Finance minister Nirmala Sitharaman : இந்திய பொருளாதாரம் பெரும் அளவில் வீக்கம் அடைந்து வருவதைத் தொடர்ந்து நிலைமையை சீர் செய்ய தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது மத்திய நிதி அமைச்சகம். நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிதி அமைச்சர், இந்தியா முழுவதும் 400 மாவட்டங்களில் ஒரு மாதத்திற்கு சிறப்பு கடன் வழங்கும் முகாம்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
Advertisment
சிறுகுறு தொழில்முனைவோர்கள், விவசாயிகள் இந்த முகாம்களை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான கடன்களை பெற்றுக் கொள்ளும் வகையில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் Non Banking Financial Companies (NBFCs) ஒன்றாக இணைந்து இந்த முகாம்களை வழங்குவார்கள் என்று அறிவித்துள்ளார் அவர்.
வருகின்ற மார்ச் 31, 2020ம் ஆண்டு வரையில், சிறுகுறு தொழில்முனைவோர்கள் பெற்றுள்ள, திருப்பி செலுத்தப்படாத கடன்களை வாராக்கடன்களாக அறிவிக்க வேண்டாம் என்றும் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் நிதி அமைச்சர். இன்று முதல் 29ம் தேதி வரை முதல் 200 மாவட்டங்களில் இந்த சிறப்பு வங்கிக் கடன் முகாம்கள் நடத்தப்படும் என்றும், அக்டோபர் 10 முதல் 15ம் தேதி வரையில் அடுத்தகட்டமாக 200 மாவட்டங்களில் வங்கிக் கடன் முகாம்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகித்ததை முடிந்த வரையில் குறைத்து அறிவித்துள்ளது வங்கி நிறுவனங்கள் மாறாக இயன்ற வரையில் கடன்களை அளிக்கவும் முன் வந்துள்ளது. மேலும் வங்கியில்லாத நிதி நிறுவனங்களிடம் இருந்து வங்கிகள் ரூ.93,018 கோடி ரூபாய் வரை கடந்த செப்டம்பர் முதல் இந்த செப்டம்பர் வரை பெறப்பட்டுள்ளது என்றும் அவர் அறிவித்தார்.
அரசின் அறிவுறுத்தலின் படி பொதுத்துறை வங்கிகள் 14 வங்கியில்லாத நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. மேலும் வங்கிகள் அளிக்கும் கடனுக்கான சராசரி லெண்டிங் ரேட்டுகளும் 27 பேசிஸ் புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் அறிவித்தார்.
ஆர்.பி. ஐ அறிவுறுத்தலின் படி வீடு மற்றும் வாகன கடன்கள், கன்ஸ்யூமர் கிரெடிட், கேஷ் கிரெடிட் லிமிட்ஸ் மற்றும் மோர்டேஜ் லோன்களுக்கு ரெப்போ ரேட்டுடன் கூடிய சலுகைகளை 15 பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன. இதுவரை 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கடங்கள் வழங்கப்பட்டுள்ளாதாகவும் அவர் அறிவித்தார். சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடந்த 2017-2018ம் ஆண்டில் மட்டும் 1.81 லட்சம் கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் 2018-2019ம் ஆண்டு 11.83 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் அறிவித்தார்.
ஒரே நேரத்தில் முழுமையாக கடன்களை அடைப்பதற்கான செக்-பாக்ஸ் முறையை 11 பொதுத்துறை வங்கிகள் ஏற்றுக் கொண்டுள்ளன. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டங்களில் இந்த முறையில் லோன்களை திருப்பிச் செலுத்திய தொழில்முனைவோர்கள் குறித்த டேட்டாக்களை மத்திய அரசு வங்கிகளிடம் இருந்து கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.