Delhi Farmers Protest : மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் டெல்லி எல்லையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு இந்தியாவில் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், விவசாயிகளை சமாதானப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு மேற்கொண்ட பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இந்த போராட்டம் மேலும் தீவிரமடைந்து வருகிறது. இதில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், இந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
இதனால் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த மாதம் 26-ந் தேதி குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையை நோக்கி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். ஆனால் இந்த பேரணியில் வன்முறை வெடித்ததால் விவசாயி ஒருவர் பலியானர். இதனால் மேலும் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு விவசாயிகள் நாடு முழுவதும் ஒருநாள் அடையாள சாலை மறியல் போராட்டத்தை தொடங்கினர். ஆனால் இந்த போராட்டத்தில் இன்னும் முடிவு எட்டப்படாமல் உள்ளது.
மேலும் இதுதொடர்பாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், இந்த சட்டம் தொடர்பாக குறைகளை நிவர்த்தி செய்ய குழு அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்தது. ஆனால் கடந்த ஜனவரி 26-ந் தேதி நடைபெற்ற டிராக்டர் பேரணி வன்முறைக்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பலர் கைது பட்டியலில் இடம் பிடித்தது. இதனால் விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையை மத்திய அரசு நிறுத்தியது.
இதில் கடைசியாக ஜனவரி 22-ந் தேதி நடைபெற்ற 12-வது கட்ட பேச்சுவார்த்தையில், 3 வேளாண் சட்டங்களையும் ஒன்ற்றை ஆணடுகாலம் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் அரசாங்க அதிகாரிகள் மற்றும் உழவர் சங்க தலைவர்கள் அடங்கிய குழு அறிக்கை தாக்கல் செய்யும் வரை மத்திய அரசின் இந்த கோரிக்கை ஏற்கப்போவதில்லை என்று விவசாய சங்க தலைவர்கள் மத்திய அரசின் இந்த முடிவை நிராகரித்தனர். மேலும் அரசு ஒரு புதிய சட்டத்தை தயார் செய்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய கடைசிகட்ட பேச்சுவார்த்தையில், வேளாண்சட்டங்களை நடைமுறைபடுத்த மத்திய அரசு தீவிரம் காட்டியது. மேலும் மத்திய அரசின் இந்த திட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால், எங்களது அனைத்து கோரிக்கைகளும் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் புதிய திட்டத்தை உருவாக்கி அது குறித்து ஆலோசகை நடத்த எங்களுக்கு அழைப்பு விடுத்தால், அடுத்த நாளே அந்த அழைப்பை ஏற்று நாங்கள்விவதத்திற்கு தயார் என்று பி.கே.யு ஏக்தாவின் (டகவுண்டா) பொதுச் செயலாளர் ஜக்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வேளாண் தலைவர்கள் மற்றும் போராடும் விவசாயிகள் மீதாக வழக்கு எதிர்கால பேச்சுவார்த்தைக்கு தடையாக இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள லோக் பாலாய் இன்சாஃப் நலன்புரி சங்கத்தின் தலைவர் பல்தேவ் சிங் சிர்சா கூறுகையில், எங்கள் பேச்சுவார்த்தையின் முதல் நோக்கம் வழக்குகளை திரும்ப பெறுவது அல்ல. எந்த ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தாவதற்கு முன்பு நாங்கள் எந்த நிபந்தனையும் விதிப்பதற்கு யோசிக்கவில்லை. எங்கள் மீதாக வழக்கு குறித்து நாங்கள் ஒருபோதும் கவலைப்படவில்லை. நாங்கள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு செல்லும்போது வழக்குகளை வாபஸ் பெறுவது எங்களது கடைசி கோரிக்கையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கில் அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நடிவடிக்கை என்னவாக இருக்கும் என்ற நிலையில், அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகாக நாங்கள் காத்திருக்கவில்லை என்று விவசாயிகள் கூறியுள்ளனர். மேலும் வரும் "ஞாயிற்றுக்கிழமை மெழுகுவர்த்தி அணிவகுப்புக்கு பொதுமக்களின் பங்களிப்பைப் பெற பல திட்டங்கள் உள்ளன என்றும், தொடர்ந்து பிப்ரவரி 18 அன்று ரெயில் ரோகோ என்றும் தெரிவித்துள்ள அகில இந்திய கிசான் கூட்டமைப்பின் தலைவர் பிரேம் சிங் பாங்கு "விவாசயிகள் நடத்தி வரும் போராட்டம், அனைத்து மாநிலங்களிலும் வளர்ந்து வருகிறது. பேச்சுவார்த்தைக்காக அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் முயற்சியாக இது உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.