farm laws Tamil News: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரில் புதிதாக 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி முதல் தலைநகர் டெல்லி எல்லையில் போராடி வருகின்றனர்.

சுமார் ஒராண்டிற்கு மேலாக போராடி வரும் விவசாயிகள் அந்த 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். தொடர்ந்து போராட்ட குழுவுக்கும் மத்திய அரசின் பேச்சு வார்த்தை குழுவுக்கும் இடையே பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து, தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கும் திரும்பபெறப்படுவதாக அறிவித்தார். மேலும், 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும் என்றும், போராட்டம் செய்து வரும் விவசாயிகள் வீடுகளுக்கு செல்லுமாறு பிரதமர் மோடி அந்த உரையில் குறிப்பிட்டார்.
வாபஸ் பெறப்பட்ட 3 வேளாண் சட்டங்கள் என்னென்ன?

சட்டம் 1 – அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020.
சட்டம் 2 – விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020.
சட்டம் 3 – விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020.


இந்த 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது ஏன்? பிரதமர் மோடி விளக்கம்:
மத்திய அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குறிய 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் தெரிவித்துள்ள நிலையில், அதில் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது குறித்த விளக்கம் அளித்துள்ளார்.

“வேளாண் சட்ட நலனை ஒரு பிரிவு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. தொடர் முயற்சி செய்தும் வேளாண் சட்ட நலனை விளக்குவதில் வெற்றி பெற முடியவில்லை. வேளாண் சட்டங்களின் நலனை விளக்க முடியாதது எங்களுடைய தவறு என கருதுகிறேன். வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வேளாண் துறைக்கு பல்வேறு புதிய நடவடிக்கைகள் மூலம் ஊக்கமளிக்க குழு அமைக்கப்படும். குழுவில் விவசாயிகள், விஞ்ஞானிகள், வல்லூர்கள் இடம்பெறுவார்கள். விவசாயிகள் நலனுக்காக தொடர்ந்து உழைப்போம்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Addressing the nation. https://t.co/daWYidw609
— Narendra Modi (@narendramodi) November 19, 2021
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“