இந்தியாவின் இரண்டாவது பழமை வாய்ந்த மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் தீ விபத்து

Fire Break out at Calcutta Medical College and Hospital : நோயாளிகள் உயிருக்கு பயந்து சாலையில் தஞ்சம்

Fire in Kolkata Medical College and Hospital,
Fire in Kolkata Medical College and Hospital, Fire Break out at Kolkata Medical College

Fire in Kolkata Medical College and Hospital : இன்று காலை 7.50 மணியளவில் கொல்கத்தாவில்  இயங்கி வரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  இதுவரை வந்த தகவலில் யாருக்கும் எந்தவிதமான காயங்களும் உயிர்ச் சேதாரங்களும் ஏற்படவில்லை என்று அறிவித்திருக்கிறார்கள். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க.

பழமையான மருத்துவமனை

இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொல்கத்தாவில் இருக்கும் மிகப் பழமையான மருத்துவமனைகளில் ஒன்று. 1835ம் ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு காலத்தில் கட்டப்பட்ட இந்த கல்லூரி 1948ல் விரிவுப்படுத்தப்பட்டது. இதற்கு அருகில் தான் கொல்கத்தா பல்கலைக் கழகம் மற்றும் பிரசிடென்சி கல்லூரி அமைந்துள்ளது.

இன்று காலை சரியாக 7 மணி 58 நிமிடங்களில் மருத்துவமனைக் கட்டிடத்தில் இருக்கும் மருந்தகத்தில் தீ பிடித்தது. தீ பிடித்த சிறிது நேரத்தில் அந்த தீ மளமளவென மற்ற பக்கங்களுக்கு பரவ ஆரம்பித்தது. இந்த விபரம் அறிந்த தீயணைப்புத் துறையினர் வேகமாக விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனை

நோயாளிகள் பாதுகாப்பாக மீட்பு

அங்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளில் தீ பிடித்த சில மணித்துளிகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் சலீன் பாட்டில்களை கையில் பிடித்துக் கொண்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறியது பதிவாகியுள்ளது.

வெளியில் வந்த நோயாளிகள் சிறிது நேரம் மருத்துவமனை வளாகத்தில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் மருத்துவமனையின் பாதுகாப்பான வார்டுகளுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சாலைகளில் தங்க வைக்கப்பட்டிருந்த நோயாளிகள்
சாலைகளில் தங்க வைக்கப்பட்டிருந்த நோயாளிகள்

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Fire in kolkata medical college and hospital 10 fire brigade at the spot

Next Story
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!chennai weather
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com