூபித்துள்ளனர். மேலும், இது போன்ற தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
भाजपा IT सेल अपनी कुंठित मानसिकता का परिचय देने से क्षणिक नहीं चूकते। कल से पूरे देश में राजस्थान विधानसभा में आदरणीय...
Posted by Divya Mahipal Maderna on Thursday, June 13, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.