குன்னூர் அருகே புதன்கிழமை நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்பு தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தார். இந்த விபத்தில் பிபின் ராவத் உடன் அவருடைய மனைவி மதுலிகா ராவத் மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகள் பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டெர் உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.
பாதுகாப்பு தலைமை தளபதி பிபின் ராவத் ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது காலத்தில் மிகவும் பிரபலமான வீரர்களில் ஒருவரக இருந்த தளபதி பிபின் ராவத், ஜனவரி 1, 2020 அன்று பாதுகாப்புப் படைகளின் (சிடிஎஸ்) தலைமை தளபதியாக (சிடிஎஸ்) பொறுப்பேற்றார் - நாட்டின் முதன்மையான ராணுவ அதிகாரி பதவியான பாதுகாப்பு தலைமை அதிகாரி பதவியை பிபின் ராவத் வகித்தார்.
பாதுகாப்பு தலைமை தளபதி அதிகாரியாக அவர் கடற்படை, விமானப்படை மற்றும் இராணுவத்திற்கு தலைமை தாங்கும் மற்ற நான்கு நட்சத்திர இராணுவ அதிகாரிகளை விட உயர்ந்த இடத்தைப் பிடித்தார். பாதுகாப்பு அமைச்சகத்தில் இராணுவ விவகாரத் துறைக்கு தலைமை தாங்கினார். அதுவரை பாதுகாப்புத் துறையுடன் இருந்த பொறுப்புகளை குறைத்தார். படைகள் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் பாதுகாப்பு அமைச்சரின் முதன்மை ராணுவ ஆலோசகராக இருந்தார்.
பிபின் ராவத் புதன்கிழமை பிற்பகல் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ மூத்தஅதிகாரி பிரிகேடியர் எல் எஸ் லிட்டெர் உள்ளிட்டோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
இந்திய ராணுவத்தின் 27வது தளபதியாக, டிசம்பர் 31, 2016 முதல் டிசம்பர் 31, 2019 வரை, ராவத் ஒரு இனிமையான நேராகப் பேசும் அதிகாரியாக அறியப்பட்டார். எதிர்கால போர்களுக்காக பொருத்தமானதாக இருக்க அவர் இராணுவத்தை மீண்டும் ஒழுங்கமைக்கவும், அதை உறுதியான படையாகவும் மாற்றுவதற்கான ஆய்வுகளைத் தொடங்கினார். இவரால் தொடங்கப்பட்ட மற்றொரு சீர்திருத்தம், ஒருங்கிணைந்த போர்க் குழுக்களை உருவாக்குவது. அவை பெரிய படைப்பிரிவுகளைப் போல, சுறுசுறுப்பான மற்றும் போர் அமைப்புகளில் தன்னிறைவு பெற்றதாக இருக்கும்.
பிபின் ராவத் 1978-ம் ஆண்டு டிசம்பரில் லெவன் கோர்க்கா ரைபிள்ஸின் ஐந்தாவது பட்டாலியனில் IMA-ல் பட்டம் பெற்ற பிறகு, அவரது குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். ராணுவத்தின் துணைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற அவரது தந்தை லெப்டினன்ட் ஜெனரல் லக்ஷ்மண் சிங் ராவத் தலைமையிலான பட்டாலியன் இதுவாகும். அவருடைய தாத்தாவும் ராணுவத்தில் இருந்தார்.
சிம்லாவில் உள்ள செயின்ட் எட்வர்ட்ஸ் பள்ளி மற்றும் தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர் ராவத், வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியிலும் ராணுவ தேசிய பாதுகாப்பு கல்லூரியிலும் படித்தார்; அமெரிக்காவில் உள்ள ஃபோர்ட் லீவன்வொர்த்தில் உள்ள ராணுவ மற்றும் பொதுப் பணியாளர்கள் படிப்பிலும் கலந்து கொண்டார்.
பிபின் ராவத் தனது 41 ஆண்டுகால இராணுவ வாக்கையின்போது கிழக்கில் உள்ள சரியான கட்டுப்பாட்டுக் கோடு, ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரு ராணுவ பிரிவு மற்றும் வடகிழக்கில் ஒரு கார்ப்ஸ் ஆகியவற்றில் ஒரு ராணுவ பட்டாலியனுக்கு கம்மாண்டராக இருந்தார். அவர் லெப்டினன்ட் ஜெனரலாக மேற்குக் ராணுவத்திற்கு தலைமை தாங்கினார். பின்னர் துணை இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
பிபின் ராவத் ஒரு மூத்த ராணுவ அதிகாரியாக, அவர் காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஒரு பன்னாட்டுப் படைக்கு தலைமை தாங்கினார்.
உத்தம் யுத் சேவா பதக்கம், அதி விஷிஸ்ட் சேவா பதக்கம், யுஷ் சேவா பதக்கம், சேவா பதக்கம், வி.எஸ்.எம்., ராணுவ தலைமை தளபதி என இரண்டு முறை பாராட்டும் பெற்றவர்.
பாதுகாப்பு தலைமை தளபதியாக “ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு உரிய பயன்பாட்டை உறுதி செய்தல், கூட்டுத் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் சேவைகளின் கொள்முதல், பயிற்சி மற்றும் செயல்பாடுகளில் அதிக ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல்" மற்றும் "ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை உருவாக்கும்போது அதிகபட்சமாக உள்நாட்டு மயமாக்கலை எளிதாக்குதல், முப்படைகளுக்கான ஒட்டுமொத்த பாதுகாப்பு கையகப்படுத்தும் திட்டம் ஆகியவை அவரது முதன்மைப் பாத்திரங்களாகும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.