Advertisment

தேர்தல் பத்திரம் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக புகார்; நிர்மலா சீதாராமன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு

தேர்தல் பத்திரம் திட்டம் மூலம் ரூ8000 கோடிக்கும் மேல் மிரட்டி பணம் பறிக்கப்பட்டுள்ளதாக புகார்; நிர்மலா சீதாராமன், அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் மீது பெங்களூரில் எஃப்.ஐ.ஆர் பதிவு

author-image
WebDesk
New Update
nirmala sitaraman

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (கோப்பு புகைப்படம்)

தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள தேர்தல் பத்திர திட்டம் தொடர்பான புகார் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அமலாக்கத் துறை (ED) அதிகாரிகள் மற்றும் சில பா.ஜ.க தலைவர்கள் மீது பெங்களூரு போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: FIR against Nirmala Sitharaman, others over ‘extortion’ linked to electoral bonds scheme

பெங்களூருவில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் பிரிவுகள் 384 (பணம் பறித்தல் தண்டனை) மற்றும் 120 பி (குற்றச் சதி) ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘ஜனஅதிகார சங்கர்ஷ பரிஷத்’ இணைத் தலைவர் ஆதர்ஷ் ஆர்.அய்யர் அளித்த புகாரில், கர்நாடக பா.ஜ.க தலைவரும் பி.எஸ் எடியூரப்பாவின் மகனுமான பி.ஒய் விஜயேந்திரா மற்றும் கட்சித் தலைவர் நளின்குமார் கட்டீல் உள்ளிட்டோர் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

"குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தல் பத்திரங்கள் என்ற போர்வையில் மிரட்டி பணம் பறித்ததாகவும், 8,000 கோடி ரூபாய்க்கும் மேல் பலன் பெற்றதாகவும்" புகார்தாரர் ஆதர்ஷ் ஆர்.அய்யர் குற்றம் சாட்டியுள்ளார்.

நிர்மலா சீதாராமன், அமலாக்கத் துறை அதிகாரிகளின் ரகசிய உதவி மற்றும் ஆதரவின் மூலம், மாநில மற்றும் தேசிய அளவில் மற்றவர்களின் நலனுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மிரட்டி பணம் பறிக்க உதவினார் என்றும் ஆதர்ஷ் ஆர்.அய்யர் குற்றம் சாட்டினார்.

"தேர்தல் பத்திரங்கள் என்ற போர்வையின் கீழ் மிரட்டி பணம் பறிக்கும் செயல்கள் அனைத்தும், பல்வேறு மட்டங்களில் உள்ள பா.ஜ.க நிர்வாகிகளுடன் கைகோர்த்து திட்டமிடப்பட்டுள்ளது" என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு, உச்ச நீதிமன்றம், பிப்ரவரியில், நரேந்திர மோடி அரசாங்கத்தின் 2018 தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை "அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது, தன்னிச்சையானது மற்றும் விதி 14-ஐ மீறுவது" என்று கூறி, வெளிப்படைத்தன்மையற்ற அரசியல் நிதியுதவித் திட்டத்தை ரத்து செய்தது.

"ஒரு அரசியல் கட்சிக்கு நிதியுதவி செய்வது பற்றிய தகவல்கள் வாக்காளர்கள் வாக்களிக்கும் சுதந்திரத்தை திறம்பட பயன்படுத்துவதற்கு அவசியம்" என்பதை வலியுறுத்தி, இந்திய தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், தேர்தல் பத்திர திட்டத்தை செயல்படுத்துவதற்காக சட்டங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என்று கூறியது.

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் மற்றும் தகவல் அறியும் உரிமைக்கான அரசியலமைப்பு உரிமையை இந்தத் திட்டம் "மீறுகிறது" என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், தேர்தல் பத்திர வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவும், அரசியல் நிதியில் கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும் என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்கவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Nirmala Sitharaman Electoral Bonds
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment