மும்பை பாந்த்ராவில் உள்ள நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேங்க்ஸ்டர் ரோஹித் கோதாராவின் பயோமெட்ரிக் விவரங்களை கடந்த 3 வாரங்களாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) தேடி வருகிறது.
Advertisment
கடந்த ஆண்டு ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி கொலையிலும், மே 2022-ல் பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலையிலும் ரோஹித் கோதாராவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கோதாரா சிறையில் இருக்கும் கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் நெருங்கிய கூட்டாளி என்றும் இவர் இங்கிலாந்தில் இருந்து அனைத்து நடவடிக்கைகளையும் கையாள்வதாக கூறப்பட்டுள்ளது. "சம்பந்தப்பட்ட அதிகாரத்தின் உதவியுடன், எளிதாக நாடு கடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளதால், அவரை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்த என்.ஐ.ஏ விரும்புகிறது" என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோதாரா டெல்லியில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் துபாய்க்கு தப்பிச் சென்றார். என்.ஐ.ஏ விசாரணையின் போது லாரன்ஸ் பிஷ்னோய் தமக்கு பல்வேறு மாநிலங்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறினார். உத்தரப் பிரதேசம் (தனஜய் சிங்), ஹரியானா (கலா ஜத்தேரி), ராஜஸ்தான் (ரோஹித் கோதாரா) மற்றும் டெல்லி (ரோஹித் மோய் மற்றும் ஹாஷிம் பாபா) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சிறையில் உள்ள கேங்க்ஸ்டர்களுடன் தமக்கு ‘பிசினஸ் மாடல்’ இருப்பதாக கூறினார்.
‘பிசினஸ் மாடல்’ முறையில், இவர்கள் டோல் பாதுகாப்பு மற்றும் பங்கு சதவீதத்திற்கான ஒப்பந்தங்களை எடுத்துக்கொள்கிறார்கள். மேலும், அவர்கள் தங்கள் எதிரிகளை அழிக்க விரும்பினால், அவர்கள் ஒருவருக்கொருவர் துப்பாக்கி, துப்பாக்கி சுடும் ஆட்களை வழங்குவார்கள் என்றும் ஒருவர் கூறினார்.
பிஷ்னோய் தனது விசாரணையின் போது, 1998-ம் ஆண்டு பிஷ்னோய் சமூகத்தால் புனிதமானதாகக் கருதப்படும் இரண்டு கரும்புலிகளை வேட்டையாடிய வழக்கில் கானை பழிவாங்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
கானின் வீட்டிற்கு வெளியே 2 பேர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதில் ஒருவரான கலு என்கிற விஷால், மார்ச் 2 அன்று குர்கானைச் சேர்ந்த புக்கியான சச்சின் கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ரோஹ்தக் என்ற இடத்தில் சச்சின் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு கோதாரா இந்தக் கொலைக்குப் பொறுப்பேற்றார்”என்று தகவல்கள் தெரிவித்தன.
கோதாரா பிகானேர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் மீது கொலை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உட்பட 35-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“