ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேற்று (டிச.30) இரவு 9.58 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி.60 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
தலா 220 கிலோ எடை கொண்ட ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி என அழைக்கப்படும் 2 சிறிய செயற்கைக் கோள்களை ராக்கெட் சுமந்து சென்றது.
இந்த திட்டம் எதிர்காலத்தில் நிலவு திட்டமான சந்திரயான்-4 மற்றும் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம் பாரதிய அந்தரிக்ஷ் நிலையம் அமைப்பதற்கு முக்கிய பணியாகும். தற்போது ஏவப்படும் ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் செயற்கை கோள்கள் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறை மூலம் விண்ணில் நிலைநிறுத்தப்படுகிறது.
அதாவது, 2 செயற்கைக் கோள்களும் ஏவப்பட்டு விண்ணில் ஒன்றிணைக்கப்படுகின்றன. இது இஸ்ரோவின் எதிர்காலத் திட்டத்திற்கு முக்கியமானவை. தலா 220 கிலோ எடையுள்ள இரண்டு செயற்கைக் கோள்களும் 470 கி.மீ தூரத்தில் புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.
இதையடுத்து ராக்கெட் செயல்பாடுகள் திட்டமிட்டபடி செயல்படுவதாக இஸ்ஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மேலும் மேகமூட்டம் இல்லாத காரணத்தால் சென்னையில் பல பகுதிகளில் PSLV C60 ராக்கெட் தெளிவாக தெரிந்தது.
மேலும் இதுகுறித்து பேசிய சோம்நாத், "பி.எஸ்.எல்.வி-C60, இஸ்ரோவின் சாதனையில் ஒரு புதிய மைல்கல் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். ஸ்பேஸ் டாக்கிங் சோதனை வெற்றியின் மூலம் உலகிலேயே இந்த செயல்முறையைத் தொடங்கிய 4 வது நாடாக இந்தியா திகழ்கிறது.
மனிதனை விண்ணுக்கு அனுப்புவது, விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தை நிறுவுவது,தரவுகளைச் சேகரிப்பது சந்திராயன் - 4 திட்டம் உள்ளிட்ட இஸ்ரோவின் எதிர்கால திட்டங்களுக்கு இது அடிப்படை சோதனையாக விளங்கும்" என ஸ்பேடெஸ் திட்டத்தின் பயன்பாடு குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம் அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“