Advertisment

சித்த ராமையா 5 ஆண்டுகள் முதல்வராக தொடர்வார்: காங்கிரஸ் அமைச்சர்கள் பேச்சால் டி.கே. சிவக்குமார் தம்பி அதிருப்தி

கர்நாடகா காங்கிரஸில் அமைச்சர்கள் மற்றும் சிவக்குமார் சகோதரர்கள் அதிகாரப் பகிர்வு விவகாரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இது, காங்கிரஸ் கட்சியில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
Faultlines in Karnataka Congress re-emerge as ministers and Shivakumars brother spar over power-sharing

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், டி.கே. சுரேஷ், முதலமைச்சர் சித்த ராமையா

ராகுல் காந்தியுடனான கர்நாடக அமைச்சர்களின் சந்திப்புக்கு முன்னதாக, சித்தராமையா முதலமைச்சராக ஐந்தாண்டு காலம் முழுவதுமாக இருப்பாரா என்பது குறித்து மாநில காங்கிரஸில் மீண்டும் பேச்சுகள் எழுந்துள்ளன.

Advertisment

கடந்த வாரத்தில், சித்தராமையா முகாமைச் சேர்ந்த பல அமைச்சர்கள் அவர் ஐந்தாண்டு காலத்திற்கு அரசாங்கத்திற்கு தலைமை தாங்குவார் என்று பரிந்துரைத்தனர்.

மாநிலத்தில் காங்கிரஸ் மகத்தான வெற்றியை பெற்ற நிலையில் சிவக்குமார் முதல்வராக கடுமையாக போராடினார்.

சித்தராமையாவுக்கு முழு கால அவகாசம் அளிக்க வேண்டும் எனக் கூறும் அமைச்சர்களில் தொழில்துறை அமைச்சர் எம் பி பாட்டீல், சமூக நலத்துறை அமைச்சர் எச் சி மகாதேவப்பா மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலி ஆகியோர் முதலமைச்சரின் விசுவாசிகளாக கருதப்படுகிறார்கள்.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் (கேசி) வேணுகோபால் செய்தியாளர்கள் சந்திப்பில், “சித்தராமையா ஐந்தாண்டுகள் முதல்வராக இருப்பார் என்று பாட்டீல் சமீபத்தில் கூறினார். இது சுரேஷுக்கு பிடிக்கவில்லை.

நான் எம் பி பாட்டீலுக்கு பதிலளிக்க முடியும். ஆனால் அத்தகைய அறிக்கைகள் அவசியமில்லை” என்றார்.

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து விதான சவுதாவில் அவர்களுக்கிடையே பகிரங்கமாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அங்கு இருவரும் கோபமாக வார்த்தைப் பரிமாற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

அடுத்ததாக மகாதேவப்பா, ஞாயிற்றுக்கிழமை மைசூருவில் செய்தியாளர்களை சந்தித்தபோது, சித்தராமையா “முதலமைச்சராக நீடிப்பார்” என்று கூறினார்.

இதற்கு ரேஷ் மீண்டும் கடுமையாக, “அவர் ஏன் இப்படிப் பேசுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் நிறைய சித்தாந்தங்கள் மற்றும் தனக்கென அரசியல் பலம் கொண்ட முதிர்ந்த தலைவர். தற்போது மூத்த அமைச்சராக பணியாற்றி வருகிறார். அமைச்சராகப் பணியாற்றுவதை விட மற்ற விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார் என்று நினைக்கிறேன். அதனால்தான் அவர் இந்த விஷயங்களைச் சொல்ல முடியும். நான் இன்னும் என்ன சொல்ல முடியும்?" எனப் பதில் அளித்தார்.

மகாதேவப்பாவின் கருத்து குறித்து கேட்டதற்கு, அமைச்சர் என்ன சொன்னார் என்று தெரியவில்லை என்று சித்தராமையா கூறினார்.

மேலும், ஜார்கிஹோலி தனது பங்கிற்கு, சித்தராமையா முதலமைச்சராக முழுமையாக இருப்பார் என்றும் அவரது பதவிக்காலம் பாதி ஆண்டுகள் என யாரும் கூறவில்லை என்றார்.

இதற்கிடையில், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநில காங்கிரஸ் அணிகளில் தனது நிலையை உறுதிப்படுத்தத் தொடங்கிய சுரேஷ், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கவில்லை என்று சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

சுரேஷின் இந்தக் கருத்துக்கள் டி.கே. சிவக்குமாரின் முதல்வர் பதவி போராட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.

அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் எதையும் காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கவில்லை. அரசியல் ஓய்வு குறித்து சுரேஷின் அறிக்கை, சிவகுமாரை முதல்வராக நியமிக்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குறியீடாகவும் விளக்கப்பட்டது.

சித்தராமையா மற்றும் சிவக்குமார் முகாம்களுக்கு இடையே நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக தேர்தலுக்கு முன்னதாக முதல்வர் வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ், மே 13 முடிவுகளுக்குப் பிறகு சித்தராமையாவை இரண்டாவது முறையாக முதல்வராக நியமிக்க ஐந்து நாட்கள் காத்திருந்தது.

சிவகுமாரும் உயர் பதவிக்கு உரிமை கோரினார், இது ஒரு பதிலுக்கு வழிவகுத்தது. இறுதியில், அவருக்கு துணை முதல்வர் பதவி மற்றும் இரண்டு சக்திவாய்ந்த இலாகாக்களை வழங்கி, ஒரு சமரசம் ஏற்படுத்தப்பட்டது.

சித்தராமையா முதலமைச்சராகவும், சிவக்குமார் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டபோதும் இது தொடர்பாக கேள்விகள் எழுந்தன். அப்போது வேணுகோபால் அதிகாரப் பகிர்வு மக்களிடம் மட்டுமே நடைபெறும் என்றார்.

அமைச்சர்களுக்கும், எம்.பி.க்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பதிலளித்த காங்கிரஸ் வட்டாரங்கள், எம்.பி. தனது நிலைப்பாட்டை வலியுறுத்துவதாகக் கூறினர்.

இது குறித்து, மாநில காங்கிரஸ் செயல் தலைவர் சலீம் அகமது தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தொடர்பு கொண்டபோது, “மாநில காங்கிரஸின் ஒரே எம்.பி. சுரேஷ். அவர் போட்டியிடுவதை காங்கிரஸ் விரும்புகிறது” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karnataka Siddaramaiah Dk Shivakumar Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment