நாடு முழுவதும் ஒரே வரி என்ற சீரான விதியில் செயல்பட்டு வரும் ஜிஎஸ்டி வரி எதிர்காலத்தில் குறைய வாய்ப்பு உள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சர்வதேச சுங்க நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உட்பல உயர் அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், அருண் ஜெட்லி ஜிஎஸ்டி குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரியில் சில பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்ததை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் தரப்பில் இருந்து பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து, கடந்த நவம்பர் மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், சில பொருட்களின் ஜி.எஸ்.டி. வரி விகிதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்பு, ஆடம்பர பொருட்களுக்கும் மட்டுமே 28 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்நிலையில், எதிர்காலத்தில் தற்போது புகழத்தில் இருக்கும் ஜிஎஸ்டி வரி மேலும் குறைய வாய்ப்புள்ளதாக அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது “நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் நோக்கில் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி நாட்டின் மறைமுக வரி முறையை முற்றிலும் மாற்றி விட்டது. மற்ற நாடுகளுடன் இதை ஒப்பிட்டு பார்க்கையில், இந்தியாவில் குறுகிய காலத்தில் ஜிஎஸ்டி நடைமுறை சாத்தியமாகியுள்ளது. இது இன்னும் பலமடையவும் வாய்ப்புள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் இந்த ஜிஎஸ்டி கட்டமைப்பு மாறவும், மேலும் சீரமைக்கப்படவும் வாய்ப்புள்ளது” என்றார்.
மேலும் பேசிய அவர், “கடந்த நவம்பர் மாதம் நடந்த ஜிஎஸ்டி கவன்சில் கூட்டத்தில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மது, சிகெரட் போன்ற பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீத வரி விதிக்கப்பட்டது. அதனுடன் 200 பொருட்களின் வரி குறைக்கப்பட்டதால், ஜிஎஸ்டி வருவாய் கடந்த நவம்பர் மாதம் 80,808 கோடியாக குறைந்தது.அதன் பின்பு இரண்டு மாத சரிவு தற்போது மாறி வருவாய் அதிகரிக்க தொடங்கியுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.