நாக்பூரிலிருந்து மும்பைக்கு இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், விமானம் தரையிறங்குவதற்காக நெருங்கிக்கொண்டிருந்தபோது அவசரகால வழியின் கதவை அகற்ற முயன்றதாக விமான நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.29) தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பயணி மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக இண்டிகோ தனது அறிக்கையில், “பாதுகாப்பில் எந்த சமரசமும் இல்லை” என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், மற்ற விவரங்களை விமான நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை.
மேலும் அந்த அறிக்கையில், “விமானம் 6இ-5274ல் பயணி ஒருவர் அவசர கால கதவை திறக்க முயன்றார். இது தொடர்பாக சக பயணிகள் கேப்டனுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில் அந்தப் பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/