/tamil-ie/media/media_files/uploads/2019/04/Ravindra-Jadeja.jpg)
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா கடந்த மாதம் பா.ஜ.க-வில் இணைந்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த 14-ம் தேதி, ரவிந்திர ஜடேஜாவின் தந்தை அனிருதுசிங், சகோதரி நைனாபா ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர்.
குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக வரும் 23-ம் தேதி தேர்தல் நடக்கிறது.
மனைவி ஒரு கட்சி, அப்பா - சகோதரி வேறொரு கட்சி என்ற நிலையில், ஜடேஜா எந்தக் கட்சியை ஆதரிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கும், அரசியல் ஆர்வலர்களுக்கும் அதிகரித்தது.
I support BJP.@narendramodi#rivabajadeja jai hind ???????? pic.twitter.com/GXNz5o07yy
— Ravindrasinh jadeja (@imjadeja) April 15, 2019
இந்நிலையில், ‘ஐ சப்போர்ட் நரேந்திரமோடி’ #ரிவபாஜடேஜா ஜெய் ஹிந்த்” என நேற்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் ஜடேஜா.
இதற்கிடையே உலகக்கோப்பை கிரிக்கெட்டில் விளையாட ஜடேஜா தேர்ந்தெடுக்கப்பட்டு, நேற்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.