Advertisment

'போலி விசா': இந்திய மாணவர்கள் 700 பேரை கனடாவில் இருந்து நாடு கடத்த முடிவு

இந்த மாணவர்கள் கடந்த 2018-19 ஆம் ஆண்டு கல்வி அடிப்படையில் கனடா சென்றுள்ளனர். அங்கு அவர்கள் நிரந்தரக் குடியுரிமைக்கு (பிஆர்) விண்ணப்பித்தபோது தான் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்ததுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
fake visa: 700 Indian students to deport from Canada Tamil News

This education fraud is one of its kind which came to the fore in Canada for the first time. Experts said that such a big fraud was a result of a large number of applicants to Canada.

வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் சமர்ப்பிக்கப்பட்ட அனுமதி கடிதங்கள் போலியானவை என அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து, 700க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் அங்கிருந்து இருந்து நாடு கடத்தப்பட உள்ளனர். இந்த நாடு கடத்தல் கடிதங்களை கனடா எல்லைப் பாதுகாப்பு ஏஜென்சி (சிபிஎஸ்ஏ - CBSA) மாணவர்களுக்கு வழங்கியுள்ளது.

Advertisment

சமீபத்திய ஊடக அறிக்கைகளின்படி, இந்த 700 மாணவர்கள் பிரிஜேஷ் மிஸ்ரா தலைமையிலான கல்வி இடம்பெயர்வு சேவைகள் (ஜலந்தரில் அமைந்துள்ள) மூலம் படிப்பு விசாவிற்கு விண்ணப்பித்துள்ளனர். அவர் விமான டிக்கெட்டுகள் மற்றும் பாதுகாப்பு வைப்புகளை தவிர்த்து, முதன்மையான ஹம்பர் கல்லூரியில் சேர்க்கை கட்டணம் உட்பட அனைத்து செலவுகளுக்கும் ஒரு மாணவருக்கு ரூ. 16 லட்சத்திற்கும் மேல் வசூலித்துள்ளார்.

இந்த மாணவர்கள் கடந்த 2018-19 ஆம் ஆண்டு கல்வி அடிப்படையில் கனடா சென்றுள்ளனர். கனடாவில் அவர்கள் நிரந்தரக் குடியுரிமைக்கு (பிஆர்) விண்ணப்பித்தபோது இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்ததுள்ளது. அதற்கான 'அட்மிஷன் ஆஃபர் லெட்டர்கள்' ஆய்வுக்கு உட்பட்டுத்தப்பட்டுள்ளன. அதாவது, மாணவர்களுக்கு விசா வழங்கப்பட்ட ஆவணங்களை சிபிஎஸ்ஏ ஆய்வு செய்துள்ளது. அதில், 'சேர்க்கைக்கான கடிதங்கள்' போலியானவை என்பது தெரிய வந்துள்ளது.

இந்த மாணவர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே தங்கள் படிப்பை முடித்து, பணி அனுமதி மற்றும் பணி அனுபவத்தைப் பெற்றுள்ளனர். அவர்கள் நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தபோதுதான் அவர்கள் சிக்கலில் சிக்கியுள்ளனர். இந்த கல்வி மோசடியானது கனடாவில் முதன்முறையாக வெளிச்சத்திற்கு வந்த ஒன்றாகும். கனடாவுக்கு அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்ததன் விளைவாக இவ்வளவு பெரிய மோசடி நடந்ததாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக கனடாவுக்கு மாணவர்களை அனுப்பும் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த ஆலோசகர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், "இதுபோன்ற மோசடிகளில், கல்லூரிகளின் போலி சேர்க்கைக் கடிதங்களைப் பெறுவது முதல், விசா பெறுவதற்காக மாணவர்களுக்கு போலியான கட்டண ரசீதுகள் வழங்குவது வரை பல காரணிகள் சம்பந்தப்பட்டுள்ளது. கல்லூரிகளில் கட்டணம் செலுத்திய பின்னரே விசா வழங்கப்படுகிறது." என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள கபுர்தலாவைச் சேர்ந்த ஒரு ஆலோசகர், “பெரும்பாலான மாணவர்களுக்கு கனடாவில் இறங்கிய பிறகு அவர்கள் படிக்க விருப்பம் தெரிவிக்காத கல்லூரிகளின் சேர்க்கைக் கடிதங்கள் வழங்கப்படுகின்றன. இதனால், அவர்கள் மற்ற கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டனர் அல்லது அடுத்த செமஸ்டருக்காக காத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதாவது விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் போது ஆவணங்களில் காட்டப்பட்ட செமஸ்டரில் அல்ல.

மேலும், கனடாவிற்கு சென்று கல்வி கற்க அதிகமான இந்திய மாணவர்கள் விரும்புகின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் சில மோசடி ஏஜெண்டுகள் கனடாவை தளமாகக் கொண்ட தனியார் கல்லூரியுடன் தொடர்பு கொண்டு, அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்த 700 மாணவர்களில், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய ஜலந்தரைச் சேர்ந்த ஒரு மாணவி, (பெயர் வெளியிட விரும்பவில்லை) கனடாவில் உள்ள ஒரு பொதுக் கல்லூரியில் தான் கணினி அறிவியலில் டிப்ளமோ முடித்திருப்பதாக கூறியுள்ளார். அவர் விசா கோரும் நேரத்தில், அவருக்கு தனியார் கல்லூரியில் சேர சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டதாகவும், ஆனால், அவர் தனக்கு ஒரு பொது (அரசு) கல்லூரியில் தான் சேர்க்கை கடிதம் வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து, அவரது கட்டணத்தை திருப்பிக் கொடுத்த ஏஜெண்ட், புதிய கல்லூரியில் சேர்க்கை பெற அவருக்கு வசதி செய்துள்ளார். மேலும், கனடா சென்ற பிறகு கல்லூரியை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அந்த ஆலோசகர் கூறியதாக அவர் கூறியுள்ளார்.

இதுபோன்று, ஏஜெண்டிடம் கமிஷன் செலுத்திய பிறகு, கனடா சென்றவுடன் பல மாணவர்கள் தங்கள் கல்லூரியை மாற்றியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல மாணவர்கள் தங்கள் கட்டணத்தை மேற்படி ஏஜெண்டுகள் தங்களுக்குத் திருப்பிக் கொடுத்ததாகக் கூறினர். அதன் காரணமாக அவர்கள் வேறு சில கல்லூரிகளில் படிப்பில் சேர்ந்துள்ளனர். ஆனால் அவர்கள் அதைப் பற்றி கனட அரசாங்கத்திற்குத் தெரிவிக்கவில்லை. மேலும் கட்டணத்தை (ஏஜென்ட் மூலம்) திருப்பியளிப்பது, ஏஜென்ட்டைப் பற்றி குறைவான சந்தேகத்தை ஏற்படுத்தியது.

மற்றொரு ஆலோசகர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், இந்த வழக்கில் ‘அட்மிஷன் ஆஃபர் கடிதங்களை’ வழங்கிய கல்லூரிகளின் பங்கு, அதாவது அவர்கள் (கல்லூரிகள்) உண்மையில் அவற்றை வழங்கியதா அல்லது அவை ஏஜென்டால் வழங்கப்பட்ட போலியானதா என்பது ஆராயப்பட வேண்டும். மாணவர்கள் பெரும்பாலும் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி அறியாமல் இருப்பதால் இதுபோன்ற கல்லூரிகளின் தலையீட்டை நிராகரிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

முன்னதாக மாண்ட்ரீலில் உள்ள சில கல்லூரிகள் சர்வதேச மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகமாக இருந்ததால் கியூபெக் அரசாங்கத்தால் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டன. மேலும் இந்த கல்லூரிகளில் சேர்க்கை பெற்ற மாணவர்கள் உயர்கல்வி அமைச்சகத்திடம் புகார் அளிக்க இந்திய உயர் தூதரகத்தை அறிவுறுத்தியுள்ளனர். இந்த மாணவர்களுக்கு பின்னர் எதிர்மறையான மதிப்பாய்வு வழங்கப்பட்டது. ஆனால் இப்போது அவர்கள் கனட உயர் தூதரகத்தால் அனுதாபத்துடன் கருதப்படுகிறார்கள் என்று ஒரு ஆலோசகர் கூறினார். நாடுகடத்தல் அறிவிப்புகளை நீதிமன்றத்தில் சவால் செய்வதே மாணவர்களின் ஒரே வழி என்றும், அங்கு நடவடிக்கைகள் 4 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.

போலீஸ் கமிஷனர் ஜலந்தர் குல்தீப் சிங் சாஹல் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், தற்போது இதுபோன்ற புகார் எதுவும் தனது கவனத்திற்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

விண்ணப்பத்தில் கையெழுத்திடாததால், ஏஜெண்டுகள் மிகவும் சாமர்த்தியமாகச் செய்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். அவர் (ஏஜெண்ட்) எல்லாவற்றிலும் மாணவர்களால் கையொப்பமிடப்பட்டார். அதாவது மாணவர்கள் சுய விண்ணப்பதாரர்களாக ஆக்கப்பட்டனர். எனவே, இந்த மோசடியில் அவருக்கு (ஏஜென்ட்) தொடர்பு இருப்பதை இப்போது நிரூபிப்பது கடினம். அதே நேரத்தில், மாணவர்களின் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்பதும் கடினம். ஆனால், மாணவர்கள் அனைவரும் அப்பாவிகள் என்பதே நிதர்சனமான உண்மை என சில மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Canada India Punjab Students
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment