உரங்களின் சில்லறை விற்பனை இந்த ஆண்டு மே மாதத்தில் கிட்டத்தட்ட 98 சதவீதம் உயர்ந்துள்ளது. இது தொடர்ந்து ஏழாவது மாதமாக இரட்டை இலக்க சதவீத விற்பனை உயர்வாக உள்ளது. நிலவும் மோசமான பொருளாதார சூழலில் ஒப்பீட்டளவில் வேளாண்மைத் துறை சிறப்பாக செயல்படுவதை இது சுட்டிக்காட்டுகிறது.
உரங்கள் துறையின் தரவுகள்படி 2020 மே மாதத்தில் அகில இந்திய உர விற்பனையை 40.02 லட்சம் டன் (எல்.டி) ஆகக் காட்டுகின்றன. இது 2019 மே மாதத்திற்கான 20.24 லட்சம் டன் விற்பனையை விட இரு மடங்கு அதிகம் மட்டுமல்ல, 2018 ஆம் ஆண்டின் அதே மாதத்தில் 22.61 லட்சம் டன்னுக்கும் அதிகமாக இருந்தது.
மேலும், நவம்பர் முதல் ஒவ்வொரு மாதமும் முந்தைய ஆண்டை விட இரட்டை இலக்க விற்பனையை பதிவு செய்துள்ளது (அட்டவணையைப் பார்க்கவும்), இது வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட 2019-20 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சமீபத்திய காலாண்டு மதிப்பீடுகளுடன் ஒத்துப்போகிறது.
தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் தரவுகள்படி, 2019 அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் பண்ணைத் துறை ஆண்டுக்கு 3.6% ஆக வளர்ந்துள்ளது. 2020 ஜனவரி-மார்ச் மாதங்களில் 5.9% ஆகவும், அதே காலாண்டுகளில் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் 3.5% மற்றும் 3% ஆகவும் வளர்ச்சி அடைந்துள்ளது.
“விவசாயிகள் உரங்களை வாங்குகிறார்கள், இதனால், உரங்களுக்கான தேவையை நாம் தெளிவாகக் காணலாம். பொதுவாக, எங்கள் விற்பனையாளர்களில் 70% விற்பனையாளர்களுக்கு (மொத்த விற்பனையாளர்களுக்கு) கடன் வழங்கப்படுகிறது. கடன் விற்பனை ஏப்ரல் மாதத்தில் 75-90 நாட்கள் வரை நீடிக்கிறது. இது மே மாதத்தில் 45-60 நாட்களாகவும் ஜூன் மாதத்தில் 15-30 நாட்களாகவும் ஜூலை மாதத்தில் 7-10 நாட்கள் என்று குறைகிறது. ஆனால் இந்த முறை, 30% விற்பனை மட்டுமே கடனில் உள்ளது. விநியோகஸ்தர்கள் 70% பணத்தை முன்பணமாக செலுத்துவதன் மூலம் பொருட்களை எடுத்துக்கொள்கிறார்கள். சில்லறை விற்பனையாளர்களிடமிருந்தும் (ஒவ்வொரு வியாபாரி 30-40 பேருக்கு சப்ளை செய்கிறார்) மற்றும் விவசாயிகளிடமிருந்தும் நல்ல முன்னேற்றத்தை குறிக்கிறது இது.” என்று ஒரு முன்னணி தனியார் துறை உர நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கூறினார்.
“கடந்த ஆண்டு அதிகமான பருவமழை காரணமாக ரபி பருவத்தில் இருந்து உரங்களின் தேவை அதிகமாக உள்ளது. இது நிலத்தடி நீரை புதுப்பிக்க செய்யவும், நீர்த்தேக்கங்களை முழு கொள்ளளவு நிரப்பவும் உதவியது. எனவே, விவசாயிகள் அதிக பரப்பளவில் நடவு செய்தனர். இந்த ஆண்டு குளிர்காலம் மற்றும் பருவமழைக்கு முந்தைய மழை உள்ளிட்ட வரவிருக்கும் காரீஃப் பருவத்திற்கு மேம்பட்ட மண்ணின் ஈரப்பதத்தைப் பயன்படுத்த விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்” என்று ஒரு உர கூட்டுறவு நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் கூறினார்.
ஏப்ரல்-மே மாதங்களில் ஆண்டு விற்பனை வளர்ச்சி யூரியாவுக்கு 63.6% (ஏப்ரல்-மே 2019 இல் 19.05 லட்சம் டன்னுக்கு எதிராக 31.17 லட்சம் டன்), டி-அம்மோனியம் பாஸ்பேட் விற்பனை வளர்ச்சி 104.8%, நைட்ரஜன்-பாஸ்பரஸ்-பொட்டாஷ் சல்பர் காம்ப்ளக்ஸ் உர விற்பனை வளர்ச்சி 123.7%, மியூரேட் ஆஃப் பொட்டாஷுக்கு விற்பனை வளர்ச்சி 62.2%, ஒற்றை சூப்பர் பாஸ்பேட் விற்பனை வளர்ச்சி 42.5% காம்போஸ்ட் உரம் உர விற்பனை வளர்ச்சி 36.8% ஆக அதிகரித்துள்ளது.
ஏப்ரல் மாத விற்பனையில் ஏற்பட்ட அதிகரிப்பு ஓரளவு அச்சம் தருவதாக இருக்கலாம். பொதுமுடக்கம் காரணமாக உற்பத்தி மற்றும் விநியோக இடையூறுகள் பற்றி அஞ்சுவதால் விநியோகஸ்தர்கள் உரங்களை சேமித்து வைக்க விரும்பினர். மேலும், ரூபாய் பலவீனமடைவதால் இறக்குமதி செய்யப்பட்ட உரங்களின் விலை அதிகரிக்கும் என்ற கவலையும் இருந்தது. ஆனால், மே மாதத்தில் அனைத்து உரங்களிலும் விற்பனை இன்னும் சிறப்பாக உள்ளது என்பது உண்மையான அடிப்படை தேவையை பிரதிபலிக்கிறது. இது உச்ச பருவத்தில் (ஜூன்-ஆகஸ்ட்) நீடிக்குமா என்பது பருவமழை எவ்வாறு வெளியேறுகிறது என்பதைப் பொறுத்தது” என்று மற்றொரு தொழில்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை திங்கள்கிழமை கேரளாவில் தொடங்கியுள்ளது. 4 மாத (ஜூன்-செப்டம்பர்) பருவத்தில் நாட்டிற்கு மழைப்பொழிவு சராசரியாக 102% ஆக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது, இது ஒரு வழக்கமான பருவமழைப் போன்றது ஆகும்.
மண்ணின் ஈரப்பதம் தவிர, உரங்களை வாங்குவது என்பது அரசாங்க தானிய கொள்முதல் காரணமாக விவசாயிகளின் பணப்புழக்கத்தாலும் இயக்கப்படுகிறது. இந்திய உணவுக் கூட்டு ஸ்தாபனமும், மாநில நிறுவனங்களும், மே 29 ஆம் தேதி வரை, ஏப்ரல் நடுப்பகுதியில் அறுவடை செய்யப்பட்ட 2019-20 கோதுமை பயிரில் 354.08 லட்சம் டன் வாங்கின. இதன் மதிப்பு, குறைந்தபட்ச ஆதரவு விலையில் (எம்.எஸ்.பி) குவிண்டால் ஒன்றுக்கு 1,925 ரூபாய் என்று வாங்கியிருந்தால் சுமார் 68,200 கோடி ரூபாய் அளவு இருக்கும். கூடுதலாக, 9.55 லட்சம் டன் சென்னா (சுண்டல்), 6.82 லட்சம் டன் பட்டாணி, மற்றும் 6.48 லட்சம் கடுகு ஆகியவற்றின் மொத்த எம்எஸ்பி மதிப்பு சுமார் 11,500 கோடி ரூபாய்க்கு தற்போது வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 24-ம் தேதி பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னர் பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் சுமார் 8.89 கோடி விவசாயிகளுக்கு ரூ.2,000 முதல் தவணையாக நேரடி பண பரிமாற்றத்த்தின் கீழ் சுமர் ரூ.97,500 கோடி செலுத்தப்பட்டுள்ளது. இந்த பணப்புழக்கம் இப்போது உரங்கள் மற்றும் பிற பண்ணை உள்ளீடுகளில் மீண்டும் முதலீடு செய்யப்படுகிறது” என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய பிரதேசம் மாநிலம், நர்சிங்க்பூர் மாவட்டத்தில் உள்ள நன்ஹேகான் கிராமத்தில் தனது 60 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயி ராவ் குலாப் சிங் லோதி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “என்னுடைய 36 ஏக்கர் நிலத்தில் விளைந்த 600 குவிண்டால் கோதுமையை மே 20 மற்றும் 22 தேதிகளில் வாங்கப்பட்டது. என்னுடைய 10 ஏக்கர் நிலத்தில் விளைந்த 70 குவிண்டால் மசூர் பருப்பை விற்பனை செய்யவில்லை. அதனுடைய தற்போதைய சந்தை குவிண்டாலுக்கு ரூ.5,000. அதனுடைய குறைந்த பட்ச ஆதார விலை ரூ.4,800. இந்த கார் பருவத்தில் கிராம்பு விதைக்க முடிவு செய்துள்ளேன். ஏனென்றால், அது ஒரு குவிண்டால் குறைந்த பட்சவிலை ரூ.6,000க்கு பதிலாக ரூ.7,000க்கு விற்பனையாகிறது. பருப்பு வகைகளுக்கான இறக்குமதி வரிகளை அரசாங்கம் குறைக்கக் கூடாது. அதற்கு பதிலாக விவசாயிகள் கொஞ்சம் பணம் சம்பாதிக்க அனுமதிக்க வேண்டும்” என்று கூறினார்.