இந்தியா கூட்டணிக்கு மற்றொரு பின்னடைவாக, வரும் மக்களவைத் தேர்தலில் தனது கட்சி தனித்துப் போட்டியிடும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா வியாழக்கிழமை தெரிவித்தார். லோக்சபா தேர்தலுடன் ஜம்மு & காஷ்மீர் சட்டசபை தேர்தலும் நடக்கக்கூடும் என்று ஃபரூக் அப்துல்லா கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: ‘No doubt about it’: Farooq Abdullah’s National Conference to go solo in Lok Sabha polls in J&K
"சீட் பங்கீட்டைப் பொறுத்தவரை, தேசிய மாநாட்டுக் கட்சி தனித்து போட்டியிடும், அதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று ஃபரூக் அப்துல்லா செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
இந்த மாத தொடக்கத்தில், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி வைக்காது என்று முதல்வர் பகவந்த் மான் அறிவித்தார்.
காங்கிரஸுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், லோக்சபா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி கூறிய சில நாட்களுக்குப் பிறகு பகவந்த் மானின் அறிவிப்பு வந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“