Advertisment

டீ கொண்டு சென்ற ஹரிவன்ஸ்... வாங்க மறுத்த சஸ்பெண்ட் எம்பி.க்கள்: ராஜ்யசபா தொடர் முடக்கம்

சஸ்பெண்ட்  செய்யப்பட்ட 8 உறுப்பினர்களுக்கு தேநீர் அளித்த ஹரிவன்ஷ் சிங்கின் செயல் பாராட்டுக்குரியது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
டீ கொண்டு சென்ற ஹரிவன்ஸ்... வாங்க மறுத்த சஸ்பெண்ட் எம்பி.க்கள்: ராஜ்யசபா தொடர் முடக்கம்

தங்களை சஸ்பெண்ட் செய்து பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெறக் கோரி, 8 உறுப்பினர்கள் நேற்று இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

சமாதான முயற்சியாக , மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் சிங் தர்ணாவில் ஈடுபட்டு வரும்  உறுப்பினர்களுக்கு இன்று காலை தேநீர் அளித்தார்.  மாநிலங்களவை துணைத் தலைவர், இன்று அதிகாலை  செய்தியாளர்களுடன் தேநீர் அளித்ததாகவும், கேமராக்கள் இல்லாமல் தங்களுடன் அமர்ந்து விவாதம் நடத்துமாறு மூத்த எம்.பி. ஒருவர் ஹரிவன்ஷ் சிங்கிடம் குறிப்பிட்டார்.

துணைத் தலைவரின் தேநீர் உபசரிப்பு நல்லெண்ண நடவடிக்கை என்று எடுத்துக் கொள்ண்டாலும், அவர் செய்த செயல் மிகவும் தவறானது.  வேளாண் மசோதா தாக்கலில் சட்ட விதிகள் மீறப்பட்டது என்று தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்கள் ஹரிவன்ஷ் சிங்கிடம் தெரிவித்தனர்.

பிரதமர் புகழாரம்:  

சஸ்பெண்ட்  செய்யப்பட்ட 8 உறுப்பினர்களுக்கு தேநீர் அளித்த ஹரிவன்ஷ் சிங்கின் செயல் பாராட்டுக்குரியது என்று பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் தெரிவித்தார்.

 

தர்னாவில் அமர்ந்த உறுப்பினர்களுக்கு  தனிப்பட்ட முறையில் தேநீர் பரிமாறுவது, ஹரிவன்ஷ் சிங்கின் பெரிய மனதை பிரதிபலிக்கிறது என்று மோடி தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார்:  இதற்கிடையே, உறுப்பினர்கள் சஸ்பெண்ட் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்த அரசு தயாராக உள்ளது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவையில் தெரிவித்தார்.  முன்னதாக, உறுப்பினர்கள் சஸ்பெண்ட்  செய்யும்  தீர்மானத்தை நடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர்  வி. முரளிதரன் அவையில் தாக்கல் செய்தார். குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து பேசிய மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு, இந்த 8 உறுப்பினர்களும் அவையில் நடந்து கொண்ட விதம் ஏற்கமுடியாதது மற்றும் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார்.

மேலும், மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஸ் மீது எதிர்க்கட்சிகள் கொடுத்திருந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் வெங்கையா நாயுடு நிராகரித்தார்.

46 உறுப்பினர்கள் சார்பில் வழங்கப்பட்ட இந்த தீர்மானம் முறைப்படி இல்லை என்று அவர் குறிப்பிட்டார்

எதிர்க்கட்சிகள் அவையை வெளிநடப்பு செய்தனர்:    சஸ்பெண்ட் செய்து பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெரும் வரை, சபையின் நடவடிக்கைகளை புறக்கணிப்பதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். இன்று ஜீரோ ஹவர் விவாதத்திற்குப்   பிறகு பேசிய ஆசாத், அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்.எஸ்.பி) குறைவாக தனியார் நிறுவனங்கள்  உணவு தானியங்களை வாங்குவதில்லை என்பதை உறுதிப்படுத்தும் மசோதாவை அரசாங்கம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

குறைந்தபட்ச ஆதரவு விலை சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.  காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி, டி.எம்.சி, இடது சாரிகள்  சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். தேசியவாத காங்கிரஸ் , சமாஜ்வாடி, சிவசேனா, ராஷ்ட்ரியா ஜனதா தளம் போன்ற கட்சிகளும் பின்னர் வெளிநடப்பில் ஈடுபட்டன.

வெங்கையா நாயுடு கோரிக்கை:   மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு புதிய வேண்டுகோள் ஒன்றை  விடுத்தார். "அவை புறக்கணிப்பு குறித்த அவர்களின் முடிவை மறுபரிசீலனை செய்து, சபை நடவடிக்கைகளில்  அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்குமாறு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்" என்று நாயுடு சபையில் தெரிவித்தார்.

துணைத் தலைவர் உண்ணாவிரதம்: மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஸ் கூறியுள்ளார்.

செப்டம்பர் 20 ம் தேதி வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது எதிர்க்கட்சி உறுப்பினர்களின்  செயல்பாடுகள் குறித்து மாநிலங்களவை துணைத் தலைவர் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதினார். கடிதத்தில் தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்திய அவர், ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தையும் அறிவித்தார்.

தர்ணா போராட்டம் முடித்து வைப்பு: சஸ்பெண்ட் செய்து பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும். சரியான வாக்கெடுப்பு முறையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து தர்ணாவில் இறங்கினோம். ஆனால் சபைத் தலைவர், எதற்கும் செவிசாய்க்கவில்லை.

இந்நிலையில், அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும்  அமர்வின் எஞ்சிய நடவடிக்கையை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. எனவே, தர்ணா போராட்டத்தை முடித்து அவை புறக்கணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளோம் , " என்று காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சையத் நசீர் உசேன் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Rajya Sabha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment