உத்தரப் பிரதேசத்தில் கஹ்மர் கிராமத்தில் உள்ள மசூதியின் மீது ஏறி முழக்கங்களை எழுப்பிய அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம், ஏப்ரல் 2 ஆம் தேதி உள்ளூர்வாசிகள் ஊர்வலம் சென்றபோது நடந்ததாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
இரு பிரிவினர் இடையே பகைமையை தூண்டியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளதுஇருப்பினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை
இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், மசூதி மீது ஏறிய இளைஞர்கள் குழு, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று முழக்கங்களை கொடியசைத்தப்படி கூறுவதை காண முடிகிறது.
இதுகுறித்து காஜிபூர் எஸ்.பி., ராம் பதன் சிங் கூறுகையில், குற்றவாளிகளை அடையாளம் காண போலீசார் முயற்சித்து வருகின்றனர். இருப்பினும் கிராமத்தில் அமைதியான சூழல் நிலவுவதாக போலீசார் தெரிவித்தனர்.
காவல்துறையின் கூற்றுப்படி, கஹ்மர் கிராமத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஒவ்வொரு இந்து புத்தாண்டு தொடக்கத்திலும்‘ராம் கலஷ் யாத்திரை’மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். சுமார் 1.25 லட்சம் மக்கள்தொகை கொண்ட கஹ்மர் கிராமத்தில் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
கஹ்மர் காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி, டி.எல் சென் கூறுகையில், " ஏப்ரல் 2 ஆம் தேதி, கிராமத்தில் வசிப்பவர்கள் ராம் கலாஷ் யாத்திரையை மேற்கொண்டனர். ஊர்வலம் கிராமத்தில் ஒரு மசூதி அருகே சென்றபோது, சில இளைஞர்கள் மசூதி மீது ஏறி 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷங்களை எழுப்பினர். அப்போது, அங்கிருந்தவர்கள் திட்டியதால், அந்த இளைஞர்கள் உடனடியாக கீழே இறங்கினர். கூட்டத்தில் இருந்த ஒருவர் இந்த சம்பவத்தை கேமராவில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தததாக தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil