பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி முதல் 5 ஆட்சி அமைந்த 2014-ல் இருந்தே டிஜிட்டல் இந்தியா பிரசாரத்தை மத்திய அரசு திவிரமாக கட்டமைத்து வருகிறது. ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையை, ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், 2020-ம் ஆண்டு கொரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு, ரொக்கமில்லா பரிவர்த்தனை அதிகரித்தது. குறிப்பாக, யு.பி.ஐ பேமென்ட் பெரிய அளவில் அதிகரித்தது. யு.பி.ஐ பரிவர்த்தனை எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்றால், பெட்டிக்கடை முதல் பெரிய மால்கள் வரை என எல்லா இடங்களிலும் யு.பி.ஐ பரிவர்த்தனையைப் பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் அனைவரும் தங்கள் செல்போனில் இருந்து கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் யு.பி.ஐ பணத்தைச் செலுத்தி பொருட்களை வாங்குகிறார்கள். யு.பி.ஐ மூலம் பரிவர்த்தனையை மிகவும் எளிதாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், யு.பி.ஐ மூலம் ரூ.2000-க்கு அதிகமாக செய்யப்படும் யு.பி.ஐ பேமென்ட்களுக்கு 18% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும் என்று தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.
இந்த யு.பி.ஐ மூலம் ரூ. 2,000-க்கு மேல் செலுத்தப்பட்டால் 18% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி பொதுமக்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் யு.பி.ஐ பரிவர்த்தனைகள் 80% அளவில் ரூ.2000 என்கிற அளவில் நடக்கிறது. இந்த சூழலில், யு.பி.ஐ பரிவர்த்தனைக்கு ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டால் இது பகல் கொள்ளையாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் அதிருப்தி எழுந்தது.
மேலும், ஜம்மு காஷ்மீர், ஹரியானா உட்பட நான்கு மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், யு.பி.ஐ பரிவர்த்தனைகளுக்கு ஜி.எஸ்.டி அமல்படுத்தினால் அது இந்த 4 மாத தேர்தலில் எதிரொலிக்கும் என்று மத்திய அரசு உணர்ந்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், இன்று (செப்டம்பர் 9) நடந்த 54வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது.
ஆனால், இந்த கூட்டத்தில், யு.பி.ஐ மூலம் ரூ.2000-க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் 18% ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால், சில்லறை வணிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அதே நேரத்தில், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.