Advertisment

கர்நாடகாவில் அதிரடி: தேர்தல் வாக்குறுதி 5 கிலோ அரிசியை பணமாக வழங்க முடிவு!

புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம், “அன்ன பாக்யா திட்டத்தை ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்த அரசு உறுதியளித்துள்ளது” என்றார்.

author-image
WebDesk
New Update
FCI rice not coming Karnataka set to transfer cash instead of 5 kg promised rice

கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையா

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற 2.28 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவை. இதனை மத்திய அரசிடம் இருந்து வாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் திறந்த ஒப்பந்த புள்ளிகள் கோர மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டத்தை ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்த அரசு உறுதியளித்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம், “அன்ன பாக்யா திட்டத்தை ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்த அரசு உறுதியளித்துள்ளது” என்றார்.

மேலும் இந்தத் திட்டத்தில் தற்போது, ரேஷன் அரிசிக்கு பதிலாக பணம் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. அதாவது ஒரு கிலோ அரிசிக்கு ரூ.34 வீதம் 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு ரூ.680 டெபாசிட் செய்யப்படும்.

ஏற்கனவே மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, ஜூன் 13 அன்று இந்திய உணவுக் கழகம் (FCI) மாநிலங்களுக்கு அரிசி மற்றும் கோதுமை விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளது.

ஜூன் 14 அன்று சித்தராமையா ஊடகங்களிடம் கூறுகையில், ஒரு கிலோவுக்கு 2.6 ரூபாய் போக்குவரத்து செலவு உட்பட, கர்நாடகாவிற்கு தானியங்களை 36.6 ரூபாய்க்கு வழங்க FCI ஒப்புக்கொண்ட ஒரு நாளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தானியங்களை தனியார் சப்ளையர்களுக்கு விற்பனை செய்ய அனுமதித்ததாகவும், ஆனால் மாநில அரசுகள் அவற்றை எஃப்.சி.ஐ.யில் இருந்து கொள்முதல் செய்வதைத் தடை செய்வதாகவும் அவர் விமர்சித்தார்.

ஏழைகளுக்கு உதவுவதற்காக மாநிலங்களுக்கு அரிசி வழங்க அனுமதிக்குமாறு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் பியூஷ் கோயல் ஆகியோரிடம் முறையீடுகள் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மாநில உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் கே.எச்.முனியப்பாவின் கூற்றுப்படி, ரொக்கப் பரிமாற்ற ஏற்பாட்டிற்கான மாதாந்திர செலவு ரூ.750 கோடி முதல் ரூ.800 கோடி வரை இருக்கும்.

இது, பிபிஎல் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி வழங்குவதற்கு முன்னர் மதிப்பிடப்பட்ட மாதச் செலவான ரூ.840 கோடியை விடக் குறைவு.

வங்கிக் கணக்குகள் மற்றும் ரேஷன் கார்டுகளுடன் இணைக்கப்பட்டுள்ள பயனாளிகளின் ஆதார் எண்களின் அடிப்படையில் பணப் பரிமாற்றம் நடைபெறும். “சுமார் 95 சதவீத பிபிஎல் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள (அட்டைகள்) விரைவில் பலன்களை மாற்ற இணைக்கப்படும்.

காங்கிரஸ் அரசை விமர்சித்த எதிர்க்கட்சியான பாஜக, ஒரு பயனாளிக்கு மாதம் ஒன்றுக்கு 5 கிலோ அரிசியை மத்திய அரசு வழங்குவதை ஒப்புக்கொண்டதற்கு சித்தராமையாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

தேர்தல் வாக்குறுதிகளின் நிலை

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும், தேர்தலுக்கு முந்தைய 5 உத்தரவாதங்களில் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கும் சக்தி திட்டம் ஜூன் 11ஆம் தேதி தொடங்கப்பட்டது. மற்றவற்றில் அன்ன பாக்யா ஜூலை 1ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

தொடர்ந்து, ஆகஸ்ட் 1 முதல் 200 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்கும் க்ருஹ ஜோதி திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் பயனடைய உள்ளனர்.
க்ருஹ லக்ஷ்மி திட்டத்தில் பெண் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 பதிவு செய்யும் பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை உறுதி செய்யும் யுவ நிதி திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை அரசாங்கம் இன்னும் அறிவிக்கவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karnataka Siddaramaiah Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment