/tamil-ie/media/media_files/uploads/2020/12/justin-trudeau-1.jpg)
Farmer protests: India summons envoy, Trudeau reiterates stand on peaceful protests : இந்தியாவில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று சங்கு எல்லையில் உள்ள விவசாயிகள் ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் உலகமெங்கும் இருக்கும் இந்தியர்களின் பார்வைக்கு இந்த போராட்டம் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. கனட பிரதமர், விவசாயிகளின் அமைதியான போராட்டடத்திற்கு ஆதரவை அளிப்பதாக கூறினார். மேலும் விவசாயிகளின் கருத்துகளை கேட்டு அவர்களின் தேவையை நிறைவேற்றுமாறும் குருநானக் பிறந்த நாள் அன்று நடைபெற்ற ஆன்லைன் நிகழ்வு ஒன்றில் பேசினார்.
மேலும் படிக்க : சட்டங்களை ரத்து செய்தே ஆகவேண்டும் – பேச்சுவார்த்தையில் விவசாயிகள் விடாப்பிடி
இந்நிலையில் அதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியாவில் இருக்கும் கனட தூதருக்கு கண்டனங்களை தெரிவித்தது இந்தியா. மேலும் இது போன்ற உள்நாட்டு விவகாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் அது இருநாட்டு உறவுகள் மத்தியில் கடும் தாக்கம் ஏற்படும் என்று கூறினார். இந்நிலையில், கனடா உலகின் எந்த இடத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றாலும் அதனை ஆதரிக்கும். நாங்கள் பேச்சுவார்த்தையில் அரசு ஈடுபடுவதை நாங்கள் விரும்புகின்றோம் என்று ஒட்டாவாவில் பேசிய அவர் இந்தியாவின் நடவடிக்கை குறித்து கூறினார்.
மேலும் படிக்க : விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு; நெட்டிசன்கள் கருத்து என்ன?
இது போன்ற கருத்துகளால் கனடாவில் இருக்கும் இந்திய அலுவலகங்கள் முன்பு கூட்டம் கூடி போராட்டம் நடைபெறும் நிலை உருவாகியுள்ளது. கனட அரசு இந்திய அதிகாரிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். மேலும் இது போன்ற செயலை நியாயப்படுத்தும் அறிவிப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us