மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணி அரசாங்கத்துக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில், எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ், கால் டேட்டா தரவுகள், தொலைபேசி ஆடியோ, வீடியோ, காவல் துறைக்கு சமர்பித்த அறிக்கைகள் போன்றவற்றை ஆயுதமாக கையில் எடுத்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில், இவற்றை பொதுவாக சட்ட அமலாக்க நிறுவனங்களால் மட்டுமே சேகரிக்க முடியும்.
கடந்த ஒரு ஆண்டில், தேவேந்திர பட்னாவிஸ் ரகசிய தகவல்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தை அம்பலப்படுத்திய சுமார் அரை டஜன் நிகழ்வுகள் உள்ளன. புலனாய்வு அமைப்புகளின் உதவியின்றி இதுபோன்ற தகவல்களை அணுக முடியாது என கட்சிகள் கூறுகின்றன.
என்சிபி தலைவர் சரத் பவார் மார்ச் 9 அன்று, பட்னாவிஸ் வெளியிட்டதில் சில தகவல்களை மத்திய அரசின் கீழ் உள்ள நிறுவனங்களால் மட்டுமே பெற முடியும் என்றார்.
இந்த ரகசிய தகவல்கள் எப்படி கிடைக்கின்றன என்பதை பட்னாவிஸ் இதுவரை தெரிவிக்கவில்லை. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் ஒரு முறை கேட்கையில், இதனை வேண்டுமானால் பட்னாவிஸ் புலனாய்வு விசாரணை என கூறுங்கள் எனத் தெரிவித்தார்.
பிப்ரவரி 25 அன்று முகேஷ் அம்பானி இல்லத்திற்கு வெளியே ஸ்கார்பியோ காரில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய பட்னாவிஸ், அந்த கார் திருடுபோனதாக கூறிய மன்சுக் ஹிரானின் தொலைப்பேசி அழைப்பு தரவுகளை விவரித்தார்.
ஸ்கார்பியோ காரைக் காணவில்லை என்று புகார் அளித்த நபர், அம்பானி வீட்டின் வெளியே கார் நிற்பதற்கு முன்பே, சச்சின் இந்துராவ் வாஸ் என்ற நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு கால் செய்து பேசியுள்ளார். அதாவது, காரின் உரிமையாளரும், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் வாஸூம் ஏற்கனவே தொடர்பில் இருந்துள்ளனர். Waze- Hiran இடையேயான தொடர்பு தெரிந்ததையடுத்து, இந்த வழக்கின் விசாரணை பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. விசாரணையில், இருவருக்கும் பழக்கம் இருந்ததும், அம்பானி இல்லத்திற்கு வெளியே ஒரு பயங்கரமான பயத்தை உருவாக்கவே காரை நிறுத்தியதும் தெரியவந்தது.
அதேசமயம், ஹிரன் பிடிபட்டால் தகவல் சொல்லிவிடுவான் என்கிற பயத்தை, அவரை வாஸ் கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. மார்ச் 9 அன்று சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய ஃபட்னாவிஸ், மன்சுக் ஹிரானின் மனைவியின் அறிக்கை ஆச்சரியமளிக்கிறது. அவர், தனது கணவரின் மரணத்திற்கு Waze தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார் என்றார். ஹிரனின் உடல் மார்ச் 5 அன்று மும்ப்ரா ஓடையில் இருந்து மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மன்சுக் ஹிரானின் கால் டேட்டா தரவுகளை பட்னாவிஸால் எப்படி பெற முடிந்தது என்பது தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இவற்றை அணுக சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. இதுதான், உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு சந்தித்த பட்னாவிஸின் முதல் ஆயுதம் ஆகும்.
தொடர்ந்து, மார்ச் 23 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மாநிலத்தில் உள்ள ஐபிஎஸ் மற்றும் ஐபிஎஸ் அல்லாத அதிகாரிகள், பதவிக்காக உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக்-வுடன பேசிய ஆடியோ கால் ரெக்கார்டிங் இருப்பதாகவும், சுமார் 6.3 ஜிபி டெட்டா கொண்ட அந்த பென்டிரைவ் உள் துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்தேன் என்றார்.
பட்னாவிஸின் அறிக்கை ஆளும் அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. ரஷ்மி சுக்லா தலைமையிலான மகாராஷ்டிர மாநில தகவல் துறை (SID) மூலம் MVA பதவிக்காலத்தில் அழைப்புகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும் பேசிய அவர், இந்த தகவலை சுக்லா, டிஜிடி சுபோத் ஜெய்ஸ்வாலுவுக்கு தெரிவித்தார். அவர் தாக்கரேக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், தாக்கரே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பட்னாவிஸ் குற்றம் சாட்டினார்.
எஸ்ஐடியின் முக்கியமான அழைப்புப் பதிவுகள் எதிர்க்கட்சித் தலைவரால் பகிரப்பட்டதால், இதனை அதிகாரிகள் ரகசியச் சட்டத்தின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்ய வழிவகுத்தது. இந்த வழக்கில், மும்பை போலீசார் சுக்லா மற்றும் ஃபட்னாவிஸின் வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, அடுத்தாண்டு மார்ச் 8 அன்று மீண்டும் பென் ட்ரைவுடன் பட்னாவிஸ் வருகை தந்தார். இந்த முறை, அவரது இலக்கு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக வழக்குகளை பதிவு செய்ய ஆளும் கட்சியுடன் பணியாற்றும் சிறப்பு அரசு வக்கீல் பிரவின் சவான் ஆகும். பட்னாவிஸ் பேசுகையில், தன்னிடம் சுமார் 125 மணி நேரம் ஓடும் வீடியோ இருப்பதாகவும், அதில் சவான் அலுவலகத்தில் பாஜக தலைவர்களை எப்படி பிரச்சினைக்குள கொண்டு வருவது குறித்து ஆலோசிப்பது இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.பட்னாவிஸ், யாருக்கும் தெரியாமல் பவான் அலுவலகத்தில் வீடியோ கேமரா பொருத்தி அதனை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து NCP இன் சரத் பவார் கூறுகையில், இதனை செயல்படுத்த பவர்புல் நிறுவனங்கள் வேண்டும். அவை மத்திய அரசிடம் மட்டுமே உள்ளன. அவர்கள், மாநில அரசின் அலுவலகத்திற்குள் நுழைந்து, ரகசிய தகவல்களை படம்பிடித்திருக்க வேண்டும். இவ்விவகாரம் குறித்து மாநில அரசு விசாரணை நடத்தும் என்றார். இந்த வார தொடக்கத்தில், மாநில உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல், சவான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக அமர்வுக்கு தெரிவித்தார்.
ராஜினாமா தகவலை வெளியிட்ட அதே நாளில், வக்ஃப் வாரிய உறுப்பினர்களான முகமது அர்ஷத் கான், முடாசிர் லாம்பே ஆகியோருக்கு இடையே நடந்ததாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய மற்றொரு பென் டிரைவுடன் பட்னாவிஸ் வருகை புரிந்தார்.
அதுகுறித்து பேசிய பட்னாவிஸ், தனது மாமனார் இப்ராஹிமின் கூட்டாளி என்று லாம்பே கூறியதாகவும், அதே சமயம் கான் தனது மாமா அன்டர்வேல்டின் முக்கிய நபர் என்று கூறியது இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து பாதுகாப்பு துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டபோது, கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள சட்ட அமலாக்க முகவர் உதவியின்றி இரு நபர்களுக்கு இடையேயான தொலைபேசி உரையாடல்களுக்கான அணுகலைப் பெற முடியாது. சில அதிகாரிகள் இன்னும் பட்னாவாஸுடன் உறவை வைத்துள்ளனர். இந்த அதிகாரிகள் விரைவில் பாஜக ஆட்சிக்கு வரும் என்று நம்புகிறார்கள். அதன் காரணமாக, அவர்களுடன் நட்புறவை மேற்கொள்ள விரும்புகிறார்கள் என தெரிவித்தார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் கூறுகையில், ஐந்தாண்டு காலம் மாநிலத்தின் முதல்வராகவும், உள்துறை அமைச்சராகவும் பட்னாவிஸ் இருந்தார். அப்போது அதிகாரிகளுடன் ஏற்பட்ட நல்லுறவை பயன்படுத்தி, இந்தத் தகவல்களை பெற்றுள்ளார். எவ்வாறாயினும் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு உணர்வுடன் அதனை வெளிப்படுத்தாமலும் அல்லது சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ரகசிய சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக மத்திய மோடி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது. எனவே, சட்டத்தை மீறவில்லை என்பதை பட்னாவிஸ் உறுதிபடுத்த வேண்டும் என்றார்.
சிவசேனா செய்தித் தொடர்பாளர் மனிஷா கயண்டே கூறுகையில், “தன்னிடம் உள்ள தகவல்களை அரசுக்கு ஆக்கப்பூர்வமாக வழங்குவதற்குப் பதிலாக, பட்னாவிஸ் அரசியல் நோக்கங்களுக்காக அதைப் பயன்படுத்திக் கொண்டார் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil