Finance Minister Nirmala Sitharaman tells at sbi chairman sbi heartless inefficient - இதயமில்லாத திறமையற்ற எஸ்பிஐ; வங்கி தலைவரை விளாசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் | Indian Express Tamil

இதயமில்லாத திறமையற்ற எஸ்பிஐ; வங்கி தலைவரை விளாசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

அஸ்ஸாமில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் 2.5 லட்சம் வங்கிக் கணக்குகள் செயல்படாததால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசாங்கத்திற்கு சொந்தமான மிகப்பெரிய வங்கி இதயமில்லாதது திறமையற்றது என்று குறிப்பிட்டு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கி மற்றும் அதன் உயர்மட்ட அதிகாரிகளை கடிந்து பேசியுள்ளார்.

Finance Minister Nirmala Sitharaman, nirmala sitharaman on sbi, assam tea workers, நிர்மலா சீதாராமன், அஸ்ஸாம், எஸ்பிஐ, reserve bank of india, himanta biswa sarma, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, tamil indian express news, Nirmala Sitharaman tells at sbi chairman, AIBOC, State bank of India

அஸ்ஸாமில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் 2.5 லட்சம் வங்கிக் கணக்குகள் செயல்படாததால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசாங்கத்திற்கு சொந்தமான மிகப்பெரிய வங்கி இதயமில்லாதது திறமையற்றது என்று குறிப்பிட்டு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கி மற்றும் அதன் உயர்மட்ட அதிகாரிகளை கடிந்து பேசியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 27-ம் தேதி குவஹாத்தியில் நடந்த நிதி சேர்க்கை திட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சி நிதி சேவைத் துறை சம்பந்தப்பட்ட மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுக்களுடன் (எஸ்.எல்.பி.சி) ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வின் ஆடியோ கிளிப்பில், சீதராமன் எவ்வளவு விரைவாக கணக்குகளை செயல்பட வைக்க முடியும் என்று கேட்கிறார். மேலும், இந்த கணக்குகள் செயல்பாட்டுக்கு வர ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிக்கு சில அனுமதி தேவை என்று ஒரு எஸ்பிஐ அதிகாரி கேட்கிறார். அது ஒரு வாரத்திற்குள் செய்ய முடியும்.

அப்போது நிதியமைச்சர் கோபமாக, “என்னை சோர்வடையச் செய்யாதீர்கள்… என்னை சோர்வடையச் செய்யாதீர்கள் (தெளிவில்லாமல் ஒலிக்கிறது) எஸ்பிஐ தலைவர் இந்த விஷயத்தில் நீங்கள் என்னை டெல்லியில் சந்திக்க வேண்டும். இதை நான் விடமாட்டேன். இது வேலையை முற்றிலும் தவிர்ப்பது. தோல்விக்கு நான் உங்களை முழுமையாக பொறுப்பேற்க செய்கிறேன். உங்களுடன் விரிவாக பேச உள்ளேன். நீங்கள் கணக்குகளைப் பெற வேண்டும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களில் ஒருவர் கூட உங்கள் கடுமையால் பாதிக்கப்படக் கூடாது” என்று கூறுகிறார்.

எஸ்.எல்.பி.சி கூட்டத்தில் அசாம் நிதி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் அஸ்ஸாம் மாநில, மத்திய அரசைச் சேர்ந்த பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆடியோ கிளிப்பிற்கு பதிலளித்த அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (ஏஐபிஓசி) மார்ச் 13-ம் தேதி ரஜ்னிஷ் குமார் மீது நேரடியாக விரும்பத்தகாத தாக்குதல் நடத்தியதாக நிதியமைச்சரை கண்டனம் செய்துள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஏஐஓபிசி பொதுச் செயலாளர் சவுமியா தத்தா கூறுகையில், “அவர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவை ஒரு இதயமற்ற வங்கி என்று முத்திரை குத்தியுள்ளார். மேலும் நாட்டின் மிகப்பெரிய வங்கியின் தலைவரான ரஜ்னிஷ் குமாரை அவமானப்படுத்தியுள்ளார். ஆம் வங்கியை பிணை எடுப்பதில் எஸ்பிஐ மீது பெரும் சுமையை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், பொதுத்துறை வங்கிகள் பல்வேறு அரசாங்க திட்டங்களுடன் முக்கியமாக சுமைகளை சுமத்தும்போது இந்த கருத்துக்கள் வந்திருப்பது முரணாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ஏஐஓபிசி அந்த அறிக்கையை தவறாக வெளியிடப்பட்டதாகக் கூறி சனிக்கிழமை அதை வாபஸ் பெற்றதாகக் கூறியது. இது குறித்து விளக்கம் கேட்க சவுமியாத தத்தாவை தொடர்புகொள்ள செய்த போன் அழைப்புகளுக்கும் மெசேஜ்களுக்கும் அவர் பதிலளிக்கவில்லை. என்றாலும், ஏஐஓபிசி-யின் நிர்வாக செயலாளர் பிரபீர் சோர்கெல் கூறுகையில், “நீங்கள் குறிப்பிட்ட கடிதத்தை நாங்கள் கொடுத்துள்ளோம். ஆனால், நாங்கள் அதை பின்னர் திரும்பப் பெற்றோம். இதெல்லாம்தான் நான் சொல்ல முடியும்.” என்று கூறினார்.

நள்ளிரவுக்குப் பிறகு, நிர்மலா சீதாராமன் ஏஐஓபிசி கடிதத்தை டுவிட் செய்து இது மார்ச் 13-ம் தேதி அறிக்கை தவறாக வெளியிடப்பட்டது. அது திரும்பப் பெறப்பட்டது என்று கூறினார்.

மும்பையில், எஸ்பிஐ செய்தித் தொடர்பாளர் ஒருவர், வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு தனது அறிக்கையைத் திரும்பப் பெற்றுள்ளது. மேலும், எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. எஸ்பிஐ தலைவர் மற்றும் நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட தனி அஞ்சல்களுக்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

குவஹாத்தியில் உள்ள எஸ்பிஐ வட்டாரத்தினர் கூறுகையில், “தோட்டத் தொழிலாளர்களுக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்கி அவற்றைத் தொடர்வது மிகவும் எளிதானது அல்ல. பல சிக்கல்கள் உள்ளன. ஆனால், ஆம், அதை நோக்கி ஒரு அரசாங்க உந்துதல் உள்ளது. அரசாங்கத்தின் கொள்கைகளை அறிவிப்பது ஒரு விஷயம். ஆனால், செயல்படுத்துவதில் பெரும்பாலும் பல தடைகள் உள்ளன. அவை கடக்கப்பட வேண்டும் – நாங்கள் அதை நோக்கி செயல்படுகிறோம். ஊழியர்களை களத்துக்கு அனுப்பி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.” என்று கூறினார்கள். மேலும், நிதியமைச்சர் இப்படி முரட்டுத்தனமாக பேசிய பிறகு வங்கி அதிகாரிகள் வருத்தத்தில் உள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அஸ்ஸாம் நிதியமைச்சர் சர்மா மார்ச் 13-ம் தேதி ஏஐஓபிசி-யின் அறிக்கையை இணைத்து, சனிக்கிழமை மாலை தாமதமாக தொடர்ச்சியாக டுவிட் செய்தார். அதில், கூட்டமைப்பு சூழலைப் புரிந்து கொள்ளவில்லை என்றும் அதை அவர் கடுமையாக எதிர்த்ததாகவும் கூறினார். 2017-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 8 லட்சம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வங்கி கணக்குகளை அரசு தொடங்கியது என்று தெரிவித்தார்.

அஸ்ஸாம் நிதியமைச்சர் சர்மா மார்ச் 6-ம் தேதி தனது பட்ஜெட் உரையில் இந்த விவகாரத்தை எழுப்பியிருந்தார். 2018-19 நிதியாண்டில், தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் 7,21,485 வங்கிக் கணக்குகளுக்கு நேரடி பயன் பரிமாற்றத்தின் மூலம் ரூ.5,000 மாற்றப்பட்டது. மேலும், 26 மாவட்டங்களில் உள்ள 752 தேயிலைத் தோட்டங்களில் இரண்டு சம தவணைகளில் தலா ரூ.2,500 மாற்றப்பட்டது என்று அவர் கூறினார்.

மேலும், சர்மா “இந்த திட்டத்துடன் முழு வேகத்தில் செல்வதைத் தடுக்கும் ஒரு பிரச்சினை, இந்த சில வங்கிக் கணக்குகள் தொடர்பான உங்கள் வாடிக்கையாளர் (KYC) விதிமுறைகளை அறிந்து கொள்ளுங்கள். இருப்பினும், அஸ்ஸாமிற்கு அண்மையில் வருகை தந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்.

அஸ்ஸாமின் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சமூகம் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான அரசாங்கத்தின் சிறப்பு மையமாக உள்ளது.

தேயிலைத் தோட்டங்களால் சூழப்பட்ட அஸ்ஸாம் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் இந்த கட்சி பெர்ய அளவில் வெற்றிகளைப் பெற்றது. மாநிலத்தில் 800 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அதோடு, தொழிலாளர்கள் பொருளாதார பின்தங்கிய நிலை, மோசமான சுகாதார நிலைமைகள் மற்றும் குறைந்த கல்வியறிவு வீதம் காரணமாக பாதிக்கப்படுகின்றனர்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Finance minister nirmala sitharaman tells at sbi chairman sbi heartless inefficient