அகமதாபாத்தில் உள்ள கொரோனா மருத்துவமனையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு பெரும் தி விபத்தில் 5 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.
Advertisment
இந்த தீ விபத்து குறித்து குஜராத் முதல்வர் முதலமைச்சர் விஜய் ரூபானி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்துக்கான காரணங்களை கண்டறிய விசாரணையை நடத்துவதற்காக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கீதா சிங், முகேஷ் பூரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விசாரணை நடத்தி 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.
அகமதாபாத்தின் நவரங்க்புரா பகுதியில் உள்ள ஷ்ரே மருத்துவமனையின் ஐ.சி.யூ வார்டில் அதிகாலை 3:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Advertisment
Advertisements
Just in : As many as eight COVID patients which include five men and three women dead in a fire incident at Shrey Hospital in Ahmedabad today morning. Fire started in ICU department around 3:30 am @IndianExpress
தீ விபத்து ஏற்பட்டது மருத்துவமனை நிர்வாகம் அங்கிருந்த நோயாளிகளை வெளியேற்ற முயற்சித்தது. அதே நேரத்தில், தீ விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், மருத்துவமனையில் அங்கே இருந்த பல நோயாளிகளை போலீஸாரும் தீயணைப்புத் துறையினரும் மீட்டனர்.
“இந்த தீ விபத்தில் மொத்த 8 பேர் உயிரிழந்தனர். அதிகாலை 3:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இப்போது தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல நோயாளிகள் மீட்கப்பட்டனர். சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள” என்று அகமதாபாத் நகரத்தின் பி டிவிஷன் உதவி காவல் ஆணையர் எல்.பி.சலா கூறினார்.
Saddened by the tragic hospital fire in Ahmedabad. Condolences to the bereaved families. May the injured recover soon. Spoke to CM @vijayrupanibjp Ji and Mayor @ibijalpatel Ji regarding the situation. Administration is providing all possible assistance to the affected.
பிரதமர் நரேந்திர மோடி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் அகமதாபாத் மேயர் பிஜால் படேல் ஆகியோருடன் நிலைமை குறித்து பேசியதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிர்வாகம் அனைத்து உதவிகளையும் அளித்து வருவதாகவும் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"