9 விமானங்கள்… 56.5 லட்சம் டோஸ்: இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ‘பறந்தது’ கோவிஷீல்ட் தடுப்பு மருந்து

First Consignment of covid vaccine : நாடு முழுவதும் கோவிட்-19-க்கான தடுப்பூசி போடும் பணி இம்மாதம் 16-ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு தெரிவித்தது

By: Updated: January 12, 2021, 02:12:50 PM

இன்று புனே விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட், கோ ஏர், இண்டிகோ விமானங்கள் மூலம் 56.5 லட்சம் ‘கோவிஷீல்ட்’ டோஸ் தடுப்பு மருந்தின் முதல் தொகுப்பு  நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.

இன்று அதிகாலை, இந்திய சீரம் மையத்தின் கோவிஷீல்ட் தடுப்பு மருந்து, ஸ்பைஸ்ஜெட்டின் எஸ்ஜி 8937 விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பப்பட்டது. 1,088 கிலோ எடையுள்ள 34 பெட்டிகளில் தடுப்பு மருந்து அனுப்பி வைக்கப்பட்டது. ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, கோ.ஆர் ஜி 8-904  விமானம் தடுப்பு மருந்துடன் புனேவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. சென்னையில், தேனாம்பேட்டையில் உள்ள மருந்துகள் வைப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

“இன்று, ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட், கோ. ஏர், இண்டிகோ என 9 விமானங்கள் மூலம் புனேவில் இருந்து 56.5 லட்சம் டோஸ் தொகுப்பு மருந்தை டெல்லி, சென்னை, கொல்கத்தா, குவஹாத்தி, ஷில்லாங், அகமதாபாத், ஹைதராபாத், விஜயவாடா, புவனேஸ்வர், பாட்னா, பெங்களூரு, லக்னோ, சண்டிகார்  போன்ற நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்” என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

விமானங்களில் குளிர்ப் பதனக்கிடங்குகள் மூலம்  கோவிட் -19 தடுப்பூசியை கொண்டு செல்வதற்கான வழிகாட்டுதல்களை சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ)  கடந்த வாரம் வெளியிட்டது. பெரும்பாலான நகரங்களுக்கு பயணிகள் விமானம் மூலமே கொரோனா தடுப்பு மருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. விஜயவாடா, ஷில்லாங் போன்றவைகளுக்கு சரக்கு விமானங்களில் அனுப்பி வைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

“ஸ்பைஸ்ஜெட் விமானம் இந்தியாவின் முதல் கோவிட் தடுப்பு மருந்தை எடுத்துச் சென்றதில் மகிழ்ச்சியடைகிறேன். 1088 கிலோ எடையுள்ள 34 பெட்டிகள் புனேவில் இருந்து டெல்லிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் 8937 இல் கொண்டு செல்லப்பட்டது.  இன்று முழுவதும் குவஹாத்தி, கொல்கத்தா, ஹைதராபாத், புவனேஸ்வர், பெங்களூரு, பாட்னா மற்றும் விஜயவாடா உள்ளிட்ட பல்வேறு இந்திய நகரங்களுக்கு தடுப்பு மருந்தை கொண்டு செல்ல இருக்கிறோம்”  என்று ஸ்பைஸ்ஜெட் தலைவரும் நிர்வாக இயக்குநருமானஅஜய் சிங் கூறினார்.

ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட ட்விட்டர் குறிப்பில்  “தடுப்பு மருந்து பணியில் ஏர் இந்தியா நிறுவனம் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. இன்று புனேவில் இருந்து விமானத்தில் சுமார் 700 கிலோ எடையுள்ள 2,76,000 தடுப்பூசி டோஸ் தொகுப்பு மருந்தை அகமதாபாத் கொண்டு செல்ல இருக்கிறோம்” என்று தெரிவித்தது.

 

 

 

முன்னதாக, 11 மில்லியன் டோஸ் கோவிஷீல்ட்  தடுப்பு மருந்தை கையப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு இந்திய சீரம் மையத்துடன்  நேற்று ஒப்பந்தம் செய்தது.

நாடு முழுவதும் கோவிட்-19-க்கான தடுப்பூசி போடும் பணி இம்மாதம் 16-ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு தெரிவித்தது. முதற்கட்டமாக,  முன்களப்பணியாளர்கள் மூன்று கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதலாவது கட்டத்தில் இந்த 3 கோடி பேருக்கும் தடுப்பூசி போடுவதில் எந்தச் செலவையும் மாநில அரசுகள் ஏற்க வேண்டியதில்லை என்றும், இதை மத்திய அரசே ஏற்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

 


மேலும், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோயால் பாதிக்கப்பட்ட 27 கோடி பேருக்கு இந்த தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அரசு கூறியது.

அடுத்த மூன்று மாதங்களில் குறைந்தது 70 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி கே பால் தெரிவித்தார்.

 

 

கோவாக்ஸின், கோவிஸீல்டு என்ற இரண்டு தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் மற்றும் தேசிய முறைப்படுத்துவோரால் அனுமதி வழங்கப்பட்டது.

அஸ்ட்ரா ஜெனிகா /ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் இந்திய சீரம் மையம் ‘கோவிஷீல்டு’ மருந்தை தயாரித்தது. பாரத் பயோக் டெக் நிறுவனம், கோவாக்சின் என்ற தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) மற்றும் புனேவில் உள்ள தேசிய வைராலாஜி மையத்துடன் இணைந்து உருவாக்கியது.

இந்திய சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, முதல் 100 மில்லியன் டோஸ்களுக்கு ரூ.200க்கு கொரோனா டோஸ் என்ற அளவில் மத்திய அரசுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:First consignment of covid vaccine covishield shipped from pune

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X