FIR against Shashi Tharoor and Journalists Tamil News : குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது ஏற்பட்ட போராட்டம் மற்றும் ஓர் விவசாயியின் இறப்பு குறித்து "தவறாக வழிநடத்தி" ட்வீட் செய்ததாகக் காங்கிரஸ் மக்களவை எம்.பி. சஷி தரூர் மற்றும் ஆறு பத்திரிகையாளர்களுக்கு எதிராக ஐந்து மாநிலங்களில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கும் பெயர்கள் தரூர் மற்றும் பத்திரிகையாளர்கள் ராஜ்தீப் சர்தேசாய், மிருனல் பாண்டே, ஜாபர் ஆகா, பரேஷ் நாத், அனந்த் நாத் மற்றும் வினோத் கே ஜோஸ். அவர்களில் பெரும்பாலோர் தேசத்துரோகம், கிரிமினல், மிரட்டல், பகைமையை ஊக்குவித்தல், பொது அமைதியை உடைத்தது, குற்றவியல் சதி, மத உணர்வுகளை மீறுதல் போன்ற ஐபிசி பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
கடந்த வியாழக்கிழமை நொய்டாவிலும் (உ.பி.), வெள்ளிக்கிழமை கூர்குவான் (ஹரியானா) மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலும் இந்த ஏழு பேருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதற்கு முன் மத்தியப் பிரதேசத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இதே போன்ற நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் சிரஞ்சீவ் குமார் மீது புகார் அளித்து டெல்லியில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த எஃப்.ஐ.ஆர் குறித்து குமார் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் போராட்டத்தின்போது நவரீத் சிங் எனும் விவசாயியின் மரணம் குறித்து குற்றம் சாட்டப்பட்டவர் போலி செய்திகளை பரப்பியதாக புகார் அளித்தார்.
போலீஸ் தடுப்பைத் தாக்கியதில் அவருடைய டிராக்டர் கவிழ்ந்ததில் நவரீத் சிங் தலையில் காயம் ஏற்பட்டு இறந்தார். பிரேதப் பரிசோதனையில் எந்தவொரு புல்லட் காயங்களும் இல்லையெனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் "குற்றம் சாட்டப்பட்டவர்" அன்றைக்கு சிங்கின் மரணம் குறித்து "கொலை" என்று அழைப்பதனால் போலி செய்திகளை ட்வீட் மூலம் பரப்பியதாகப் புகார் அளிக்கப்பட்டது.
“காவல்துறை துப்பாக்கிச் சூடு காரணமாக ஒரு விவசாயி போராட்டக்காரர் இறந்துவிட்டார் என்று தி கேரவன் தவறாக வழிநடத்திய தகவல்களால், ஐபி எஸ்டேட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலரும் பொதுமக்களைத் தவறாக வழிநடத்த முயற்சி செய்துள்ளனர் என்று எஃப்.ஐ.ஆரில் உள்ளது” என டி.சி.பி (மத்திய) ஜாஸ்மீத் சிங் ட்வீட் செய்துள்ளார்.
கூர்குவானில், ஜார்சா கிராமத்தில் வசிக்கும் பங்கஜ் சிங் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
"ஓர் தனி குடிமகனாக உள்ள உள்ளூர் குடியிருப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் நாங்கள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம். இதுவரை எந்த அரசியல் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. பெயரிடப்பட்ட ஏழு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருகிறது" என்று ஏசிபி (டிஎல்எஃப்) கரண் கோயல் கூறினார்.
தன்னுடைய புகாரில், சிங் தன்னை ஒரு "சட்டத்தை மதிக்கும் மற்றும் அக்கறையுள்ள குடிமகன்" என்றும் "பரவலான கலவரங்களால் மிகவும் வேதனைப்படுவதாகவும்" அடையாளப்படுத்துகிறார். எஃப்.ஐ.ஆரில் பெயரிடப்பட்ட ஏழு பேரின் "நடவடிக்கைகள்", "நாட்டின் பாதுகாப்பிற்குக் கடுமையான தப்பான எண்ணத்தை" ஏற்படுத்தியுள்ளன என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூரில், ராகேஷ் ஷெட்ட அல்லது ராகேஷ் பி எஸ் என்ற சமூக ஆர்வலர், ஏழு பேருக்கு எதிராக தேசத்துரோகம், குற்றவியல் சதி மற்றும் பிற குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தார்.
ஷெட்டியின் புகார் பரப்பனா அக்ரஹாரா காவல் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்டது.
புகார்தாரரின் கூற்றுப்படி, எஃப்.ஐ.ஆரில் பெயரிடப்பட்டவர்களின் ட்வீட்டுகள், தேசிய ஒருமைப்பாட்டை சேதப்படுத்துதல், வெவ்வேறு மத குழுக்களிடையே பகைமையை உருவாக்குதல் மற்றும் சமூகத்தில் பிளவுபடுத்துதல் போன்றவை சுட்டிக்காட்டுகின்றன.
மத்திய பிரதேசத்தில், "தனிப்பட்ட மற்றும் தொழில்முறை நன்மைக்காக" சரிபார்க்கப்படாத மற்றும் அங்கீகரிக்கப்படாத தகவல்களைக் கொண்டு விவசாயிகளைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டதற்காக தரூர் மற்றும் ஆறு பத்திரிகையாளர்களைப் பெயரிட்டு நான்கு தனித்தனி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
போபால், ஹோஷங்காபாத் மற்றும் பெத்துல் மாவட்டங்களில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒத்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த புகார்களின் எழுத்துப்பூர்வ விண்ணப்பங்களின் அடிப்படையில், ஹோஷங்காபாத்தில் சமர்ப்பிக்கப்பட்டவை இந்தியில் உள்ளது, போபால் மற்றும் பெத்துல் பதிவு ஆங்கிலத்தில் உள்ளன. நான்கு எஃப்.ஐ.ஆர்களிலும், டெல்லி காவல்துறையினர் இறந்த நவரீத்தை சுட்டுக் கொன்றது குறித்து ஒருங்கிணைந்த மற்றும் சரியான நேரத்தில் சதித்திட்டத்தில் இந்த ஏழு பேர் தவறான தகவல் பிரச்சாரத்தை ஆரம்பித்ததாகப் புகார் கூறியுள்ளனர்.
நொய்டாவில், "கலவரம் மற்றும் சேதம்" என்று உள்ளூர்வாசி அர்பிட் மிஸ்ராவின் புகாரின் பேரில், பிரிவு 20 காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"