/tamil-ie/media/media_files/uploads/2022/09/KCR-Nitish-Thejasvi.jpg)
தெலங்கானா முதல்வர் கே.சி.ஆர் என்று அழைக்கப்படும் சந்திரசேகர் ராவ், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை பாட்னாவில் புதன்கிழமை சந்தித்தார். கூட்டத்திற்குப் பிறகு, சமீபத்தில் பாஜக உடனான உறவை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார் , நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை அதிகப்படியான பிரச்சாரம்-பப்ளிசிட்டி” என்று சாடினார். மேலும், மாநிலங்களின் தேவைகள் குறித்து மோடி அரசுக்கு நுண்ணுணர்வு இல்லை என்று குற்றம் சாட்டினார்.
பிஜேபிக்கு எதிராக ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க கேசிஆர்-ன் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்) நம்பிக்கையுடன் இருப்பதால், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் உடனான சந்திப்பின் போது, தெலுங்கானா முதல்வர் தனது வழக்கமாக அணியும் முழு வெள்ளை உடையை அணிந்திருந்தார். மேலும், மாநிலத்திற்கு வெளியே சுற்றுப்பயணங்களில் அவர் ஒரு கவ்பாய் தொப்பியும் அணிந்திருந்தார். பச்சை நிற சரிகையுடன் கூடிய வெள்ளை தொப்பியில் தெலுங்கில் தெலுங்கானா என்று எழுதப்பட்டுள்ளது. பச்சை நிறம் டி.ஆர்.எஸ் கொடியின் ஒரு பகுதியாகும். கடந்த வாரம் தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கொங்கராலனில் புதிதாக கட்டப்பட்ட ரங்கா ரெட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தின் திறப்பு விழாவின் போது கே.சி.ஆர் தொப்பி அணிந்திருந்தார்.
இந்திய வரலாற்றில் தொப்பியை விவாதப் பொருளாக்கிய அரசியல்வாதி கே.சி.ஆர் மட்டும் அல்ல. சுதந்திர இயக்கத்தின் கடந்த சில பத்தாண்டுகளில் காங்கிரஸ்காரர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் காந்தி தொப்பி எங்கும் பரவியது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு காந்தி தொப்பி அணிந்த பிரபலமான அரசியல்வாதிகளில் ஒருவராக இருந்தார்.
தொப்பி அணிந்த சில பிரபல அரசியல்வாதிகளைப் பற்றிப் பார்ப்போம்.
நரேந்திர மோடியின் ‘பஹாடி தொப்பி’
இந்த ஆண்டு குடியரசு தின நிகழ்வின் போது, பிரதமர் நரேந்திர மோடி, பொது மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பிரம்ம கமல் (பிரம்ம தாமரை) மலருடன் பொறிக்கப்பட்ட ‘பஹாடி தொப்பி’ அணிந்திருந்தார். சில வாரங்களுக்குப் பிறகு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்ற உத்தரகாண்ட் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மலர் பிரம்ம கமலம் என்பதால் இந்தத் தேர்வு குறிப்பிடத்தக்கது. அருணாச்சல பிரதேசத்திற்கு வருகை தந்தபோது மக்களின் பாரம்பரிய தொப்பி அணிந்தது உட்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் மோடி பல தொப்பிகளை அணிந்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/PTI-PM-Modi-Republic-Day-incopy.jpg)
அகிலேஷ் யாதவ்வின் சிவப்பு தொப்பி
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது கட்சியின் சிவப்பு தொப்பியுடன் பொது இடங்களில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். சமாஜ்வாடி கட்சியின் கருத்துப்படி, பிரகாசமான சிவப்பு தொப்பிகள் உ.பி.யின் நெரிசலான அரசியல் களத்தில், சமாஜ்வாடி கட்சி தலைவர்களையும் தொண்டர்களையும் உடனடியாக அடையாளம் காணவும், தைரியமான சமூக கருத்துகளை வெளியிடவும் உதவுகின்றன.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த உ.பி சட்டமன்றத் தேர்தலின்போது, ‘லால் தொப்பி வாலே’ (சிவப்பு தொப்பி அணிந்தவர்கள்) அவர்கள் ஆட்சியில் இருக்க விரும்புவதால், பயங்கரவாதிகளுக்கு கருணை காட்டவும், அவர்களை சிறையில் இருந்து விடுவிக்கவும், மோசடிகள் மூலம் அவர்களின் கஜானாவை நிரப்பவும் விரும்புகிறார்கள். இது மாநிலத்திற்கு ‘ரெட் அலர்ட்’ போன்றது என்று பிரதமர் மோடி பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டபோது, இந்த தொப்பி சர்ச்சையானது.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/Askhilesh.jpg)
பிரதமரின் கருத்து தெரிவித்த ஒரு நாள் கழித்து, சமாஜ்வாடி கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இன்னும் பல கட்சித் தலைவர்களின் சிவப்புத் தொப்பிகளின் படங்களையும், ராஷ்டீரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரியுடன் அகிலேஷ் நடத்திய கூட்டத்தின் வீடியோவையும் வெளியிட்டது. அதில் “யே கிராந்திகாரி லால் ரங் கி தொப்பிகள் (அந்த புரட்சிகர சிவப்பு தொப்பிகள்)” என்று குறிப்பிட்டது.
வி.பி. சிங்கின் கம்பளி தொப்பி
இந்தியாவின் 8வது பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங், கராகுல் இனத்தைச் சேர்ந்த செம்மறி ஆடுகளின் ரோமங்களில் இருந்து தயாரிக்கப்படும் காரகுலி தொப்பியை அணிந்தார். அது அவரை விமர்சகர்களின் கேலிக்கு ஆளாக்கியது. ‘ஜின்னா டோபி’ அணிந்து சிறுபான்மையினரை திருப்திப்படுத்த முயன்றதற்காக சிங் மீது அவர்கள் வசைபாடினார்கள். பாகிஸ்தான் நிறுவனர் ஜின்னா கராகுலி தொப்பிகளை அணிந்ததற்காக அறியப்பட்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/VP-singh.jpg)
எம்.ஜி.ஆர் அணிந்த வெள்ளை தொப்பி
/tamil-ie/media/media_files/uploads/2022/09/mgr-1.jpg)
எம்ஜிஆர் என்று அழைக்கப்படும் அதிமுக நிறுவனர் மருதூர் கோபாலன் ராமச்சந்திரனை மற்ற அரசியல்வாதிகளிடம் இருந்து வேறுபடுத்திய அம்சங்களில் ஒன்று அவர் அணிந்திருந்த வெள்ளை கம்பளி தொப்பி. 1977 முதல் 1987 இல் இறக்கும் வரை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த நடிகர் அரசியல்வாதி, எப்போதும் வெள்ளைத் தொப்பி அணிந்திருந்தார்.
2017-ம் ஆண்டு இடைத்தேர்தலில் அதிமுகவின் சசிகலா அணி தொப்பியை சின்னமாக தேர்வு செய்தது. இந்த முடிவை நியாயப்படுத்திய குழுவின் தலைவர்களில் ஒருவரான எம்.தம்பிதுரை, ‘தொப்பி’ சின்னம் எம்.ஜி.ஆருடன் எளிதாக இணைவதால் வாக்காளர்களைக் கவர உதவும் என்றார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.