Farmers’ Delhi protest : தமிழகம், ஆந்திரா, மேற்கு வங்கம், குஜராத், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றார்கள். இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களில் இருந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
3 வாரம் தனியாக கூட்டத் தொடர் நடத்த வேண்டும் என்றும், இரண்டு மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன் வைத்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் நேற்றிரவு ராம்லீலா மைதானத்தில் ஒன்று கூடினர். ராம்லீலா மைதானத்தில் இருந்து இன்று நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக செல்கின்றனர்.
இந்த போராட்டத்தில் மூத்த வழக்கறிஞரும் சுவராஜ் கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் பங்கேற்றார். இரண்டு நாட்கள் நடைபெற இருக்கும் போராட்டத்தில், பல்வேறு விவசாய குடும்பத்தை பின்னணியாக கொண்டவர்கள், தங்கள் குடும்பத்தில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த விவசாயிகளின் புகைப்படங்களை கையில் ஏந்தியவாறு பங்கேற்றனர்.
Farmers’ Delhi protest
போராட்டத்தில் தமிழகம்
தமிழகம் சார்பில் தென்னிந்திய அணைகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு அவரின் தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லி சென்றுள்ளனர். டெல்லி ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து நேற்று ஆர்பாட்டம் நடத்தினார்கள். அதன் பின்னர் அரை நிர்வாண போராட்டம் நடத்தியவாறே டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து ராம்லீலா மைதானம் வரை ஊர்வலமாக சென்றார்கள்.
Farmers’ Delhi protest : போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் பிரதமர்
நேற்று நள்ளிரவு வரை நீடித்த போராட்டத்தில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகௌடா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “மோடி, இந்த போராட்டத்தினை கருத்தில் கொள்ள வேண்டும். மத்திய அரசு இந்த பிரச்சனைக்கான தீர்வினை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். விவசாயிகளுக்கு தற்போது எல்லாம் தெரியும். எந்த ஒரு அரசும் விவசாயிகள் இல்லாமல் இருக்க இயலாது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Farmers’ Delhi protest குறித்து ஜிக்னேஷ் மேவானியின் கருத்து
குஜராத் மாநிலத்தில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி, இந்த இரண்டு நாள் போராட்டம் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியிருக்கிறார். அதில் “விவசாயிகள் மீது பாஜக மத்திய அரசு கொண்டுள்ள வேறுபாடான நிலைப்பாட்டினை உடைக்கும் பொருட்டு மிகப் பெரிய போராட்டம் இன்றும் நாளையும் டெல்லியில் நடைபெறுகிறது. சிறப்பு பாராளுமன்ற கூட்டத் தொடர் அமைத்து, ஏன் நம் நாட்டின் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று பேசப்பட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
மூத்த பத்திரிக்கையாளர் பி. சாய்நாத்
மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் விவசாயிகள் நலனில் வெகு நாட்களாக கவனம் செலுத்தி வரும் எழுத்தாளருமான பி. சாய்நாத் “விவசாயிகளின் பிரச்சனைகளை கிராமப்புற பிச்சனையாக மட்டுமே இனி பார்க்க இயலாது... இந்த பிரச்சனைகள் நிச்சயமாக நகர்ப்புற இந்தியாவினை பாதிக்கும்... இன்றும் நாளையும் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு என்னுடைய ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ட்விட்டரில் கூறியிருக்கிறார்.
ஸ்தம்பித்து நிற்கும் டெல்லி