கேரள மாநிலத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரை காதலித்த பெண்ணை, அவரின் தந்தையே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலம், ஒடுக்கப்பட்டவர்களுக்காக எப்போதுமே ஓங்கி குரல் எழுப்புல் மாநிலம் என்று புகழப்படும் கேரளாவில் தலித் இளைஞரை காதலித்ததற்காக, பெற்ற தந்தையே தனது மகளை குத்தி கொலை செய்திருப்பவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலப்புரம் அரிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். கூலித் தொழிலாளியான இவருக்கு அதிரா என்ற மகள். அதிரா, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். சமீபத்தில் அதிராவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞர் ஒரு ராணுவ வீரர் ஆவர்.
இந்நிலையில், இவர்களின் காதல் விவகாரம், அதிராவின் தந்தைக்கு ஒருநாள் தெரிய வந்துள்ளது. தனது மகளின் செயலை சற்றும் எதிர்பாராத அவர், பலமுறை அதிராவிடன் இதுக்குறித்து சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அதிரா, தனது காதலுடன் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார்.
ஆனால், அந்த தகவலும் ராஜனுக்கு எப்படியோ தெரிய வந்துள்ளது. தனது மகள் வீட்டை விட்டு வெளியேறி விட்டால், தீராத அவமானம் தனக்கு வந்து சேரும் என்று நினைத்த அவர், அந்த இளைஞரை அழைத்து பேசி, விரைவில் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், ராஜனின் உள்மனம், தலித் இளைஞரை மருமகனாக ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளது. இந்நிலையில், நேற்று(22.3.18) இரவு, அதிரா தனது காதலுடன் செல்ஃபோனில் பேசியுள்ளார். இதைக் கேட்ட அவரின் தந்தை ராஜன், அவரை அழைத்து மீண்டும் அந்த இளைஞரைக் குறித்து தரக்குறைவாக பேசியுள்ளார். மேலும், அந்த இளைஞர் உடன் கட்டாயமாக திருமணம் செய்து வைக்க மாட்டேன் என்றும் உலறியுள்ளார்.
இதனால், கோபம் அடைந்த அதிரா, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கும் சண்டை முற்றிய நிலையில், இறுதியாக ராஜன் அவரது மகள் அதிராவை நெஞ்சில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். அதிராவின் அலறல் சத்தத்தைக் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால், போகும் வழியிலியே அதிரா இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதிராவை கொலை செய்த ராஜனை கேரளா போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.