Advertisment

விவசாயிகள், மீனவர்கள், சிறு வணிகர்களுக்கு உதவி: நிர்மலா சீதாராமன் உரை ஹைலைட்ஸ்

Nirmala Sitharaman Press Meet : விவசாயிகள், மீனவர்கள், சிறு வணிகர்களுக்கு உதவி, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச உணவு, தானியங்கள், 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
FM Nirmala Sitharaman live on 20 Lakh Crore Economic Package

Nirmala Sitharaman Press Meet : விவசாயிகள், மீனவர்கள், சிறு வணிகர்களுக்கு உதவி, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச உணவு, தானியங்கள், 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Advertisment

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த, ரூபாய் 20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டங்களில், ரூபாய் 3.60 லட்சம் கோடிக்கான திட்டங்களை நேற்று அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதில், கடன் பெறும் விவசாயிகள் முதல் 3 மாதங்களுக்கு தவணை செலுத்த தேவையில்லை; நாடு முழுவதும் 3 கோடி விவசாயிகளுக்கு கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது.

சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை கிடைக்க நடவடிக்கை. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் கிராமங்களிலேயே வேலைவாய்ப்பு வழங்க 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நடவடிக்கை.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு இலவச அரசி, கோதுமை அளிக்கப்படும். இதற்காக 3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடைவார்கள். ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா உணவு தானியங்கள் கிடைக்கும்

உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரயில் சேவை ரத்து

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Nirmala Sitharaman Press Conference Updates: நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பு














Highlights

    19:54 (IST)14 May 2020

    திட்டங்கள் ஏமாற்றம் அளிப்பவையாக உள்ளன

    மத்திய நிதியமைச்சர் அறிவித்த திட்டங்கள் ஏமாற்றம் அளிப்பவையாக உள்ளன. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கைவிடப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கான நிவாரணம் இல்லை. ப.சிதம்பரம் கூறியதுபோல, மக்கள் கையில் பணப் புழக்கத்திற்கு, குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் அளிப்பது அவசியம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். .

    17:16 (IST)14 May 2020

    ரூ.2 லட்சம் கோடி கூடுதல் கடன்

    ’மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது’

    2.50 கோடி விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கி ரூ.2 லட்சம் கோடி கூடுதல் கடன் தரப்படும்

    - நிர்மலா சீதாராமன்

    17:14 (IST)14 May 2020

    கூடுதல் நிதி -நபார்டு மூலம் வழங்கப்படும்

    விவசாயிகளுக்கு ரூ. 30,000 கோடி அவசரகால கூடுதல் நிதி -நபார்டு மூலம் வழங்கப்படும்

    * கிராம வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் மூலம் இந்த நிதி வழங்கப்படும். 3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள்

    17:13 (IST)14 May 2020

    பழங்குடியினருக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்

    காடுகள் தொடர்பான துறையில் பழங்குடியினருக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்

    * பழங்குடி நலன் சார்ந்த 6 ஆயிரம் கோடி மதிப்பிலான மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட திட்டங்களுக்கான ஒப்புதல் 10 நாள்களில் வழங்கப்படும்

    17:13 (IST)14 May 2020

    மக்களுக்கான வேலைவாய்ப்பு திட்டங்கள்

    பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களுக்கான வேலைவாய்ப்பு திட்டங்கள்

    * மாநில அரசுகளின் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்

    * காடுகளை உருவாக்குதல் காடுகளை பாதுகாத்தல் உள்ளிட்ட திட்டங்கள் இவற்றில் அடங்கும்

    17:13 (IST)14 May 2020

    திட்டம் மார்ச் 2021 வரை நீட்டிப்பு

    ரூ.6 லட்சம் முதல் 18 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறும் நடுத்தர குடும்பங்களுக்கு வீட்டுக்கடனில் மானியம் வழங்கும் திட்டம் மார்ச் 2021 வரை நீட்டிப்பு

    * ஏற்கனவே 3.3 லட்சம் நடுத்தர வருவாய் பிரிவினர் பயன் பெறும் நிலையில் இந்த அறிவிப்பினால் மேலும் 2.5 லட்சம் பேர் பயன்

    17:06 (IST)14 May 2020

    மலிவு விலை வாடகை குடியிருப்புகள்

    புலம்பெயர் தொழிலாளர்களுக்காக நகரங்களில் உள்ள பயன்படாத அரசு கட்டிடங்கள், அரசு - தனியார் பங்களிப்புடன் (PPP) மலிவு வாடகை குடியிருப்புகளாக மாற்றப்படும். - நிதியமைச்சர்

    17:01 (IST)14 May 2020

    10,000 ரூபாய் வரை கடன் வசதி

    50 லட்சம் சாலையோர வியாபாரிகள் இந்தியாவில் உள்ளனர்

    ரூ.5000 கோடி மதிப்பில் சிறப்பு நிதி உதவி ஒருவருக்கு 10,000 ரூபாய் வரை கடன் வசதி

    சாலையோர வியாபாரிகளுக்கு நடைமுறை மூலதனமாக பத்தாயிரம் ரூபாய் கடனுதவி வழங்கப்படும்.

    சிறு வணிகர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1.62 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்

    16:59 (IST)14 May 2020

    1500 கோடி ரூபாய்

    50,000 ரூபாய்க்கு குறைவான முத்ரா கடன்களுக்கான வட்டி 2% குறைப்பு

    * இதற்காக 1500 கோடி ரூபாய் வட்டி மானியமாக வழங்கப்பட உள்ளன

    முத்ரா வட்டி மானியம் காரணமாக மூன்று கோடி சிறு வணிகர்கள் பயன்பெறுவார்கள்

    16:55 (IST)14 May 2020

    2 சதவீத வட்டி மானியம்

    தொழில் நிறுவனங்களே தங்கள் ஊழியர்களை குடியமர்த்த குடியிருப்புகளை உருவாக்கலாம் அதற்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்

    * சரியாக கடனை கட்டக்கூடிய சிறு வணிகர்களுக்கு 2 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்

    - நிதித்துறை அமைச்சர்

    16:52 (IST)14 May 2020

    குறைந்த விலை குடியிருப்பு வசதி

    &feature=youtu.be" target="_blank" rel="noopener">புலம்பெயர் தொழிலாளர்களுக்கான குறைந்த விலை குடியிருப்பு வசதி. தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் வாடகை வீடு வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும். பெரிய நகரங்களில் உள்ள பயன்படாத அரசு குடியிருப்புகள் வாடகை குடியிருப்புகளாக மாற்றப்படும்.

    - நிர்மலா சீதாராமன்

    16:51 (IST)14 May 2020

    ஒரே நாடு ஒரே ரேஷன்

    வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் ஒரே கார்டு ஒரே ரேஷன் திட்டம் 23 மாநிலங்களில் அமல்படுத்தப்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் 100 சதவிகிதம் அமல்படுத்தப்படும். 

    16:49 (IST)14 May 2020

    நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடைகளிலும் பயன்படுத்தலாம்

    ரேஷன் அட்டை இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும்

    8 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த உணவு தானியங்கள் சென்றடையும்

    மாநில அரசுகள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்

    மாநில அரசுகள் இதற்கு தகுதியான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அடையாளம் காண்பார்கள்

    ஒருவருக்கு ஒரு கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் ஒரு கிலோ பருப்பு போன்றவை வழங்கப்படும்

    ரேஷன் அட்டைகளை நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடைகளிலும் பயன்படுத்தலாம்

    - நிதியமைச்சர்

    16:44 (IST)14 May 2020

    இலவச அரசி, கோதுமை

    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு இலவச அரசி, கோதுமை அளிக்கப்படும். இதற்காக 3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடைவார்கள். ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா உணவு தானியங்கள் கிடைக்கும் - நிர்மலா சீதாராமன்

    16:40 (IST)14 May 2020

    தொழிலாளர் ஈட்டுறுதி (ESI) திட்டத்தைப் பெறலாம்

    10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர் ஈட்டுறுதி (ESI) திட்டத்தைப் பெறலாம். ஆபத்தான பணிகளை செய்யும் அனைத்து பணியாளர்களும் ESI கட்டாயமாக்க நடவடிக்கை.

    - நிதியமைச்சர்

    16:32 (IST)14 May 2020

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் - 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நடவடிக்கை 

    சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை கிடைக்க நடவடிக்கை

    * புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் கிராமங்களிலேயே வேலைவாய்ப்பு வழங்க 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நடவடிக்கை 

    - மத்திய நிதி அமைச்சர்

    16:28 (IST)14 May 2020

    14.62 கோடி மனித வேலை நாட்கள்

    100 நாள் வேலைத் திட்டத்தின் மூலமாக மே 13ம் தேதி வரை 14.62 கோடி மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. - நிர்மலா சீதாராமன்

    16:26 (IST)14 May 2020

    3 கோடி முக கவசங்கள்

    12,000 சுய உதவிக் குழுக்கள் மூலம் 3 கோடி முக கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன

    * 1.20 லட்சம் லிட்டர் சானிடைசர்- சுய உதவி குழு மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது

    16:23 (IST)14 May 2020

    மூன்று வேளை உணவு இலவசம்

    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, தங்க இடம் கொடுக்க மாநில பேரிடர் நிதியை பயன்படுத்தி கொள்ள அனுமதியளித்தோம்

    * நகர்ப்புறத்தில் வாழும் வீடில்லா ஏழைகளுக்கு மத்திய அரசின் சார்பில் மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது

    16:22 (IST)14 May 2020

    63 லட்சம் கடன்கள்

    3 கோடி விவசாயிகள் கடன்களுக்கு தவணை செலுத்துவதிலிருந்து 3 மாத விலக்கு பெற்றனர்

    மார்ச்-1 முதல் ஏப்ரல் 30 வரை ரூ.86600 கோடி மதிப்பில் 63 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    - நிதியமைச்சர்

    16:22 (IST)14 May 2020

    மேம்பாட்டு நிதியத்தின் கீழ் ரூ.4,200 கோடி

    நபார்டு உள்ளிட்ட வங்கிகள் மூலமாக விவசாயத்துறைக்கு கடன் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது

    ரூ.6700 கோடி மாநில அரசுகளுக்கு விவசாய கொள்முதலுக்காக வழங்கப்பட்டுள்ளது

    ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் கீழ் ரூ.4,200 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    - நிதியமைச்சர்

    16:22 (IST)14 May 2020

    ரூ.29,500 கோடி கடனுதவி

    ஊரக கிராமப்புற வங்கிகளுக்கு நபார்டு மூலம் ரூ.29,500 கோடி கடனுதவி!

    25 லட்சம் விவசாயிகளுக்கு புதிதாக கடன் அட்டைகள் வழங்கப்படும்!

    கடந்த 2 மாதங்களில் 25 லட்சம் கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன!

    - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    16:21 (IST)14 May 2020

    மே 31 வரை தள்ளுபடி

    சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது - நிதியமைச்சர்

    16:19 (IST)14 May 2020

    தவணை செலுத்த தேவையில்லை

    கடன் பெறும் விவசாயிகள் முதல் 3 மாதங்களுக்கு தவணை செலுத்த தேவையில்லை; நாடு முழுவதும் 3 கோடி விவசாயிகளுக்கு கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது

    - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    16:18 (IST)14 May 2020

    25 லட்சம் விவசாயக் கடன் அட்டைகள்

    கடந்த இரு மாதங்களில் 25 லட்சம் விவசாயக் கடன் அட்டைகளை அளித்துள்ளோம்.

    * அவர்களுக்கு 25 ஆயிரம் கோடி அளித்துள்ளோம், விவசாயிகளை மறந்துவிடவில்லை - மத்திய நிதி அமைச்சர்

    16:16 (IST)14 May 2020

    ரூ.4.22 லட்சம் கோடி அளவுக்கு கடனுதவி

    மூன்று கோடி சிறு விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் ரூ.4.22 லட்சம் கோடி அளவுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது - நிதியமைச்சர்

    16:08 (IST)14 May 2020

    மொத்தமாக 9 திட்டங்கள்

    மூன்று திட்டங்கள் புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவும், ஒரு திட்டம் சாலையோர வியாபாரிகளுக்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இன்று 9 திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளது.

    16:06 (IST)14 May 2020

    சிறு வணிகர்கள் திட்டங்கள்....

    சாலையோர வியாபாரிகள், சிறு வணிகர்கள் போன்றோருக்கான திட்டங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. 

    16:05 (IST)14 May 2020

    இரண்டாம் கட்ட அறிவிப்புகள்

    பிரதமர் அறிவித்த "தன்னிறைவு இந்தியா" திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் நித்தியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

    16:03 (IST)14 May 2020

    சந்திப்பு தொடங்கியது

    நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது. 

    15:51 (IST)14 May 2020

    லைவ் காண்பது எப்படி?

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லைவ் உரையை இந்த யூடியூப் பக்கத்தில் நேயர்கள் காணலாம்,

    15:50 (IST)14 May 2020

    நிர்மலா சீதாராமன் லைவ்

    பிரதமர் மோடி, ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புத் தொகுப்பு திட்டத்தை அறிவித்தார். இந்த தொகுப்பு குறித்த விவரங்களை நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். நேற்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சிறு, குறு, நடத்தர நிறுவனங்கள் துறையை மையமாகக் கொண்டு பல்வேறு சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டார். வருமான வரி தொடர்பான அறிவிப்புகளும், டிடிஎஸ், பிஎஃப் தொடர்பான அறிவிப்புகளும் அதில் இடம்பெற்றிருந்தன.

    Nirmala Sitharaman
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment