Advertisment

தடுப்புக் காவலில் உள்ள ஃபரூக் அப்துல்லாவுடன் தேசிய மாநாட்டு கட்சி பிரதிநிதிகள் குழு சந்திப்பு

Farooq Abdullah meets National Conference leaders: ஸ்ரீநகரில் தடுப்புக் காவலில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அபுதுல்லா மற்றும் அவரது குடும்பத்தினரை இன்று தேசிய மாநாட்டுக் கட்சிப் பிரதிநிதிகள் குழு சந்தித்துப் பேசினர். மேலும், தேசிய மாநாட்டுக் கட்சி துணை தலைவர் ஒமர் அப்துல்லாவை ஹரி நிவாஸில் சந்தித்தனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jammu kahsmir news, farooq abdullah, article 370, farooq abdullah, farooq abdullah deatined, ஃபரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சி பிரதிநிதிகள் குழு, ஜம்மு காஷ்மீர்,nc farooq abdullah meeting, omar abdullah, kashmir article 370

jammu kahsmir news, farooq abdullah, article 370, farooq abdullah, farooq abdullah deatined, ஃபரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சி பிரதிநிதிகள் குழு, ஜம்மு காஷ்மீர்,nc farooq abdullah meeting, omar abdullah, kashmir article 370

Farooq Abdullah meets National Conference leaders: ஸ்ரீநகரில் தடுப்புக் காவலில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அபுதுல்லா மற்றும் அவரது குடும்பத்தினரை இன்று தேசிய மாநாட்டுக் கட்சிப் பிரதிநிதிகள் குழு சந்தித்துப் பேசினர். மேலும், தேசிய மாநாட்டுக் கட்சி துணை தலைவர் ஒமர் அப்துல்லாவை ஹரி நிவாஸில் சந்தித்தனர்.

Advertisment

தேசிய மாநாட்டுக் கட்சியின் ஜம்மு மாகாண தலைவர் தேவேந்தர் சிங் ராணா தலைமையிலான பிரதிநிதிகள் மற்றும் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு இன்று காலை ஸ்ரீநகருக்கு சென்றனர். இந்த குழுவினர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லாவையும் தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவர் ஒமர் அப்துல்லாவையும் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்தர் சிங் ராணா, “அவர்கள் இருவரும் நலமாக, ஆரோக்கியமான மனநிலையில் இருப்பதால் நாங்கள் மகிழ்கிறோம். அவர்கள் நிச்சயமாக மாநிலத்தின் துரதிருஷ்டமான நிலையின் முன்னேற்றத்தால் வேதனை அடைகிறார்கள். அங்கே அரசியல் செயல்முறை தொடங்க வேண்டுமானால் இந்த மைய நீரோட்ட தலைவர்களை விடுவிக்க வேண்டும்” என்று கூறினார்.

இந்த குழுவினருடனான சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சாம்பல் நிற உடை மற்றும் தொப்பி அணிந்த ஃபரூக் அப்துல்லா பிரதிநிதிகள் மற்றும் அவரது மனைவி மோலி அப்துல்லாவுடன் நின்றுள்ளார். அதில், அவர் இரண்டு விரல்களை நீட்டி விக்டரி என்று வெற்றியின் அடையாளத்தை குறிப்பிடும்படியாக காட்டியுள்ளார்.

தேவேந்தர் சிங் ராணா ஏறக்குறைய இரண்டு மாத தடுப்புக் காவலுக்குப் பிறகு, அவர் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டு ஒரு நாள் கடந்த நிலையில், அவர் கடந்த வியாழக்கிழமை ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மாலிக்கிடம் தேசிய மாநாட்டுக் கட்சி குழுவினர் தங்கள் கட்சித் தலைவர் மற்றும் துணை தலைவரை சந்தித்து அடுத்த கட்ட அரசியல் நகர்வை ஆலோசிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஜம்முவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் விடுவிக்கப்பட்ட நிலையில், ஆளுநர் சத்ய பால் மாலிக்கின் ஆலோசகர் ஃபரூக் கான், காஷ்மீர் தலைவர்கள் ஒவ்வொரு கட்டமாக விடுவிக்கப்படுவார்கள் என்றார்.

ஜம்முவில் ராணா மற்றும் கிட்டத்தட்ட ஒரு டஜன் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான கட்டுப்பாடுகள் புதன்கிழமை மாலை நீக்கப்பட்டன. காஷ்மீரில் பிரதான அரசியல்வாதிகள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஃபரூக் அப்துல்லா கடுமையான பொது பாதுகாப்புச் சட்டத்தின் (பி.எஸ்.ஏ) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ராணா மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட மறுநாளே, மூத்த தேசிய மாநாட்டு கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு ராணா தலைமை தாங்கினார். இந்த கூட்டம் கடந்த இரண்டு மாதங்களில் துரதிர்ஷ்டவசமான அரசியல் முன்னேற்றங்களின் பின்னணியில் நிலைமை குறித்த கவலையை வெளிப்படுத்தும் தீர்மானத்தை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.

பொது பாதுகாப்புச் சட்டத்தின் (பி.எஸ்.ஏ) கீழ் ஃபரூக் அப்துல்லாவை தடுத்து வைத்திருப்பதை அவர்கள் கண்டனம் செய்தனர். நாட்டின் ஜனநாயக அரசியலில் அவரது மகத்தான மற்றும் முக்கியமான பங்கையும், சமாதானம், முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு அரசை வழிநடத்துவதில் பங்களிப்பு இருந்தபோதிலும், அனைத்து முரண்பாடுகளையும் களைய துணிந்துள்ளனர். ஃபரூக் அப்துல்லா மற்றும் ஒமர் அப்துல்லா மட்டுமில்லாமல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கு முந்தைய நாள் இரவு ஃபரூக் அப்துல்லா மற்றும் ஒமர் அப்துல்லா ஆகியோர் காவலில் வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Jammu And Kashmir Jammu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment