Finance Ministry restricts press access : நிதி அமைச்சகத்தின் வடக்குப் பிரிவில் அமைந்துள்ளது நிதிஅறிக்கை தயாரிக்கும் பகுதி. வருடத்தில் ஒரு முறை நடைபெறும் பட்ஜெட் தாக்கலிற்கு முன்பான நாட்களில் மட்டும் அங்கு நிதி அமைச்சரவைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி வழங்குவதில்லை. இதர நாட்களில் செய்தியாளர்கள் அங்கு செல்வதற்கு எந்தவித அனுமதியும் மறுக்கப்பட்டதில்லை.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நாள் முதல் செய்தியாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் பட்ஜெட் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நிதி அமைச்சகத்திற்குள் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. அதற்கு நிர்மலசீதாராமன் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த ட்வீட்டில் நிதி அமைச்சகத்தின் வடக்கு ப்ளாக்கில் உள்ளே செல்வதற்கு கட்டாயம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அவர்கள் பி.ஐ.பி. அடையாள அட்டை வைத்திருந்தாலும் சரி அவர்களுக்கும் முன் அனுமதி அவசியம் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. நிதி அமைச்சகத்தின் அதிகாரிகளை சந்திப்பதற்கு ஒரு முறை அனுமதி பெற்றுவிட்டால் அதற்காக தனியான எந்தவிதமான எண்ட்ரி பாஸூம் தேவையில்லை என்றும் அந்த ட்விட்டர் ஹேண்டிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சகத்திடம் இருந்து தகவல்களை பெறுவதற்கு ஊடகவியலாளர்களுக்கு இது மிகவும் எளிமையாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. நிதி அமைச்சகத்திற்குள் வர யாருக்கும் அனுமதி மறுக்கப்படவில்லை என்பதையும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
பிரதம அலுவலகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், புலனாய்வுத்துறை அதிகாரிகளை சந்திப்பதற்கு மட்டுமே இதற்கு முன்பு, முன் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நிதி அமைச்சகமும் இந்த நடைமுறையை பின்பற்ற துவங்கியுள்ளது. உத்யோக் பவன், நிர்மான் பவன், நிதி ஆயோக் ஆகிய நிர்வாக கட்டிடங்களுக்குள் நுழைவதற்கு எப்போதுமே பி.ஐ.பி. ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதில்லை. உள்துறை அமைச்சகத்தின் நிர்வாக கட்டிடங்களுக்குள் நுழைய PIB accreditation போதுமானது என்பது குறிப்பிடத்தக்கத்து.