Father of Ayodhya DM also bought land 1 km from temple: இந்த ஆகஸ்டில், அயோத்தியின் அப்போதைய மாவட்ட ஆட்சியரான அனுஜ் ஜா, மகரிஷி ராமாயண் வித்யாபீட அறக்கட்டளையால் சட்டவிரோதமாக வாங்கிய 21 பிகாக்களில் தனது நிலமும் இருப்பதாக ஒரு தலித் குடியிருப்பாளரின் புகாரின் அடிப்படையில் ஒரு வழக்கை வருவாய் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைத்தார். அந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபோதும், இந்த நிலம் விவகாரம் தொடர்பாக அறக்கட்டளையை விசாரிக்கும் குறைந்தது மூன்று அதிகாரிகளின் உறவினர்கள் கோவிலுக்கு அருகில் உள்ள நிலத்தை MRVT நிறுவனத்திடம் இருந்து வாங்கியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
2019 நவம்பரில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, அயோத்தியில் நிலம் வாங்கிய குறைந்தது 15 அதிகாரிகளின் உறவினர்களில் அனுஜ் ஜாவின் உறவினர்களும் உண்டு என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆய்வு செய்த பதிவுகள் காட்டுகின்றன.
இதையும் படியுங்கள்: அயோத்தியில் நிலம் வாங்கிய அதிகாரிகள்; விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்த உ.பி அரசு
மே 28, 2020 அன்று, அயோத்தியில் ராமர் கோயில் உள்ள இடத்திலிருந்து 1 கிமீ தொலைவில் உள்ள முகல்புராவில் 320.631 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு மனை, உத்திரபிரதேச ஐஏஎஸ் அதிகாரியான அனுஜ் ஜாவின் தந்தை பத்ரி ஜாவின் பெயரில் பதிவு செய்யப்பட்டதாக பதிவுகள் காட்டுகின்றன. விலை: 23.40 லட்சம்.
அனுஜ் ஜா பிப்ரவரி 21, 2019 முதல் அக்டோபர் 23, 2021 வரை அயோத்தியின் மாவட்ட ஆட்சியராக இருந்தார். அவர் இப்போது மாநில அரசாங்கத்தில் பஞ்சாயத்து ராஜ் இயக்குநராக உள்ளார் மற்றும் லக்னோவில் வசித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: அயோத்தியில் தலித் நிலங்களை சட்டவிரோதமாக வாங்கிய அறக்கட்டளை; அதிகாரிகளின் உறவினர்களுக்கு விற்பனை
அனுஜ் ஜாவை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டபோது, “அயோத்தி ஒரு மதத் தலம், என் தந்தை வயதானவர். அவர் தனது கடைசிக் காலத்தில் அங்கு வாழ விரும்பினால், அதில் என்ன தவறு? அவரால் அங்கு நிலம் வாங்க முடியாதா? அதில் தவறேதும் இல்லை” என்றார்.
அயோத்தியில் உள்ள துளசிநகரைச் சேர்ந்த மன்ஷராம் சிங்கிடம் இருந்து பத்ரி ஜா "குடியிருப்பு (விவசாயம் அல்லாத)" நிலத்தை வாங்கியதாக பதிவுகள் காட்டுகின்றன. பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பத்ரி ஜாவின் முகவரி பீகாரில் உள்ள மதுபானியில் உள்ள அவரது கிராமம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.