காஷ்மீர் போன்ற பற்றி எரியும் பிரச்சனைகள் குறித்து நரேந்திர மோடியுடன் தீவிரமான நேர்மையான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்த நேர்காணல் அளித்த நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா நம்பிக்கை கருத்து வந்தது.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா செவ்வாய்க்கிழமை இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை தேவை என்று வாதிட்டார். புதுடெல்லி ஜி 20 அமைப்புக்கு தலைமை தாங்கும் நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே உறவுப் பாலங்களை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்வார் என்று நம்புவதாகக் கூறினார்.
துபாயை தளமாகக் கொண்ட அல் அரேபியா செய்தித் தொலைக்காட்சி, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் நேர்காணலை ஒளிபரப்பியது. அதில் அவர், காஷ்மீர் போன்ற பற்றி எரியும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியுடன் தீவிரமான நேர்மையான பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து, ரா அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலாத்தின் சமீபத்தில் வெளியான புத்தகமான “எ லைஃப் இன் தி ஷேடோஸ்” வெளியீட்டு விழாவில், அப்துல்லாவின் கருத்துக்கள் வந்துள்ளது.
“காஷ்மீர் பிரச்னை முடியாது, நமது அண்டை நாடுகளுடன் பேசி உண்மையான தீர்வைக் காணாத வரையில் பயங்கரவாதம் நிலைத்திருக்கும்” என்று ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தன்னுடன் ஒரே பக்கத்தில் நின்றதாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறினார்.
“போர் எதற்கும் தீர்வல்ல என்று இன்றைய பிரதமர் வெளிப்படையாக கூறுகிறார். உக்ரைனைப் பாருங்கள், உக்ரைன் அழிவைப் பாருங்கள். அழிவின் பாதையில் நாம் சிந்திக்க வேண்டாம். இன்று நாம் ஜி 20 அமைப்பில் அங்கம் வகிக்கும்போது, அதற்குத் தலைமை தாங்கும் போது, இரு நாடுகளுக்கும் இடையே உறவுப் பாலங்களைக் கட்ட பிரதமர் முயற்சி செய்வார் என்று நம்புகிறேன். அதுதான் முன்னோக்கி செல்லும் ஒரே வழி” என்று ஃபரூக் அப்துல்லா கூறினார்.
மூத்த தலைவர் ஃபரூக் அப்துல்லா மத்திய அரசு பள்ளத்தாக்கில் அரசியலமைப்புடன் விளையாடுகிறது என்றும் குற்றம் சாட்டினார். ஜம்மு காஷ்மீரில் தேர்தல் முடிந்து தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில், எங்களுக்கு கடினமான பணி உள்ளது என்றார்.
“நிறுவனங்களைப் பாருங்கள், ஆளுநர்களைப் பாருங்கள், துணைநிலை ஆளுநரைப் பாருங்கள், அவர்கள் எப்படி அரசியலமைப்புடன் விளையாடுகிறார்கள். இந்த அரசாங்கம் தனது போக்கை மாற்றிக்கொண்டு வாக்குகளைவிட மக்களை வெல்ல முயற்சி செய்கிறாது என்று நம்புகிறேன்” என்று அப்துல்லா கூறினார். ஆகஸ்ட் 2020-ல் மத்திய அரசு 370வது பிரிவை திருத்திய பின்னர் கடுமையான பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஏழு மாதங்களுக்கும் மேலாக அவர் காவலில் இருந்தார்.
சமீபத்தில் பாரத் ஜோடோ யாத்திரையில் சேர்ந்த துலாத், பா.ஜ.க-விடம் இருந்து விமர்சனங்களை பெற்றார். அப்துல்லாவின் கருத்தை ஆமோதித்த அவர், அதே நேரத்தில் தீவிரவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையில் வேறுபாட்டை வரைந்தார். தீவிரவாதத்தின் அளவு குறைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுடன் பேசினால் ஒழிய பயங்கரவாதம் ஒழியாது என்றார். தீவிரவாதம் என்பது எல்லைக்கு அப்பால் இருந்து வருகிறது என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் தனது உரையில், அரசியலுக்குப் பதிலாக பாரத் ஜோடோ யாத்திரை நாட்டில் நல்லிணக்க உணர்வை எழுப்பியுள்ளது என்று கூறினார்.
“அரசியல்வாதிகளாக இல்லாமல், சமூகத்தின் உறுப்பினர்களாக நீங்கள் விரும்பும் இந்தியாவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த உணர்வுகளுடன் அவர் (துலாத்) யாத்திரையில் இணைந்தார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே, அவர் எங்களில் ஒருவராக, உங்களில் ஒருவராகத் திரும்பியுள்ளார்,” என்று கமல்நாத் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“