Amil Bhatnagar , Jignasa Sinha
Farmers refuse to move, say will intensify protest : மத்திய அரசின் நிபந்தனை பேச்சுவார்த்தையை நிராகரித்த விவசாயிகள் டெல்லி - ஹரியானா எல்லையில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தங்களின் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்திய அவர்கள் ஜி.டி.கர்னல் நெடுஞ்சாலையில் இருந்து வெளியேற மாட்டோம் என்றும் கூறியுள்ளனர்.
உழவர் குழுக்கள் டெல்லியின் வடக்கு சிங்கு எல்லையில் கலந்துரையாடல்களை நடத்தினார்கள். இந்த சாலை வழியாகவே ஹரியானா, சண்டிகர் மற்றும் ஹிமாச்சல் பிரதேஷ் மற்றும் பஞ்சாப் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளை அடைய முடியும். சோனிபட், ரோஹ்தக், ஜெய்ப்பூர், காசியாபாத் - ஹப்பூர் மற்றும் மதுரா என்று டெல்லிக்கு நுழைவாயிலாய் இருக்கும் ஐந்து முக்கிய வழிகளில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர்கள் அறிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமையில் இருந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களின் போராட்டங்களை தேசிய நெடுஞ்சாலைகளில் நடத்தாமல் புராரியில் இருக்கும் சாந்த் நிரான்கரி சங்கமம் மைதானத்தில் நடத்தும் பட்சத்தில் டிசம்பர் மூன்றாம் தேதி நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தைக்கு வரவும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
மத்திய அரசின் அழைப்பை நாங்கள் மறுத்துவிட்டோம். அவர்களின் நிபந்தனைகளில் ஒன்று நாங்கள் புராரி பூங்காவிற்கு செல்ல வேண்டும் என்று கூறினார்கள். நாங்கள் புராரி பூங்காவிற்கு செல்ல மாட்டோம். இது பூங்கா என்பதைக் காட்டிலும் திறந்த வெளி சிறை என்பதை நாங்கள் அறிந்தோம் என்று பாரதிய கிஷான் யூனியனின் தலைவர் சுர்ஜீத் சிங் கூறியுள்ளார்.
உத்திரகாண்ட்டில் இருந்து வந்த விவசாயிகள் காவல்துறையிடம் அவர்களை ஜந்தர் மந்தருக்கு அழைத்து செல்லும்படி கேட்டனர். ஆனால் அதற்கு பதிலாக விவசாயிகளை புராரிக்கு காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர் என்று எங்களுக்கு தெரியவந்துள்ளது. சிங்கு எல்லையில் நடைபெறும் போராட்டங்கள் தொடரும் என்றும் அவர் கூறினார்.
டெல்லி காவல்துறை செய்திதொடர்பாளர் டாக்டர் எய்ஷ் சிங்கல் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர்களின் போராட்டங்களுக்கு முன்பு, நாங்கள் அவர்களிடம் டெல்லியில் போராட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம். மேலும் ஜந்தர் மந்தரில் போராட அனுமதி இல்லை என்று கூறினோம். அவர்களின் வேண்டுகள் அனைத்தும் மறுக்கப்பட்டது என்றார்.
புராரி பூங்கா என்பது நிரன்காரி சங்கமம் மைதானமாக அறியப்படுகிறது. டெல்லி மேம்பாட்டுத்துறைக்கு சொந்தமான அந்த இடம் 20 ஹெக்டர் பரப்பளவில் விரிந்துள்ளது. சிங்கு எல்லையில் இருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதமாக அமைந்திருக்கும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் எங்களிடம் உள்ளாது. எங்களின் ட்ராக்டர்கள் எங்களின் தங்கும் இடமாக இருக்கும் என்று சுர்ஜீத் கூறினார்.
அரசியல் கட்சியுடன் தொடர்புடைய யாரையும் எங்களின் வழியில் இணைத்துக் கொள்ள மாட்டோம் என்று கூறிய அவர் குறைந்த ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் ”சோகைகளை" எரிக்கும் விவசாயிகளுக்கு அபராதம் ஏதும் விதிக்க கூடாது என்றும் கூறினார். மேலும் மின்சாரம் தொடர்பாக அரசு மேற்கொண்டிருக்கும் திருத்தங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். நிபந்தனைகள் ஏதுமின்றி விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிமெடுக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டார்.
பல்வேறு தலைவர்களும் ட்ராக்டரின் மேலே ஏறி நின்று தங்களின் உரையாடல்களை மேற்கொண்டனர். சிங்கு பார்டரின் ஹரியானா பக்கத்தில் போராட்டக்காரர்கள் நிற்க, டெல்லி பக்கத்தில் காவல்துறையினர் எல்லைகளை மூடி கடுமையான தடைகளுடன் நின்று கொண்டிருக்கின்றனர். இன்னும் சில நாட்களில் பல்வேறு முக்கியமான விவசாய தலைவர்கள் இங்கு வந்து சேர்வார்கள் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.
100 விவசாயிகள் சிறிய வழியே சென்று டெல்லி எல்லைக்குள் நின்று போராட்டங்களை மேற்கொண்டனர். காவல்துறையின் தடுப்புகளுக்கு 50 மீட்டர்களுக்கு அபபல் நின்று போராட்டம் செய்த அவர்கள், எங்களுக்கு அங்கிருந்து மேலும் முன்னேறி செல்லும் எண்ணம் ஏதும் இல்லை. நாங்கள் மற்றொரு பக்கத்தில் இருந்து உள்ளே வந்தோம். எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. காவல்துறையினர் நாங்கள் நிரான்கரி மைதானத்திற்கு செல்ல இருப்பதாக நினைத்துக் கொண்டனர். ஆனால் இங்கே போராட்டம் நிச்சயமாக தொடரும் என்று கூறினார் அமிர்தசரஸில் இருந்து வந்த சுக்தேவ் சிங். தற்போது அவர் அலிப்பூர் காவல்துறை போஸ்ட் அருகே முகாம் அமைத்துள்ளனர்.
நிரான்கரி பூங்காவில் ஞாயிறு மதியம் அன்று 200 விவசாயிகள் கூட இல்லை. டெல்லி அரசு அவர்களுக்கு தேவையான கூட்டாரங்கள் மற்றும் கழிவறைகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. சில இடங்களில் லாங்கர்கள் வைத்து தந்த போதிலும் கூட போராட்டக்காரர்கள் தங்களின் ட்ராக்டர்களிலேயே தங்கினார்கள்.
எங்களில் சிலர் நிரான்கரி மைதானத்திற்கு முன்பே வந்துவிட்டனர். ஆனால் நாங்கள் இங்கே மாட்டிக் கொண்டோம் என்று அர்த்தம் இல்லை. எல்லைகளில் நடக்கும் போராட்டத்தைக் காட்டிலும் எந்த வகையிலும் இது குறைந்தது இல்லை. எங்களை ராம்லீலா மைதானத்தில் போராட அனுமதிக்கும் வரை அல்லது எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டங்களை தொடர்வோம் என்று கூறினார் மொஹாலியில் இருந்து வந்த தில்ஜீத் சிங்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
வெள்ளிக் கிழமை அன்று காவல்துறையினர் சிங்கு எல்லையில் இருக்கும் விவசாயிகள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகைகுண்டு மூலம் தாக்குதல் நடத்தினார்கள். ஞாயிறு அன்று பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இருந்து வந்த விவசாயிகள் வடமேற்கு டெல்லியில் திக்ரி எல்லையில் போராட்டக்காரர்களுடன் இணைந்தனர். டெல்லி காவல்துறை டெல்லி எல்லையில் ட்ரெக்குகள் கொண்டு இடம் மறித்துள்ளனர். திக்ரி காலன் என்பது டெல்லி புறநகர் மாவட்டம் ஆகும். அது முந்த்கா மற்றும் பீராகரி எல்லைகளுக்கு மிக அருகே உள்ளது. ஹரியானாவின் பாஹாதுர்கர் மற்றும் ஜஜ்ஜர் பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலைகள் திக்ரி வழியே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தடைகளுக்கு பின்னால் எத்தனை போராட்டக்காரர்கள் இருக்கின்றனர் என்பது எங்களுக்கு தெரியாது. நிறைய விவசாயிகள் தற்போது இணைந்துள்ளனர். அவர்கள் புராரிக்கு செல்ல விரும்பினால் செல்லட்டும் என்றும் எங்களிடம் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் இஙே தான் போராட்டம் மேற்கொள்ள இருப்பதாக கூறினார்கள். 300 முதல் 400 ட்ரெக்குகள் சாலையில் உள்ளது என்று மூத்த காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.
பாஞ்சாபில் இருந்து வந்த நிஷான் சிங், இங்கு வந்திருக்கும் பெரும்பான்மையான விவசாயிகள் எங்கள் மாநிலத்தில் இருந்து வந்தவர்கள். எங்களின் குடும்ப உறுப்பினர்களையும் போராட்டத்தில் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டோம். மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் வரையில் நாங்கள் இங்கிருந்து செல்லமாட்டோம். அனைத்து இந்திய கிஷான் சங்ர்ஷ் ஒத்துழைப்பு கமிட்டியில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் நாளை எங்களுடன் போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். பின்பே எங்களின் போராட்டம் குறித்த அடுத்த கட்ட முடிவை மேற்கொள்ள உள்ளோம் என்று கூறியுள்ளனர்.
ஞாயிறு காலையில் விவசாயிகள் மத்தளங்களை முழங்கி கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினார்கள். காவல்துறையினர் கொரோனா தொற்று காரணமாக தனிமனித இடைவெளியை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டனர். எல்லைகள் மூடப்பட்டத்தால் ஹரியானாவில் இருந்து வருபவர்கள் ஜரோடா மற்றும் ராஜோக்ரிக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். டெல்லிக்கு உள்ளே வரும் அனைத்து நபர்களின் விவரங்களை டெல்லி காவல்துறை பதிவு செய்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.