Advertisment

நேருவை ஆன்மிக தலைவர் கன்னத்தில் அறைந்தாரா? பாட்னாவில் உண்மையில் நடந்தது என்ன?

முன்னாள் பிரதமர் நேருவை ஆன்மிக தலைவரான சுவாமி வித்யானந்த் விதே அறைந்ததாக குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் புகைப்படத்தின் உண்மைத் தன்மையை நியூஸ்மீட்டர் இணைய பக்கம் சார்பார்த்துள்ளது.

author-image
WebDesk
New Update
Fact Check Was Ex PM Jawaharlal Nehru Slapped By Spiritual Leader Swami Vidyanand Videh Tamil News

முன்னாள் பிரதமர் நேருவை ஆன்மிக தலைவரான சுவாமி வித்யானந்த் விதே அறைந்ததாக குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் புகைப்படத்தின் உண்மைத் தன்மையை நியூஸ்மீட்டர் இணைய பக்கம் சார்பார்த்துள்ளது.

முன்னாள் பிரதமர் நேருவை ஆன்மிக தலைவரான சுவாமி வித்யானந்த் விதே அறைந்ததாக குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி  வரும் புகைப்படத்தின் உண்மைத் தன்மையை நியூஸ்மீட்டர் இணைய பக்கம் சார்பார்த்துள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ்மீட்டர் (Newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

Advertisment

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. அவரை மற்றொரு நபர் பின்னால் இருந்து இறுக்கமாக பிடித்து வைத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள பயனர்கள், புகைப்படம் எடுக்கப்பட்டபோது சுவாமி வித்யானந்த் விதே ஆர்ய சமாஜ உறுப்பினர்களை ‘அகதிகள்’ என்று குறிப்பிட்டதற்காக நேருவை அறைந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். 

அந்தப் புகைப்படத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பயனர்  ஒருவர், “காரணம், நேரு ஒரு விழாவில் தனது உரையில் ‘இந்து ஆர்ய சமாஜ்’ மக்கள் இந்தியாவில் அகதிகள் என்று கூறினார். விழாவின் தலைமை விருந்தினராக வந்திருந்த சுவாமி வித்யானந்த் விதேஜி இதைக் கேட்டதும் எழுந்து நின்று நேருவை மேடையிலேயே கடுமையாக அறைந்தார். மைக்கைப் பிடுங்கிக் கொண்டு, ‘ஆர்ய சமாஜத்தைச் சேர்ந்தவர்கள் அகதிகள் அல்ல; அவர்கள் எங்கள் முன்னோர்கள் மற்றும் இந்த நாட்டின் உண்மையான குடி மக்கள" என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், நேருவின் முன்னோர்கள் அரேபியர்கள் எனக் குறிப்பிட்டு விதேஜி அவரை அகதி என்று அழைத்ததாகவும் அந்தப் பயனர் தனது பதிவில் கூறியுள்ளார். 

உண்மை சரிபார்ப்பு 

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் நேருவை ஆன்மிக தலைவரான சுவாமி வித்யானந்த் விதே அறைந்ததாக  குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி  வரும் புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணைய பக்கம் ஆய்வு செய்துள்ளது. 

முதலில் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் அந்தப் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடல் மூலம் தேடியுள்ளனர். அப்போது, ஜனவரி 6, 1997 அன்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தால் அந்தப்  புகைப்படம் வெளியிடப்பட்டது எனக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அந்த செய்தி நிறுவனத்தின்படி, 1962 ஆம் ஆண்டு பாட்னாவில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள்  திரண்டுள்ளனர். அதனால், அந்தக் கூட்டத்தில் நேரு சிக்கிக் கொள்ளாமல் இருக்க, பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிரதமர் நேருவைப் பிடித்து இழுப்பதாக குறிப்பிட்டுள்ளனர். 

இந்த தகவலை வார்த்தை தேடல் பயன்படுத்தி தேடப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தை உள்ளடக்கிய தி இந்தியன் எக்ஸ்பிரஸில் இருந்து காப்பகப்படுத்தப்பட்ட செய்தி அறிக்கையை கண்டறிந்துள்ளனர். அந்த செய்தித்தாளின் படி, ஜனவரி 5, 1962 அன்று, நேருவைப் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியபோது, ​​காங்கிரஸ் கூட்டத்தின் போது குழப்பம் நீடித்தாக கூறப்பட்டுள்ளது.

அந்த செய்தித் தாளில், “தன் வாழ்நாள் முழுவதும் கூட்டத்தைக் கையாண்ட நேரு, மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றார். ஒரு கட்டத்தில், கோபமடைந்த நேரு, தனது சொந்த பாதுகாப்பை முற்றிலும் மறந்து, தனது முஷ்டிகளைப் பயன்படுத்தி, கூட்டத்திற்குள் குதிப்பதைத் தடுத்த பாதுகாவலர்களையும் காங்கிரஸ் தலைவர்களையும் தாக்கினார். முன்னதாக, நேரு உண்மையில் இரண்டு தன்னார்வலர்களை கூட்டத்தில் தூக்கி எறிந்து, பெருகி வரும் மக்களைக் கட்டுப்படுத்த உத்தரவிட்டார்" என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும், செய்தித்தாளின் பக்கம் 7-ல் நடந்த சம்பவம் விவரிக்கப்பட்டு இருக்கிறது. "நேருவைக் காண ஏராளமான மக்கள் ஆவலுடன் திரண்டதால், மக்களிடையே தள்ளுமுள்ளு நிலவியது. அவர் சுருக்கமாக உரையாற்றியபோது, மக்கள் ஓரளவு திருப்தி அடைந்ததார்கள். நேரு தனது உரையின் போது, ​​பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு இதயப்பூர்வமான வேண்டுகோள் விடுத்தார், அவர்களைத் தள்ளுவதைத் தவிர்க்குமாறு கூட்டத்தை வலியுறுத்தினார். நெரிசலில் சிக்கிய பெண்களும் குழந்தைகளும் மேடைக்கு வர அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பாகக் கேட்டுக் கொண்டார்." என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 8, 1962 தேதியிட்ட தி ஃப்ளோரன்ஸ் டைம்ஸின் காப்பகப்படுத்தப்பட்ட அறிக்கையில் அந்தப் புகைப்படம் கண்டறியப்பட்டுள்ளது. புகைப்படத்தின் அடிக்குறிப்பில், “இந்தியாவின் பாட்னாவில், வெள்ளிக்கிழமை, இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவை, ஒழுங்கை மீட்டெடுக்கும் தனிப்பட்ட முயற்சியில், ஆரவாரமான கூட்டத்திற்குள் நுழைவதைத் தடுக்க பாதுகாப்புப் பணியாளர்கள் அவரைத் தடுத்து நிறுத்துகிறார்கள். இந்திய விவசாயிகளின் காட்டுமிராண்டித்தனமான ஆர்ப்பாட்டத்தில், நேருவின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 24 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்." என்று கூறப்பட்டுள்ளது.

சுவாமி வித்யானந்த் விதே நேருவை அறைந்ததாக குறைப்படுவது குறித்தும் தேடப்பட்டுள்ளது. ஆனால், அது குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. வேத்-சன்ஸ்தான் என்ற இணையதளத்தின்படி, சுவாமி வித்யானந்த் விதேஹ் வேத அறிஞராகவும், யோக வாழ்க்கை முறையை ஆதரிப்பவராகவும் இருந்தார் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, அந்தத் தகவல் தவறானது என்றும், ஆரிய சமாஜத்தை சேர்ந்தவர்களை அகதிகள் என்று குறிப்பிட்டதற்காக நேருவை சுவாமி வித்யானந்த் விதே அறைந்தது தவறானது என்றும் நியூஸ் மீட்டர் இணைய பக்கத்தின் ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வரும் அந்தப் புகைப்படம் 1962 ஆம் ஆண்டு பாட்னாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், நேரு மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றபோது எடுக்கப்பட்ட படம் என்றும் நியூஸ்மீட்டர் இணைய பக்கம் கண்டறிந்துள்ளது. 

இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ்மீட்டர் (Newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

https://newsmeter.in/fact-check/nehru-slapped-for-calling-arya-samaj-members-refugees-no-picture-is-from-a-patna-party-meeting-739748#google_vignette

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fact Check Jawaharlal Nehru Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment