நாடாளுமன்ற மக்களவையில் புதன்கிழமை (டிச.6) ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்தம்) மசோதா 2023, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா 2023 ஆகியவை நிறைவேற்றப்பட்டன.
அப்போது பேசிய அமித் ஷா, “முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு செய்த 2 தவறுகளால் ஜம்மு காஷ்மீர் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் தவறு, போர் நிறுத்தத்தை அறிவித்து, பின்னர் காஷ்மீர் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சென்றது. அடுத்து, ஜவஹர்லால் நேரு சரியான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும்” என்றார்.
அமித் ஷாவின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தொடர்ந்து வெளிநடப்பு செய்தன. இந்த விவகாரம் குறித்து ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துலலா இன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது ““மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீர் தேர்தல் குறித்து தனது உரையில் (சபையில்) பேசவில்லை; ஏதோ தவறு நடந்துள்ளது" எனக் குற்றஞ்சாட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“