அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்வதற்கான அண்மையில் முன்மொழியப்பட்ட ஒரு பகுதியாக உள்கட்டமைப்பு திட்டங்களின் முதல் பட்டியலை அரசாங்கம் இறுதி செய்துள்ளது. அது டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை தெரிவித்தார்.
அண்மையில் அரசாங்கத்தால் பெருநிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து 12 உலகளாவிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளன.
ஒரு குழு அதிகாரிகள் திட்டமிட்டு கவனித்துவந்தனர். அதனால், நிதி தயாரானதும் முதலிடு செலுத்தப்படும். இந்த பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. டிசம்பர் 15 தேதிக்கு முன்பாக, குறைந்தது பத்து பெரிய திட்டங்களை நிறைவேற்றுவதை அறிவிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். எனவே பணிகள் விரைவாக நகர்கின்றன” என்று நிர்மலா சீதாராமன் எகனாமிக் டைம்ஸ் விருதுகள் 2019 நிகழ்ச்சியில் கூறினார்.
ரூ.100 லட்சம் கோடி உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 2019-20 முதல் 2024-25 வரை “தேசிய உள்கட்டமைப்பு திட்டமிடலுக்கு” ஒரு வரைவை தயாரிக்க பொருளாதார விவகார செயலாளர் தலைமையிலான பணிக்குழுவை நிதி அமைச்சகம் செப்டம்பர் மாதம் அமைத்திருந்தது.
பெருநிறுவனங்களுக்கான வரி விகிதக் குறைப்பை மத்திய அரசு அறிவித்தபோது, சீனாவிலிருந்து வெளியேற விரும்பும் நிறுவனங்களைப் பற்றி ஆராய ஒரு பணிக் குழுவை அமைக்கும் என்று நிர்மலாசீதாராமன் கூறினார். “இந்த பணிக்குழு ஏற்கெனவே அத்தகைய நிறுவனங்கள் பலவற்றை தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளது. இறுதியாக எனக்குத் தெரிந்து, அவர்களில் 12 பேருடன் ஏற்கெனவே பேசப்பட்டுள்ளது. அவர்களின் மனம் புரிந்து கொள்ளப்பட்டது. அவர்களின் எதிர்பார்ப்பு பட்டியலிடப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் இப்போது இருக்கும் இடத்திலிருந்து மாறுவதற்கு அரசாங்கம் ஒரு உறுதியான வாய்ப்பைக் கொண்டு வர முடியும். எனவே, சுற்றுச்சூழல் அமைப்புகள் இங்கே கட்டமைக்கப்படலாம், புதிய தொழில்கள் வரலாம்” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சீனாவிலிருந்து வெளியேறும் புதிய தொழில்களைக் கொண்டுவருவதற்காக வழங்கப்பட்ட உறுதிமொழி வேகமாக முன்னேறி வருகிறது என்று அவர் கூறினார். “நான் உறுதியாக நம்புகிறேன், அதில் சில முன்னேற்றங்களை என்னால் தெரிவிக்க முடியும்” என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் பற்றி பேசுகையில், அடுத்த வளர்ச்சி விகித எண்ணிக்கை சிறப்பாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், அக்டோபரில் கடன் வழங்கும் திட்டத்தின் போது, பொதுத்துறை வங்கிகள் ரூ .2.5 லட்சம் கோடிக்கு மேல் வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.
இருப்பினும், ஒரு சார்பான உத்தரவாதத் திட்டத்தின் முன்னேற்றம் மிகவும் திருப்திகரமாக இல்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினார். பணப்புழக்கத்திற்கான தடுப்பு புள்ளிகளை அடையாளம் காண்பதில் அவர்கள் கவனம் செலுத்தியதாகவும், இந்திய ரிசர்வ் வங்கியின் உதவியுடன், பணப்புழக்க பற்றாக்குறை இல்லை என்பதை அரசாங்கத்தால் நிரூபிக்க முடிந்தது என்றும் அவர் கூறினார்.
முன்னணி வரி தொடர்பாக பேசிய நிதியமைச்சர், இந்தியா முழுவதும் வரி நிர்வாகிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினேன். அவர்களின் இலக்குகளை அடைவது சாத்தியமில்லை என்றாலும் அவர்கள் துன்புறுத்தல் என்று கருதக்கூடிய எதையும் செய்யக்கூடாது. வரிவிதிப்பில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக நேரடி வரியில் முகமற்ற மதிப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மறைமுக வரி கூட இந்த முறையை விரைவில் கொண்டிருக்கும் என்றும் அவர் கூறினார். ஜிஎஸ்டிக்கான அமைப்புகள் செயல்படுகின்றன. இதனால் அவை கூறுவதைப் போல மிகவும் எளிமையாகிறது என்று அவர் கூறினார். மேலும், “நாங்கள் அதை எளிமைப்படுத்த விரும்புகிறோம்” என்று அவர் கூறினார்.
வரி விகிதங்களின் நிலைத்தன்மை தொடர்பாக பேசிய நிர்மலா சீதாராமன், “நாங்கள் அனைத்து மாநிலங்களுடனும் ஒரு நல்ல உரையாடலை மேற்கொண்டு வருகிறோம். மேலும் அத்தியாவசிய பொருட்கள் விலக்கு அளிக்கப்படவிட்டால், மிகக் குறைந்த அளவிற்கு வைக்கப்படலாம் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். ஆனால், மீதமுள்ள வரிவிகிதங்களை நாங்கள் நிலைப்படுத்த முயற்சிக்கிறோம்.” என்று கூறினார்.
இதற்கு முந்தைய நாள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பக்கத்தில், அரசாங்கம் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன் தலையீடுகள் மற்றும் பொறுப்புகளுடன் தொடரும் என்று தெரிவித்திருந்தார்.
“இன்று, பிரதமர் அலுவலகம் நரேந்திர மோடியின் இரண்டாவது தவணை ஆறு மாதங்கள் நிறைவடைந்ததைக் குறிப்பிடுகிறோம். கட்டமைப்பு சீர்திருத்தங்களில் பல குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் இந்த மாதங்களில் எடுக்கப்பட்டுள்ளன. பொருளாதாரத்தின் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொறுப்புளும் தலையீடுகளும் தொடரும்.” என்று அவரது ட்விட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகவும் குறைவாக 4.5 சதவீதமாகக் குறைந்தது. முதன்மை உற்பத்தியில் ஏற்பட்ட சுருக்கம், பலவீனமான முதலீடு மற்றும் நுகர்வு தேவை காரணமாக இந்த உள்நாட்டு உற்பட்தி வளர்ச்சி குறைந்ததாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.