Feed the stray animals and birds says Karnataka CM B.S.Yediyurappa : கொரோனா வைரஸ் நோய் பரவல் இந்தியா முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் நிலை குறித்து இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் செய்து வருவதில் மும்பரமாக ஈடுபட்டு வருகிறது மாநில அரசுகள். இந்நிலையில் நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார் கர்நாடக மாநில முதல்வர்.
அதில் அவர் வீட்டின் வளாகத்தில் சுற்றித்திருந்த பூனைக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த புகைப்படத்தின் கீழே உங்களின் வீடுகளை சுற்றித்திரியும் தெரு விலங்குகள் மற்றும் பறவைகளிடம் கருணையுடன் நடந்து கொள்ளுங்கள். அவைகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீரை கொடுங்கள். அதனால் அவைகள் உணவின்றி வாடும் நிலை உருவாகாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
Advertisement
ಬಿಸಿಲ ಬೇಗೆ ಮತ್ತು ಲಾಕ್ ಡೌನ್ ಪರಿಣಾಮಗಳಿಂದ ಬೆಕ್ಕುಗಳು, ನಾಯಿಗಳು ಹಾಗೂ ಪಕ್ಷಿಗಳು ನೀರು ಮತ್ತು ಆಹಾರ ಸಿಗದೆ ತತ್ತರಿಸುತ್ತಿವೆ.
ನಗರಗಳಲ್ಲಿ ಇದರ ಪರಿಣಾಮ ಇನ್ನೂ ಗಂಭೀರವಾಗಿದೆ. ಹಾಗಾಗಿ, ನಾಯಿಗಳಿಗೆ ಮತ್ತು ಪಕ್ಷಿಗಳಿಗೆ ನೀರು, ಆಹಾರ ಸಿಗುವಂತೆ ನೋಡಿಕೊಳ್ಳಬೇಕೆಂದು ಸಮಸ್ತ ನಾಗರಿಕರಲ್ಲಿ ಮನವಿ ಮಾಡುತ್ತೇನೆ.#feedthehungerspic.twitter.com/k7r8NQQrPD
கர்நாடக மாநில முதல்வரின் இந்த செயல் அனைவரையும் ஈர்த்துள்ளது. நீங்களும் உங்களின் வீடுகளுக்கு அருகே சுற்றித்திரியும் தெருநாய்கள், பூனைகள் மற்றும் கோடைக்கு தண்ணீர் இன்றி தவிக்கும் பறவைகளுக்கு உணவிடுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”