உத்தரபிரதேச மாநிலம் பிரயாகராஜில் உள்ள மஹாகும்பமேளா க்ஷேத்திரத்தின் சங்கராச்சாரியார் மார்க்கில் உள்ள செக்டார் 18-ல் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. பல தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர், மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
ஆங்கிலத்தில் படிக்க: Fire breaks out at Mahakumbh, second blaze since start of congregation
இந்த தீ விபத்தில் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்ததாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காக் சௌக் காவல் நிலைய ஆய்வாளர் யோகேஷ் சதுர்வேதி கூறுகையில், “ஓல்ட் ஜிடி சாலையில் உள்ள துளசி சௌராஹா அருகே உள்ள ஒரு முகாமில் தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும், தீயணைப்பு வீரர்கள் தீயை பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தீயணைப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நடவடிக்கையை மேற்பார்வையிட்டனர்.” என்று கூறினார்.
ஜனவரி 13-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ம் தேதி வரை தொடரும் மகா கும்பமேளாவில் இது இரண்டாவது தீ விபத்து ஆகும். ஓலை வேயப்பட்ட குறைந்தது 40 குடிசைகள், 6 கூடாரங்கள் எரிந்து நாசமாயின. ஆனால் ,பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.